10.ஆம் வகுப்பு தமிழ்
ஒரு மதிப்பெண் வினாத்தாள் தொகுப்புகள்
அன்பார்ந்த பத்தாம் வகுப்பு மாணவ செல்வங்களுக்கும் தமிழாசிரியப் பெருமக்களுக்கும் வணக்கங்கள். தற்போது திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அரசுப் பொதுத்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் 15 வினாக்கள் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுதல் வகையில் கேட்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே!! கடந்த ஆண்டு இருந்த பாட புத்தகத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு 7 இயல்களாக இந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே இருந்த வினா வகைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நமது தமிழ்ப்பொழில் வலைதளத்தில் அவ்வப்போது பதிவுகள் வெளியிடப்படுகின்றன. அவ்வகையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அவர்கள் ஒரு மதிப்பெண் வினா விடைகளில் முழு மதிப்பெண் பெரும் வகையிலும் பொதுத் தேர்வு வினாத்தாள் அடிப்படையில் முதல் 15 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு படித்து திருப்புதல் செய்யும் வகையிலும் 10 தேர்வு தொகுப்புகள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளன. அவ்வப்போது திருப்புதல் செய்து மாணவர்கள் தங்களைச் சோதித்து அறிய இந்த தேர்வுத் தொகுப்புகள் மிகவும் பயன்படும். மாணவர்கள் இதைப் பயன்படுத்தி பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வினா விடைகளில் முழுமதிப்பெண் பெற தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வாழ்த்துகள்.
பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி