|
மாதிரி பொதுத்தேர்வு-4
(2025-2026) 10.
ஆம் வகுப்பு
தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி
– I
(மதிப்பெண்கள்:15)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15×1=15
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை
ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ)
குலைப்பெயர் ஆ) மணிப்பெயர் இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர்
2.
கல்வியும் , செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும்
ஈகையும் செய்வதாகக் கூறியவர்
அ) இளங்கோவடிகள் ஆ) திருவள்ளுவர் இ) கம்பர் ஈ)
சேக்கிழார்
3. ”திராவிட நாடு” என்ற இதழின் ஆசிரியர்
அ) தந்தை
பெரியார் ஆ) கலைஞர் மு.கருணாநிதி இ)
அறிஞர் அண்ணா ஈ) பாவலரேறு
4. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு - இத்திருக்குறளில் வந்த சீர் மோனைகள்
அ) கருவி-அருவினை ஆ) கருவியும்-
காலமும் இ) காலமும்- செய்கையும் ஈ) மாண்டது -அமைச்சு
5. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் எனக் கூறும் நூல் எது?
அ)
தென்றல் விடு தூது ஆ) சிலப்பதிகாரம் இ) மணிமேகலை ஈ) புறநானூறு
6. வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) கமலாயன்
ஆ) கண.முத்தையா இ) கலைஞர் கருணாநிதி ஈ) பாரதியார்
7. நன்மொழி என்பது
அ)
பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
8. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
9. பரிபாடல் அடியில் விசும்பில் இசையில்' என்னும் தொடர்
எதனைக் குறிக்கிறது?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும்
பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
10. ”இஸ்மத் சன்னியாசி” என்ற பாரசீகச் சொல்லுக்கு----என்று பொருள்
அ) தூய
ஆவி ஆ) தூய யோகி இ) தூய துறவி ஈ) தூய கர்மா
11. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது.
அ)
சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
பாடலைப்
படித்துப் பின் வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
ஓங்கு தண் பணைசூழ் நீப
வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் கண்டாய்
ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன்
செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம்
வைத்த அருளினால் வந்தேம் என்னா.
12. நீபவனம் என்பதன் பொருள்
அ) பாலைவனம் ஆ) நீண்ட வனம் இ) மலர்வனம் ஈ) கடம்பவனம்
13. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
அ) நீதி
வெண்பா ஆ) கம்பராமாயணம் இ) திருவிளையாடற்
புராணம் ஈ) மணிமேகலை
14. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) பரஞ்சோதி
முனிவர் ஆ) குலசேகர ஆழ்வார் இ) செய்குதம்பிப் பாவலர் ஈ)
இளங்கோவடிகள்
15. கண்டாய் என்பது-----வினைமுற்று
அ) வியங்கோள்
ஆ) முன்னிலை பன்மை இ) முன்னிலை
ஒருமை ஈ) ஏவல்
பகுதி – II (மதிப்பெண்கள்:15)
பிரிவு -1
4×2-8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
16. விடைகளுக்கேற்ற
வினா அமைக்க
அ) தலை வாழை
இலையில் நம் விருந்தினருக்கு உணவளிப்பது மரபாகக் நம் கருதப்படுகிறது.
ஆ) சொற்பொழிவுகளைக்
கேட்பதன் மூலமாக ம.பொ.சி. இலக்கிய அறிவு பெற்றார்.
17. உலகத்தமிழ்
மாநாடு குறித்து கா.அப்பாதுரையார் கூறியது யாது?
18. வறுமையின்
காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன் மானத்தை எள்ளி நகையாடுவது
குறித்துக் குறளின்
கருத்து என்ன?
19. காய்மணியாகு
முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் உவமை உணர்த்தும் கருத்துயாது?
20. செங்கீரை
ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக குமரகுருபரர் கூறுகிறார்?
21. ”விடும்” என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2-10
22. மார்கழித்திங்களில்
விரைந்து சென்ற சாரைப்பாம்பைப் பார்த்து அண்ணன் தம்பிகள்
பயந்தனர். அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைத் தொகைநிலைத் தொடர்கள்
எனக்குறிப்பிடுக
23. வாகைத்திணையை
விளக்குக.
25. கொடுக்கப்பட்டுள்ள
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ)
தான்-தாம் ஆ) சிறு-சீறு.
24. தணிந்தது-பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
26. தொகைச்
சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.
அ) நானிலம் ஆ)
அறுசுவை
27. பொருத்தமான
சொற்களைக் கொண்டு நிரப்பு,
கை தட்டலே
கவிஞர்க்கு----அவையோரின் ஆர்வமே அவருக்கு---
(விருந்து வருந்து, விருது அரிது)
28. கலைச்
சொற்கள் தருக.
அ. Monarchy ஆ.
Homograph.
பகுதி – III (மதிப்பெண்கள்:18)
பிரிவு -1
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29. தனித்து
உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது.
இப்பண்பு
இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
30. உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடையளி
காற்றுள்ள போதே மின்சாரம்
எடுத்துக் கொள் எனும் புதுமொழிக்கு வித்தாகிறேன். புதுப்பிக்கக் கூடிய ஆற்றல்
வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை
குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன். உலகக் காற்றாலை மின்
உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் தமிழ்நாடு
முதலிடம் வகிக்கிறது என்பதும் எனக்குப் பெருமையே.
அ) இப்பத்தியில்
குறிப்பிடப்படும் புதுமொழி என்ன?
ஆ) உலகக் காற்றாலை
மின் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் பெற்றுள்ளது?
இ) காற்றைப்
பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது ஏற்படும் நன்மை யாது?
31. வாய்மை
பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
பிரிவு -2
எவையேலும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
32. எவையெல்லாம்
அறியேன் என்று கருணையண் கூறுகிறார்?
33. சேர,
சோழ,பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம்
வழி விளக்குக.
34. அடிபிறழாமல்
எழுதுக.
“மாற்றம்” எனத் தொடங்கும் பாடல் (அல்லது) “நவமணி” எனத் தொடங்கும் பாடல்
பிரிவு -2
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35. மருத நிலத்துக்குரிய
கருப்பொருள் ஆறனை எழுதுக.
36. குற்றம்
இலனாய்க் குடி செய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. - அலகிட்டு
வாய்பாடு தருக.
37. பொருளல் லவரைப்
பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். - இக்குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக
பகுதி - IV
(மதிப்பெண்கள்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி.
5×5=25
38. அ.
மன்னர் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்?
விளக்கம் தருக.
(அல்லது)
ஆ. வள்ளுவம்
சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்
வழி விளக்குக
39. அ.
உங்கள் கிராமத்துக்கு நூலக வசதி வேண்டி பொதுநூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக்
கடிதம் வரைக
(அல்லது)
ஆ. நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள்
கட்டுரையை வெளியிட
வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுது.
41. 15, கோயில்
தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில் வசிக்கும் இளங்கோவன் என்பவரின்
மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில் 10. ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்
11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு,
தமிழ் வ்ழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக்
கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
42.அ.
புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும்,
உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி
எழுதுக.
(அல்லது)
ஆ. மொழி
பெயர்க்க.
Respected ladies and gentleman. I am
Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about
our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and
civilization about two thousand years ago. Tamils who have defined grammer for
language have also defined grammer for life. Tamil culture is rooted in the
life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England
and Worldwide. Though our culture is very old,it has been updates consistently.
We should feel proud about our culture. Thank you one and all.
பகுதி - V
(மதிப்பெண்கள்: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3×8=24
43.
காற்று பேசியதைப்போல , நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு
பேசுக
(அல்லது)
ஆ. உங்களுக்குப்
பிடித்த/நீங்கள் படித்த அறிஞர் ஒருவரின் வாழ்க்கை நிகழ்வைத் தன்வரலாறாக
மாற்றி எழுதுக
44. அ.
"கல்வியே அனைத்து துன்பத்தையும் அறுத்தெறியும் வலிமையான் ஆயுதம்”
என்பதை புதிய நம்பிக்கை சிறுகதை வழி விளக்குக
(அல்லது)
ஆ. எம். எஸ்.
சுப்புலட்சுமி, பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய
பணிகள் குறித்து எழுதுக.
45. அ.
குமரிக்கடல் முனையையும், வேங்கட
மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை,
தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு,
பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து,
அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக்
கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ. நீரின்றி
அமையாது உலகு' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்பு:
விசும்பின் துளி -விண்ணின் மழைத்துளி -வான் சிறப்பு -வள்ளுவர் வாய்மொழி -மரம் வளர்ப்போம் - பசும்புல்
நுனி- இயற்க்கையைப் போற்றுவோம்-
முடிவுரை
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி