இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி
வினாத்தாள் (2025-2026)
9.ஆம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள்
அ) பலவுள்
தெரிக:-
8X1=8
1) கல்வி
இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்
2)
சரியான கூற்றினைத் தெரிவு
செய்க.
அ) வில்லுப்பாட்டு
ஓர் இலக்கிய வடிவம்
ஆ) தமிழகத்தின்
முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி
அ). அ
மட்டும் சரி ஆ) அ.ஆ
இரண்டும் சரி இ) அ.
ஆ இரண்டும் தவறு ஈ) ஆ மட்டும் சரி
3) 'இரு' என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?
அ) பட்டம் இருக்கிறது. ஆ)
பட்டம் செய்திருக்கிறேன்.
இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது.
4) பல்லவர்
காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று.
அ) மாமல்லபுரம் ஆ)
பிள்ளையார் பட்டி இ) திரிபுவளயீரேசுவரம் ஈ) தாடிக்கொம்பு
5) இரு
பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு -
அ) தனி சிறப்பு ஆ)
தைத்திங்கள் இ)
வடக்குப் பக்கம் ஈ)
நிலாச்சோறு
பாடலைப்படித்து விடையளி:
மன்னிய
முதுவெயில் வளைப்ப வாய்வவெரீஇ
இன்னிளம்
குருளைமிக்கு இனைந்து வெம்பிடத்
தன்னிழல்
தங்கவேதாய் மமைமீதுற
நன்னரில் வலியசெந் நாய்உய
ங்குமே
6) உயங்குதல் என்னும் சொல்லின்
பொருள் -
அ) சுற்றுதல் ஆ) வருந்துதல் இ) ஓடுதல் ஈ) ஆடுதல்
7) எதுகைச் சொற்களைத் தேர்க.
அ) மன்னிய,முதுவெயில்
ஆ) இன்னிளம் ,குருளை
இ) மன்னிய, இன்னிளம் ஈ) நன்னரில், தங்க
8. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்
அ. நீதிவெண்பா ஆ. இராவண
காவியம் இ.
சிலப்பதிகாரம் ஈ. திருவிளையாடற் புராணம்
ஆ) குறு வினா (5
மட்டும்) (14 கட்டாய வினா) 5X2=10 9. நடுகல்
என்றால் என்ன?
10.
இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
11.
சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
12.
துணைவினைகளின் பண்புகள் இரண்டினை எழுதுக.
13. பிழை
நீக்கி எழுதுக :
அ. மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
ஆ. நல்ல தமிழுக்கு
எழுதுவோம்
14. ”உடைத்து” என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக
15. கலைச்சொல்
தருக; அ) Cave temple ஆ) Volunteer
இ) சிறு
வினா (4 மட்டும்) (21
கட்டாய வினா)
4X3=12
16. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக..
17.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக்குறிப்பிடுக.
18
குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
19
எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம்
மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக
20.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண் மைக்(கு)
ஆழி எனப்படு வார். - இக்குறளில் பயின்று வந்த அணியை விளக்குக
21. ”ஒன்றறிவதுவே” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக
ஈ) 5 மதிப்பெண் வினாக்கள்:
(2 மட்டும்)
2X5=10
23.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
24.
உங்கள்
பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப் படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு
நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
25.
மொழிபெயர்க்க.
1. Strengthen the body
2. Love your Food
3. Thinking is great
4. Walk like a bull
5. Union is Strength
(அல்லது)
26. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
உ) கட்டுரை
வடிவில் விடை தருக: 1X8=8
26) அ.
தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப்
பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக
(அல்லது)
ஆ. நூலகம்,
நூல்கள்ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில்வெளிப்படுகின்ற கருத்துகள்யாவை?