8 TH STD TAMIL SECOND MID TERM MODEL QUESTION PAPER

 

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்

8. ஆம் வகுப்பு தமிழ்                            மதிப்பெண்கள்: 50                  கால அளவு: 1.30 மணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:                                                                 6×1=6

1) காட்டிலிருந்து வந்த_____ கரும்பைத்தின்றன.

அ) முகில்கள்   ஆ) முழவுகள்  இ) வேழங்கள்   ஈ) வேய்கள்

2. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை______.

அ) கல்வெட்டுகள்  ஆ) செப்பேடுகள்   இ) பனையோலைகள்   ஈ) மண்பாண்டங்கள்

3. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.

அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்

4. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும்.

அ) சொல்லின்  ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்

5. அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

அ) அ + களத்து     ஆ) அக் + களத்து     இ) அக்க+ அளத்து    ஈ) அம் + களத்து

6. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பருத்திஎல்லாம்  ஆ) பருத்தியெல்லாம்   இ) பருத்தெல்லாம்  ஈ) பருத்திதெல்லாம்

கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                          4×1=4

7. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ---

8. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்றஊர் 

9. சேரர்களின் நாடு   -----  எனப்பட்டது.   

10. பின்னலாடைநகரமாக ------ விளங்குகிறது.

நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:  (வினா எண்: 16 கட்டாய வினா)  

11. 'தமிழ்நாட்டின் ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

12. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்டஅழிவு யாது?

13 . உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்

14. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?                                                                          

15. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

16. “ இதனை”  எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக               

மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி க்க:                                                   3×2=6

17. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?  18.  வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

19. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

அ. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் ஆ. கடமையைச் செய்விழைவுத்தொடர்

20. சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

அ. சான்றோர் எனப்படுபவர் ----- களில் சிறந்தவர் ஆவர். 

ஆ. ஆற்று வெள்ளம் ----பாராமல் ஓடியது.

21. கலைச்சொல் தருக.   அ. Flute   ஆ. Horn

மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி                                               3×3=9

22. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.

23. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்டநிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

24. சொற்பொருள் பின்வொரு நிலை அணியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

25. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி க்க:                                                               2×5=10

26. . திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனைசெய்கிறார்?                                  (அல்லது)

உழவுத்தொழில் சிறக்கஇன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

26. இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

27. கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக

விரிவான விடையளிக்க:                                                                                                   1×7=7

24. . கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக    (அல்லது)

. காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக


 



கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை