இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -மாதிரி வினாத்தாள் (2025-2026)
ஆறாம் வகுப்பு
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்:
50
அ)பலவுள்தெரிக:
5X1=5
1. கதிர்
முற்றியதும் ------ செய்வர்.
அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல்
2. பிறரிடம்
நான் ----- பேசுவேன்.அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல்
3. உதித்த
என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
அ) மறைந்த ஆ) நிறைந்த இ) குறைந்த ஈ) தோன்றிய
4. பழையன
கழிதலும் - --- புகுதலும் அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான
5. ஆராயும்
அறிவு உடையவர்கள்---சொற்களைப் பேசமாட்டார்கள்
அ) உயர்வான ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய
ஆ) பிரித்து எழுதுக
6. நன்றியறிதல் 7. பொருளுடைமை 2X1=2
இ)
சேர்த்து எழுதுக 8. பொங்கல்+அன்று 2X1=2
ஈ) பொருள் தருக. 10. பார் 11. பண்
2X1=2
உ) சொற்றொடரில் அமைத்து எழுதுக
3X1=3
12. பொங்கல் 13. செல்வம் 14. பண்பாடு
ஈ) நான்கு
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:
4X2=8
15. நாம்
யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?
16. நமது
வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
17. போகிப்பண்டிகை
எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
18 நாட்டுப்புறப் பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?
19. எப்படி
உண்பது விரும்பத்தக்கது அன்று?
17. நாம்
எத்தகைய சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
உ) மூன்று
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக: 3X2=6
20. உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கார்வேம் எனல். - எதுகை, மோனைச்
சொற்களை எடுத்து எழுதுக.
21. ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம்
அசைவிலா
உடையான் உழை. - இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
22. மொழிக்கு
இறுதியில் வாரா மெய்யெழுத்துக்கள் யாவை?
23. சொல்லின்
இடையில் மட்டுமே வரும் எழுத்துகள் எவை?.
ஊ) இரண்டு
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக: 2X3=6
24. காணும்
பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
25. தாய் தன்
குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
26. உங்கள்
நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக
எ. அடிமாறாமல்
எழுதுக:
1X2=2
27. ”சொல்லுக” எனத்
தொடங்கும் திருக்குறளை
அடி மாறாமல் எழுதுக.
ஏ. விடையளிக்க
2X2=4
28. தொகைச்சொல்லை விரித்து எழுதுக அ. முக்கனி . ஆ. முத்தமிழ்
29. தொடரை
நீட்டி எழுதுக அறிந்து கொள்ள விரும்பு (எதையும், காரணத்துடன், தெளிவாக)
ஐ.
விரிவானவிடையளிக்க:
2X5=10
30. அ.
பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்மொன்ன சிறப்பு நிகழ்ச்சிகளை
ஏற்பாடு செய்வீர்கள்? (அல்லது) ஆ. ஆசாரக்கோவை
கூறும் எட்டு வித்துகள் யாவை?
31.அ.
அறிவுசார் அவ்வையார் எனும் நாடகத்தை சிறுகதை வடிவில் சுருக்கமாக
எழுதுக (அல்லது)
ஆ. பொங்கல்
திருநாள் என்ற தலைப்பில் கட்டுரை வரைக
.png)