10.ஆம் வகுப்பு தமிழ்
விரிவானக்கட்டுரைகள்
10.ஆம் வகுப்பு – தமிழ் (வினா எண்: 44 அ மறும் ஆ)
இயல்-1
1) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும்,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
முன்னுரை:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்
ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர்
இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு
காண்போம்
விடாது பெய்த மழை:
கடுமையான வெயில் மறைந்து,இமை நேரத்தில் புழுக்கம்
ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது மீண்டும் மீண்டும் மழை
பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.இடி
முழக்கம் மின்னல் ஒளி அதேசமயம் விரைவும் பளுவும் கொண்ட மோதல் கப்பலையும் உலுக்கியது.
தள்ளாடிய
கப்பல் (தொங்கான்):
மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று
கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி
வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்” என்று கத்துகிறான். பாண்டியன்
எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல்
தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..
பயணிகளின் தவிப்பு:
மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். கப்பலின்
இருபுறமும் தேயிலை பெட்டிகளும், புகையிலை சிப்பங்களும் மிதந்தன.பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல்
கூத்து நீண்ட நேரம் தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி,
தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும்
முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு
முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான். அதற்கு கப்பித்தான்
இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.
கரையைக்
காணுதல்:
ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக
மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி
நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள்
கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர கப்பல்கள்
கரை முழுவதும் நின்றிருந்தன.
முடிவுரை:
சுமத்ரா பயணிகள்
துடுப்பு படகில் இறங்கிப்போய் நடை பாலத்தில் ஏறி நடந்து சுங்க அலுவலகத்திற்குச் சென்று பயண அனுமதிச்
சீட்டினை நீட்டினர்.”தமிரோ?” என்று
ஜப்பானிய அதிகாரி கேட்டார்.” யா மஸ்தா” இன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி
சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும்
புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின.
இயல்-1
2. 'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
பிரும்மம்
முன்னுரை:
இயற்கையோடு
இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப
உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப்
பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்'
என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.
புதிதாகக் கட்டிய வீடு:
இச்சிறுகதையில்
வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால்
வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள்
அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.
குடும்ப உறுப்பினர்களின்
விருப்பம்:
v குடும்பத்தின்
பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.
v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது
விருப்பத்தைத் தெரிவித்தார்.
v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம்
இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.
அப்பாவின் முடிவு:
அனைவரும்
தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து
அவர் நட்டார்.
முருங்கை வீட்டின் அங்கமானது:
v நாளுக்கு
நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக
கிளை,
இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற
மகிழ்ச்சி அடைந்தனர்.
v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை
அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
மீண்டெழுந்த முருங்கை:
ஒரு
நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர்
சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த
மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.
முடிவுரை:
முருங்கை
என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல
உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல்
நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.
இயல்-3
3) அன்னமய்யா
என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை
கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
முன்னுரை:
”அகனமர்ந்து
செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்” - குறள் 84.
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்:
சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.”இவன்
துறவியோ? பரதேசியோ?” என்ற
ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அருகில்
சென்று பார்த்து அவன் ஓர் இளைஞன் என்பதை உறுதி செய்து கொண்டார். அவனது முகம்
பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை
காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று
பார்த்தார்.அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?”
என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து
நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன்
பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான்.
இளைஞனின்
பசியைப் போக்கிய அன்னமய்யா:
”விருந்து
புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”
குறள்- 82
ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு
சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும்
தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது
அன்னமய்யாவின்
மனநிறைவு:
“பொங்கியது
அன்னமய்யாவின் அன்பு மட்டுமன்று இளைஞனின் ஜீவ ஊற்றும்தான்”
புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த
இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.S
அன்னமய்யாவின்
பெயர் பொருத்தம்:
”அன்பில்
சிறந்தவர் அன்னமய்யா! அனைவரும் பசியின்றி இருக்க
வேண்டுமென அவருக்கு நல்ல எண்ணமய்யா!”
இளைஞன்
எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?”
என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று
கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று
கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார்.
இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி
பார்த்துக்கொண்டான்.”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.அந்த
இளைஞன் தன்னுடைய சொந்தப் பெயர்” பரமேஸ்வரன்” என்றும், புதுப் பெயர்”மணி”
என்றும் அன்னம் ஐயாவிடம் கூறினான்.
சுப்பையாவிடம்
அழைத்துச் செல்லுதல்:
சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த
கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்.
அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண
செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான்
முடிவுரை:
”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள” - திருக்குறள்
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா
அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து
மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.
இயல் - 4
4)
”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது வெற்றிவேற்கை.மேரியிடமிருந்து படிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை விவரிக்க.
முன்னுரை:
“கற்கை நன்றே
கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக்
காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு
ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்
தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி.
அவரைப் பற்றி இங்கு காண்போம்.
மேரியின்
குடும்பச்சூழல்:
பருத்திப்பூ எடுத்த அந்தப் பூவுக்குத் தெரியும் நிச்சயம் ஒருநாள் மணம் வீசுவோம் என்று”
மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள்.
ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும்
குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு
சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக்
கூப்பிடுவாள்.
மேரிக்கு
நடந்த துன்பம்:
” நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் அதைப் படிக்க முடியாது”
மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச்
செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு
விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில்
படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தை
கையில் எடுத்து அதைப் புரட்டத்தொடங்குகிறாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத்
தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாது” என்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில் பேசினர்.அந்த
நிகழ்வு மேரியின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிடுகிறது.
மேரியின்
மனநிலை:
”கேடில்
விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை”
அந்த நாள் முழுவதும் அவள் துயரத்துடன் இருந்தாள்.” நான்
படிக்க வேண்டும். நான் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நான் எழுதவும் படிக்கவும்
கற்றுக் கொள்ளப் போகிறேன்” என்று தனக்குள்
கூறிக்கொண்டாள்.பள்ளிக்குச் செல்ல விரும்பும் எண்ணத்தைப் பற்றி தனது தந்தையிடம்
கூறினாள்.” இங்கே நமக்கென்று பள்ளிக்கூடம் இல்லையே?” என்று அவர் கூறினார்.
தூண்டுகோல்-
மிஸ்வில்சன் :
”சுடர்விளக்காயினும்
தூண்டுகோல் தேவை”
ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக
கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து நின்றாள். பிறகு
பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும்
அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து
முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.
சிறப்பாகக்
கல்விகற்ற மேரி:
மேரி நாள்தோறும் தன்
இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக்
கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில்
மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.
முடிவுரை:
மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால்,
எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில்
சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில்
தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை இட்டு அதையே பெரும்
சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.
இயல் - 5
5) தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிற போது, ஏற்படும் கலைஞனின் மன உணர்வுகளைப் பாய்ச்சல் என்ற கதையின் மூலம் விளக்குக
முன்னுரை:
ஊருக்காக ஆடும் கலைஞன்
தன்னை மறப்பான் தன் கண்ணீரை
மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது அவன்
கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.
அனுமார்:
”போர்க்களம்
நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது”
நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம்
கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல்
வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து
மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு
ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான்.
அனுமாரின்
நெருப்பாட்டம்:
“தீப்பிடத்தது
அனுமாரின் வாலில் மட்டுமன்று அழகுவின் அளவுகடந்த
ஆர்வத்திலும்தான்”
திடீரென்று
மேளமும்,நாகசுரமும் வேகமாக
ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம்
திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார்
பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்
புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அழகுவின்
உதவி:
சிறிது நேரம் கழித்து தீ எரிவது
மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை இவனைப்
போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள்
அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற
இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து
ஆட்டம் முடிந்தது
அழகுவின் ஆட்டம்:
“பெயரில்
மட்டும் அழகில்லை அவன் விரும்பிய கலையிலும்தான்
அழகு
அனுமார் கழற்றி வைத்திருந்த
துணி, சலங்கை,முகத்திற்குப்
போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார் போல
ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக்
கொண்டான். ஆனால் அனுமார் தூணில் சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”.
அவனும் நன்றாக ஆடினான்.
அனுமார்
அடைந்த மகிழ்ச்சி:
அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த
வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று, வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.
முடிவுரை:
“என்னலே, எனக்கே
பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்
கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக
ஆட்டிக்கொண்டிருந்தான்.
இயல்-6
6.எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
முன்னுரை:
விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு
எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை
தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல
சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி:
இசைச் சூழலில் வளர்ந்த
எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில்
கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில்
நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும்
பாடியுள்ளார்.
பாலசரசுவதி:
இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு
பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள
"சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை
நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும் நடந்த
அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த
இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன
மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.
இராஜம்
கிருஷ்ணன்:
சிக்கல்களைப் பற்றி
கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல்
பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப்
புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி
உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக
வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின்
சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:
காந்தி நடத்திய
ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர்.
"உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர
ஏற்பாடு செய்தார்.
மதுரை
சின்னப்பிள்ளை:
இவர் மகளிரின் வாழ்வு
மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை
எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.
வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின்
"பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின்
"அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின்
பொதிகை விருதையும் பெற்றவர்.
முடிவுரை:
பெண்கள்
நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு
நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து
நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய
சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்
இயல்-7
7) கிடைப்பதற்கரிய
திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
இராமானுசர் நாடகம்
முன்னுரை
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே
மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு ஒரு முறை
பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தண்டும் கொடியுமாக:
திருமந்திரத் திருவருள் பெறத்
தண்டும், கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள்
என்னும் செய்தி, பூரணரால் திருவரங்கத்திற்கு
அனுப்பப்பட்டது. அதனால் இராமானுசர் , கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட
பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது
பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,
ஆசிரியரின் கட்டளை:
பூரணர் மூவரையும்
வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் "திருமகளுடன் கூடிய நாரயணனின்
திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன்
சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக் கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.
திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:
திருக்கோட்டியூர் சௌம்ப
நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத்
தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து
மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில்
மூன்று முறை கூறினார்கள்.
குருவின் சொல்லை மீறுதல்:
குருவின்
(பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய
மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும்
கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.
குருவின் ஆசி:
இராமானுசரின் பரந்த
மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி
பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக
அளித்தார்.
முடிவுரை
யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்' என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர்
இராமானுசர், தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல
முன்வந்த பெருமகளார்
