10 TH STD TAMIL SECOND MID TERM MODEL QUESTION PAPER

 

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2025-2026)

10.ஆம் வகுப்பு                               தமிழ்                                                50 மதிப்பெண்கள்

) பலவுள் தெரிக:-                                                                                                      8X1=18

1) ”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்மாலவன் குன்றமும் வேலவன்  குன்றமும் குறிப்பது முறையே

அ) திருப்பதியும், திருத்தணியும் ஆ) திருத்தணியும், திருப்பதியும்

இ) திருப்பதியும், திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும் 

2) "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

அ) கருமை    ஆ) பச்சை    இ) பழுப்பு    ஈ) நீலம்

3) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------

அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

4) தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?      

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?      

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

5) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

பாடலைப்படித்து விடையளி:

    பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

   பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

   கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"  

6) காருகர் என்னும் சொல்லின் பொருள் -         

அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்

7) எதுகைச் சொற்களைத் தேர்க.                   

அ) பகர்வனர், திரிதரு ஆ) பட்டினும், கட்டு  இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்

8. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்

அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம்  இ. சிலப்பதிகாரம்  ஈ. திருவிளையாடற் புராணம்

) குறு வினா     (5 மட்டும்)    (14 கட்டாய வினா)                                                              5X2=10                                                                                                                                                   9. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக                                               

10. . உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்'

      காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?                                                                                                       11. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று.தருக.

12. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக

13. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக

    மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும்.                                                                                               

14. ”வினை” என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக

15. கலைச்சொல் தருக; அ) Agreement  ஆ) Monarchy                                                       

) சிறு வினா (4 மட்டும்)          (21 கட்டாய வினா)                                                              4X3=12

16.“தலையைக்கொடுத்தேனும் தலைநகரைக்காப்போம்”இடம் சுட்டிப்பொருள் விளக்குக.

17. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.                                                                                                                             

18 அலகிட்டு வாய்பாடு எழுதுக:

     பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

      நாகரிகம் வேண்டு பவர்                                   

19 மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

20. சொற்பொருள் பின்வரு நிலையணியை விளக்குக

21. ”தண்டலை” எனத்தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிமாறாமல் எழுதுக

) 5 மதிப்பெண் வினாக்கள்:  (2 மட்டும்)                                                                        2X5=10

23. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

24. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக

25. . நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெரு, வடக்கு வீதி, சிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதேபகுதியில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவுக.

(அல்லது)

26. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.                                

) கட்டுரை வடிவில் விடை தருக:                                                                                       

26) . போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் -நாடகக் கலைஞர் -திரைக் கலைஞர் -இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.          

(அல்லது)

. எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

DOWNLOAD

👉 100 மதிப்பெண் வினாத்தாளைப் பதிவிறக்க

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை