இரண்டாம் இடைப்பருவத்தேர்வு-மாதிரி
வினாத்தாள்-2
10.ஆம்
வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1. கூற்று 1: போராட்டப் பண்புடனே
வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2: அவருக்குள் இருந்த
கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ)
கூற்று 1 மற்றும் 2 சரி
2. "மையோமர
கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம்
3. தூக்குமேடை என்னும்
நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான்,
கலைஞர்
என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது
வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
4. சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி இ)
முன்பனி ஈ)
இளவேனில்
5. அனைவரின்
பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர்
முகம் -------
அ) வெளுத்தது ஆ) கருத்தது இ)
சிவந்தது ஈ) கறுத்தது
6. மூவேந்தர்களால்
நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழ் –இடம்பெற்ற தமிழெண்கள்
அ) ரு அ ஆ) ௩ ௪ இ)
௪
௩ ஈ) உ
அ
7. திருப்பதியும் திருத்தணியும் குறிப்பது முறையே----
அ) வேலவன் குன்றம், மாலவன் குன்றம் ஆ) நெடுவேள் குன்றம், திருப்பரங்குன்றம்
இ) மாலவன் குன்றம், வேலவன் குன்றம் ஈ) நெடுவேள் குன்றம் , மாலவன் குன்றம்
8. சரியான அகரவரிசையைத்
தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண். ஏர். மாடு ஆ)
மண்,
மாடு, ஏர். உழவு
இ) உழவு, ஏர், மண், மாடு ஈ)
ஏர். உழவு,
மாடு, மண்
9. தமிழினத்தை ஒன்றுபடுத்தும்
இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ)
கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
10. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக்
கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ)
சோழ நாடு,
பாண்டிய
நாடு
11. இருநாட்டு அரசர்களும்
தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
பகர்வனர் திரிதரு
நகர வீதியும்;
பட்டினும் மயிரினும்
பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக்
காருகர் இருக்கையும்"
12. மோனைச் சொற்களைத்
தேர்க.
அ) பகர்வனர், கட்டு ஆ) வீதியும், நூலினும் இ)
பருத்தி,
காருகர்
ஈ) பகர்வனர், பட்டினும்
13. காருகர் என்னும்
சொல்லின் பொருள் -
அ) நெய்பவர் ஆ) சிற்பி இ)
ஓவியர் ஈ) உமணர்
14. நுண்வினை - இலக்கணக்குறிப்பு.
அ) வேற்றுமைத்தொகை
ஆ) வினைத்தொகை இ)
உம்மைத்தொகை ஈ) பண்புத்தொகை
15. செய்யுள்
இடம்பெற்றுள்ள நூல்
அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம் இ. சிலப்பதிகாரம் ஈ. திருவிளையாடற் புராணம்
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)
16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) தானியங்கள் விற்கும் தெரு
கூலக்கடைத்தெரு எனப்பட்டது.
ஆ) ம.பொ.சி சொற்பொழிவுகள் கேட்பதன்மூலம்
இலக்கிய அறிவு பெற்றார்.
17) சரயு
ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
18) தமிழ்மொழிக்குக்
கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக
19) பின்வருவனவற்றுள்
கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக. (பெரிய கத்தி,இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த
ஊதியம்,
வில்லும்
அம்பும்)
20) வறுமையிலும் படிப்பின்மீது
நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக
21) ”குன்றேறி” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22) புறத்திணைகளில் எதிரெதிர்த்
திணைகளை அட்டவணைப்படுத்துக.
23) பொதுவியல் திணை பற்றிக்
குறிப்பெழுதுக
24)
கொண்ட
- பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
25)
கலைச்சொல்
தருக: அ. Agreement , ஆ. Aesthetics
26)
கலைஞர்
எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது
எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச்
சொற்றொடராக மாற்றுக)
27) கீழ்வரும்
தொடர்களில் பொருந்தாத முதல்,
கருப்பொருளைத்
திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில்
உழுதனர்.
முல்லைப் பூச்
செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
28)
தொடரைப்
படித்து விடையைக் கண்டறிக
அ. கல் சிலை ஆகுமெனில்,நெல் -- ஆகும். ஆ. குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து-
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) "தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
30)
கலைஞர்
குழந்தை உள்ளம் கொண்டவர் என்பதைப் பாட்த்தின்வழி விளக்குக.
31) பத்தியைப்
படித்துப் விடை தருக:-
சிற்றூர் மக்களின்
வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை
நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப்
போக்குகின்றன;
சமுதாய
நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன.
பழந்தமிழ் மக்களின் கலை,
அழகியல், புதுமை ஆகியவற்றின்
எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.
அ. பழந்தமிழ் மக்களின்
எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?
ஆ. நிகழ்கலைகளின் பயன்கள்
இரண்டினை எழுதுக.
இ. நிகழ்கலைகள் எப்பகுதி
மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
32)
மருத
நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
33)
பொருல்செயல்
வகை குறித்து வள்ளுவரின் கருத்துகளை எழுதுக.
34) அ) வெய்யோன்---எனத்தொடங்கும் ம் பாடலை
எழுதுக. (அல்லது)
ஆ) ”அள்ளல்” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக
பிரிவு-3 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) தொழுதகை யுள்ளும் படையொடு ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
36) 'கடற்கரையில்
உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில்
உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின்
திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும்
எழுதுக.
37)
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
– அலகிட்டு வாய்பாடு எழுதுக
பகுதி-4 (மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38) அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க
வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
ஆ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற
தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
39)
நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில்
“ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்
“ என்ற
உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் ஊரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் உங்களைக்
கவர்ந்த ஒரு புத்தகத்தின் சிறப்பு குறித்து உங்களது நண்பனுக்குக் கடிதம் எழுதுக
40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41) 15, கோயில் தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில்
வசிக்கும் இளங்கோவன் என்பவரின் மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில்
10.
ஆம்
வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு, தமிழ் வ்ழியில் சேர
விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை
சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
42.அ) கல்வெட்டுகளைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால்
இயன்ற செயல்களைப்பட்டியலிடுக.
(அல்லது)
ஆ) மொழி பெயர்க்க:
Among
the five geographical divisions of the Tamil country in Sangam literature, the
Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a
farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the
fertility of the soil.Among these elements of nature,sunlight was considered
indispensible by the ancient Tamils.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43) அ) நாட்டு விழாக்கள் விடுதலைப்
போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு
பக்க அளவில் 'மாணவப் பருவமும்
நாட்டுப் பற்றும்'
என்ற
தலைப்பில் மேடை உரை எழுதுக.
(அல்லது)
ஆ) போராட்டக் கலைஞர் பேச்சுக்
கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு
கட்டுரை ஒன்று எழுதுக.
44) அ. பாய்ச்சல் கதையின்
மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக
(அல்லது)
ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன்.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,
சின்னப்பிள்ளை
ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
45) அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
(அல்லது)
ஆ) உங்கள்
ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள்
கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை தொகுத்து எழுதுக
வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்
