காலாண்டுண்டுப் பொதுத்தேர்வு- செப்டம்பர்
2025, இராணிப்பேட்டை மாவட்டம்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
10X1=10
வி எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
அ.
வைப்பு |
1 |
2.
|
ஆ.
ஆழி |
1 |
3.
|
ஆ.
தந்தை பெரியார் |
1 |
4.
|
அ.
தார் |
1 |
5.
|
ஆ.
கிழிந்தெழில் |
1 |
6.
|
இ.
நல்வாழ்வுக்காக |
1 |
7.
|
இ. நடுவுநிலைமை |
1 |
8.
|
அ, இகழ்வாரை |
1 |
9.
|
ஆ. கல்வி |
1 |
10.
|
ஆ. அகம்பாவம் |
1 |
ஆ)
பொருத்துக
4X1=4
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
11. க், ங்
- நாவின் முதல், அண்ணத்தின் அடி 12. ச், ஞ்
- நாவின் இடை, அண்ணத்தின் இடை 13. ட், ண்
- நாவின் நுனி, அண்ணத்தின் நுனி 14. த், ந்
- நாவின் நுனி,
மேல்வாய்ப்பல்லின் அடி |
|
எவையேனும் ஆறு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க
5X2=10 |
||
15 |
தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது |
2 |
16 |
ஒரு
சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி ஆகும். |
2 |
17 |
தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல்
பொருளின் ஓவிய வடிவமாகவேஇருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். |
2 |
18 |
திங்கள், ஞாயிறு,
மாமழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது. |
2 |
19 |
பட்டமரம்
வெந்து கரிய நிறம் பெற்றதால் தனது அழகை இழந்தது. |
2 |
20 |
வேர்,பட்டை,இலை,பூ,கனி |
2 |
21 |
தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால்,
அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது. |
2 |
22 |
மன்னிக்கத்தெரிந்தவர்
உள்ளம் |
2 |
23 |
இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை
நெட்டுரு (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று
திரு.வி.க. கூறுகிறார் |
2 |
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க 4X2=8 |
||
24 |
ü வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
2 |
25 |
v
ண, ன, ந v
ல, ழ, ள v
ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி
எழுத்துகள் ஆகும். |
2 |
26 |
பொருள்
முற்றுப் பெற்றவினைச்சொற்களைமுற்றுவினைஅல்லது வினைமுற்று என்பர். |
2 |
27 |
க, இய, இயர், அல் |
2 |
28 |
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது
மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய
உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின்
பிறப்பு என்பர். |
2 |
29 |
பிறிது மொழிதல் அணி: உவமையை
மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும். எ.கா. கான முயல்எய்த
அம்பினில் யானை பிழைத்தவேல்
ஏந்தல் இனிது. விளக்கம்: காட்டு முயலை
வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட,
யானைக்குக் குறிவைத்துத் தவறிய மூவலை ஏந்துவது பெருமை தரும்
என்னும் உவமையின் மூலம் பெரிய முயற்சியே பெருமைதரும் என்னும் கருத்தை
விளக்குவதால் இக்குறளில் பிறிதுமொழிதல் அணி |
2 |
அடிமாறாமல்
எழுதுக
4+2=6 |
||
30 |
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே! ஏழ்கடல்
வைப்பினுந்தன்மணம் வீசி இசை கொண்டு வாழியவே! எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே! |
4 |
31 |
விலங்கொடு மக்கள்
அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர் |
2 |
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க 4X4=16 |
||
32 |
ü
நெடிலைக் குறிக்க ஒற்றைப்
புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுகின்றது. ü
ஐகார உயிர்மெய்யைக் குறிக்க
எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில்
இணைக்கொம்பு ( ை) பயன்படுகின்றது. ü
ஔகார உயிர்மெய்யைக் குறிக்க
எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில்
கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது. |
4 |
33 |
v பட்ட மரம், தான்
வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது. v நிழலையும் மணம்
மிகுந்த மலர்களையும் தருவதற்காக மரத்தின் இலைகள் கூரைபோல் விரிந்திருந்தன. v அவை வெந்து கரிய
நிறம் பெற்றதை எண்ணி வருந்தியது. v மரம் என்னும்
பெயர் மாறி,
கட்டை
என்னும் பெயரைப் பெற்றது. v அதன் உடையாகிய
பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தது. v சிறுவர்கள்
அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது என்பன எல்லாம் ஏட்டில் எழுதிய பழங்கதையாக
முடிந்து விட்டன |
4 |
34 |
ü சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய
மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். ü எளிமையாகக்
கிடைக்கக்கூடிய காய்கறிகள்,
கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள். ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
4 |
35 |
v
கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில்
தன்னுடைய திறமையைக் காட்டவேண்டும். v
ஆத்திரம் கண்ணை மறைத்து விடும்
என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்துஅமைதி காக்க வேண்டும். v
பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க
வேண்டும். v
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கல் போன்றது. இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
|
4 |
36 |
v
தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை
என்னும் பழைய நிலையை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம்
தேடுவோம் v
கலைகள் யாவும் தாய்மொழி வழி
மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும்
காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார். |
4 |
37 |
ü இல்வாழ்வு என்பது
வறியவர்களுக்கு உதவி செய்தல். ü பாதுகாத்தல்
என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். ü பண்பு எனப்படுவது
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். ü அன்பு எனப்படுவது
உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். ü அறிவு எனப்படுவது
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். ü செறிவு
எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். ü நிறைஎனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல்
காத்தல். ü நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய
தண்டனைவழங்குதல். ü பொறுமைஎனப்படுவது
தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். |
4 |
விரிவான விடையளி 2X6=12 |
||
38 அ |
v மனிதன் தனக்கு எதிரேஇல்லாதவர்களுக்கும்
தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். v தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். v அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு
உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும்
அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என
உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை" என்பர். v இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின்
ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன. |
5 |
39 |
அ) §
வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில்
காவிய இன்பமும் ஒன்று, அதுவே முதன்மையானது என்றும் கூறலாம். §
நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர
வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில்
இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. §
இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு §
இயற்கை இன்பக்கலம் கலித்தொகை §
இயற்கை வாழ்வில்லம் திருக்குறள் §
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் §
இயற்கைத் தவம் சிந்தாமணி §
இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம் §
இயற்கை அன்பு பெரியபுராணம் §
இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக
திருவாய் மொழிகள் §
இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன
உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது. ஆ) v உலகம்
ஐம்பூதங்களால் ஆனதாகும். v பண்டைய கால
மக்கள் இயற்கையோடு வாழ்ந்தனர். v பழந்தமிழர்கள்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர் v அவர்கள்
நிலத்திற்கு ஏற்ப தொழிலையும் செய்து வந்தனர். |
5 |
எவையேனும் ஒன்றுக்கு மட்டும்
விடையளிக்க
1X8=8 |
||
40 |
அ) v ஒரு குறிஞ்சிப் புதரில்
வாழ்ந்த பச்சை வெட்டுக்கிளி,
வாயாடித்தனமாக
ஒரு மாலை நேரம் தன்னைக் காண வந்த கூரன் சருகுமானை பேச அழைக்கிறது. v ஆனால் கூரன்
பித்தக்கண்ணு என்ற உயிர்வாழ்க்கைக்கு ஆபத்தான மிருகத்திடமிருந்து தப்பி ஓடி, மரத்தடியில்
ஒளிகிறது. v பித்தக்கண்ணு
வந்து வெட்டுக்கிளியிடம் கூரனைப் பற்றி கேட்க, வெட்டுக்கிளி பரவசத்தில்
கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே தவறவசமாக குதிக்கிறது. v இதைக் கவனித்த
பித்தக்கண்ணு அந்த இடத்துக்கு சென்று, புனுகுப் பூனையின் வாசனையை மட்டுமே உணர்ந்து
கிளம்புகிறது. v உயிர் தப்பிய
கூரன் வெட்டுக்கிளியின்மீது கோபம் கொண்டு எச்சரிக்கையாக 'இனிமேல் இப்படி
நடந்தால் மிதித்து நசுக்கி விடுவேன்' எனக் கூறி ஒளியின்றிப் போகிறது. v அதன் பிறகு, வெட்டுக்கிளி
எப்போதும் பயத்தில் வாழத் தொடங்கியது. அதனால் தான் இன்றும் வெட்டுக்கிளிகள்
ஓரிடத்தில் நிலைத்திருக்க முடியாமல் குதிக்கின்றன. ஆ) ஓரெழுத்து ஒருமொழி உயிர் வரிசையில் ஆறு
எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில்
ஐந்து எழுத்துகளும், க, ச. வ என்னும்
வரிசைகளில் நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக
நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார் நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார். கலைச்சொல் வடிவம் பூ, கா என்ற ஒரு இரு
ஓரெழுத்து ஒருமொழியை இணைத்து பூங்கா என வழங்கினர். ஆ,மா
இரண்டையும் ஆமா என்னும் சொல் உருவாக்கப்பட்டு காட்டுப் பசுவைக் குறித்தது.
மாநிலம்,மாநாடு, மாஞாலம்
இச்சொற்களில், மா என்பது பெரிய என்ற பொருளை தந்தது. இக்கால வழக்கு ஈ என்ற சொல் ஒலிக்குறிப்பைக்
காட்டும்; பூச்சி வகையைச் சுட்டும், வழங்குதல்
என்னும் பொருளை உணர்த்தும். வெளிப்படை ஆகும். "ஈ என்று பல்லைக் காட்டாதே”
என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ. சூ. சே. சை. சோ என்பவை இக்காலத்தில் வழங்கும் சொற்களாகும். |
8 |
கட்டுரை ஒன்றுக்கு மட்டும் விடையளிக்க 1X8=8 |
||
41 |
அ) நூலகம் முன்னுரை– நூலகத்தின்
தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை முன்னுரை: “நூலகம் அறிவின் ஊற்று” ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்” என்று
கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள்
குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம். நூலகத்தின்
தேவை: “
சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான
நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக
உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே,
இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது . நூலகத்தின்
வகைகள்: மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும். நூலகத்தில்
உள்ளவை: மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள்,
சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது
நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். படிக்கும் முறை: நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த
முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும். முடிவுரை: “என்னை தலைகுனிந்து படித்தால், உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்” என்று
புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும்
தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. ஆ) உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
8 |
கடிதம் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்க
1X8=8 |
||
42 |
அ) உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ) விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள்
எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற
சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக
அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய
அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க
கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
|
8 |
அனைத்து வினாக்களுக்கும் விவிடையளி
8X1=8 |
||
43 |
ஆறு
ஆறுகளை வழியில் பார்த்தான் |
1 |
44 |
அ.
பேசு ஆ. செல் |
1 |
45 |
அ.
பறந்தது ஆ. கோலம் |
1 |
46 |
என்
வீட்டுத்தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின |
1 |
47 |
திருக்குறள்
அறம், பொருள்,இன்பம் என்னும் முப்பால் பகுப்புக்கொண்ட்து |
1 |
48 |
மேய்ந்தது |
1 |
49 |
ஏரி
– நீர்நிலை , ஏறி – மேலே ஏறுதல் |
1 |
50 |
அ.
மொழிபெயர்ப்பு ஆ. நிறுத்தற்குறி |
1 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி