காலாண்டுப்பொதுத்
தேர்வு-2025 தருமபுரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
இ. திணை வழுவமைதி
|
1 |
2.
|
ஆ. கிண்கிணி |
1 |
3.
|
ஆ. மணிப்பெயர்
வகை |
1 |
4.
|
ஆ. இரவு |
1 |
5.
|
ஆ. வான்வெளியில்,
பேரொலியில் |
1 |
6.
|
இ. அவர் |
1 |
7.
|
இ. மரபு வழுவமைதி |
1 |
8.
|
ஈ. காற்றின்
பாடல் |
1 |
9.
|
ஆ. 3 1 4 2 |
1 |
10.
|
இ. 70 |
1 |
11.
|
இ. காசி நகரத்தின்
பெருமையைப் பாடும் நூல் |
1 |
12.
|
ஆ. பரிபாடல் |
1 |
13.
|
ஈ. கீரந்தையார் |
1 |
14.
|
இ. கரு
- உரு |
1 |
15.
|
அ. யுகம் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
16 |
வாருங்கள், நலமா?,
நீர் அருந்துங்கள் |
2 |
17 |
உரிய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
18 |
·
செந்நெல் ·
வெண்ணெல் ·
கார்நெல் ·
சம்பா மற்றும் உள்வகைகள் ·
மட்டை |
2 |
19 |
v மொழிபெயர்ப்பால் புதிய
சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும். v பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம். |
2 |
20 |
சிலம்பு , கிண்கிணி,
அரைஞாண், அரைவடம், சுட்டி,
குண்டலம் |
2 |
21 |
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ. நிழல் தரும் மரத்தை
வளர்ப்பது நன்மை பயக்கும். ஆ. சிறந்த கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும். |
2 |
23 |
அ. ஒரு சோறு பதம் ஆ. மூன்று
நாளுக்கு |
2 |
24 |
கிளர்ந்த
- கிளர் + த் (ந்) + த் + அ கிளர்
- பகுதி த்- சந்தி த்
’ந்’ ஆனது விகாரம் த்
- இறந்தகால இடைநிலை அ- பெயரெச்ச விகுதி |
2 |
25 |
அ. வளைகாப்பு ஆ. நிலக்காற்று அ. ஆட்டு மந்தை ஆ. பழக்குலை |
2 |
26 |
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும்
சிலப்பதி காரமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி
யுணர்ந்தின் புறுவோமே” |
2 |
27 |
அ. மாலையில்
மலைமீது ஏறினான் ஆ. பள்ளி விட்டதும் வீட்டுக்குச் சென்றான் |
2 |
28 |
ü தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை ü தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
ü தொலைக்காட்சி
வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
பெரிதும் உதவுகிறது. ü வணிக விளம்பரங்களை
பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது. ü புதுவகையான சிந்தனைகள்
மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது. |
3 |
30 |
அ. வீரமற்றோர்,
புறமுதுகிட்டோர்,சிறார், முதியோரை எதிர்த்து போர் செய்யாமை ஆ. தம்மைவிட
வலிமை குறைந்தாரோடு போர் செய்யாமை இ. தமிழர் போர்
அறம் |
3 |
31 |
ü பகிர்ந்துண்ணும் வழக்கமே
குறைந்து விட்டது. ü நெருங்கிய உறவினர்களை
மட்டுமே விருந்தினர்களாகக் கருதுகின்றனர். ü வாயிலை அடைக்கும்
முன் உணவு வேண்டி யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்த தமிழர் இன்று
வாயிலை அடைத்த பிறகே உண்னுகின்றனர். |
3 |
பிரிவ-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü
பழமையான
நறுங்கனி ü
பாண்டியன்
மகள் ü
சிறந்த
நூல்களை உடைய மொழி ü
பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி ஆகியனவற்றை
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுகிறார் |
3 |
|
33 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு
சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள்
ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும்
ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும்
ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை
ஆடுக |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
1.
திணை வழுவமைதி "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது
திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக்
கொள்ளப்பட்டது. 2.
பால் வழுவமைதி "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப்
பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப்
பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது. 3.
இட வழுவமைதி மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம்
கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப்
படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும். 4.
கால வழுவமைதி குடியரசுத் தலைவர் நாளை
தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை
வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக்
கருதுவதில்லை. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை
நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம். 5. மரபு வழுவமைதி "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்"- பாரதியார். குயில் கூவும் என்பதே மரபு, குயில்
கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு
வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
3 |
36 |
ü
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம், உவம
உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v உவம உருபு
– போலும்
இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று. |
3 |
37 |
அ. அடுக்குத்தொடர் ஆ. வினையெச்சத்தொடர் இ. வினைமுற்றுத்தொடர் |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38
அ |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன்
இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின்
தவறைச் சுட்டிக்காட்டினான் தன்
தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் (அல்லது) ஆ) திரண்ட
கருத்து (காற்றைப் பாராட்டல்) : பாதி மலர்ந்த மலரைப்போலவும், பாதி விடிந்த காலைப் பொழுதைப்போலவும் உள்ள காற்றே, நீ இளந்தென்றலாக வரும் போது நதிகளை வருடியும், செடி
கொடிகளை வருடியும் வருகிறாய். உன்னைப் போலவே தமிழும் அனைவராலும்
விரும்பத்தக்கதாய் இருக்கிறது. பொதிகை மலையில் தோன்றி, மதுரையிலே
சங்கத்தில் வளர்ந்த அழகிய தமிழை ஒத்த காற்றே என்கிறார் கவியரசர். மோனை
நயம்: மலர்ந்தும் - மலராத; வளரும் - வண்ணமே போன்ற சொற்களில் முதலெழுத்து
ஒன்றி வந்து மோனை நயத்துடன் இப்பாடல் சிறக்கின்றது. எதுகை
நயம்: நதியில்
- பொதிகை; விடிந்தும் - விடியாத போன்ற சொற்களில் இரண்டாம்
எழுத்து ஒன்றி வந்து எதுகை நயம் எழிலுடன் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. முரண்
நயம்: மலர்ந்தும்
× மலராத; விடிந்தும் × விடியாத போன்ற சொற்கள்
எதிர்சொற்களாக அமைந்து முரண்நயத்தை வெளிப்படுத்துகின்றன. இயைபு
நயம்: வண்ணமே
- அன்னமே - மன்றமே என இப்பாடலின்
இறுதியெழுத்துகள் ஒன்றாய் அமைந்து இயைபு நயத்துடன் காணப்படுகின்றது. அணி
நயம்: 'மலர்ந்தும் மலராத பாதிமலர்
போல' என்னும் அடிகள் இப்பாடலில் உவமையணி இடம்பெற்றுள்ளதை
உணர்த்துகின்றது. |
5 |
39 ஆ. |
அ) அனுப்புநர்,
பெறுநர், ஐயா, பொருள்,
கடிதச்செய்தி, இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி
என்ற அமைப்பில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக (மாதிரிக் கடிதம்) முறையீட்டுக்கடிதம் அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்
சார்பாக.
வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி
சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு
வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும்
இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்: 08-09-2025. உறைமேல்
முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
42 |
அ) v அனைவரும் நாட்டு காய்கறிகளையே
உண்ண வேண்டும்.
v செயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லிகள்
பயன்படுத்தாத காய்கறிகளை வீட்டுத் தோட்டத்தில் விளைய வைத்து பயன்படுத்த வேண்டும். v கீரைகளின் நன்மைகளை
குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். v விரைவு உணவுகளை
உண்ணுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர,
பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்.
காலை சில்லென உணர்வும்,
மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 அ |
நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி
பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன
வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு
இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது,
தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ் மொழியின் பழமையும்
செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச்
சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை
மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான
சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே
வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ
இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில்
கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப்
பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை பொருட்களின்
மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்
முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ü செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என
எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின்
வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை: சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் (அல்லது) ஆ. வரவேற்பு: விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த
விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள்
அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு
முதலில் குடிக்க நீர் தந்தோம். கலந்துரையாடல்: நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின், வரவேற்பரையில்
அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம்
விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்பு,
பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது. விருந்து
உபசரிப்பு : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த
இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை
இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத்
தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம். நகர்வலம்: விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த
பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின்
சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம் இரவு
விருந்து : நகர்வலம் முடிந்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன்
கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர். பிரியா
விடை : இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள்
ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன்
பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம். |
8 |
44 |
பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார்
இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும்
திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. (அல்லது) ஆ) புயலிலே ஒரு தோணி முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்
ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர்
இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு
காண்போம் விடாது பெய்த மழை: கடுமையான வெயில் மறைந்து,இமை
நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது
மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள
கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து
நின்றனர். தள்ளாடிய கப்பல் (தொங்கான்): மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று
கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி
வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்” என்று கத்துகிறான். பாண்டியன்
எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல்
தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின.. பயணிகளின் தவிப்பு: பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட
நேரம் தொடர்ந்தது.கப்பல்
தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து
யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து
வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான்.
அதற்கு கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார். கரையைக் காணுதல்: ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு
கடலாக மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை
மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த
நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர கப்பல்கள் கரை முழுவதும் நின்றிருந்தன. முடிவுரை: ”தமிரோ?”
என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.” யா மஸ்தா”
இன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட
அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத்
தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி
படும்பாட்டை தெளிவுற விளக்கின. |
8 |
45 |
அ) தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும்
செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள்
மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம்.
இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம்
மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி
இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற
வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி
பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு
வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர
வேண்டும். சாலை
விதிகள்: சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும்
கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட
அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: ·
சிவப்பு வண்ண விளக்கு"
நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும்
நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். ·
போக்குவரத்துக் காவல்
துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. ·
சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு
உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில்
பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது.
இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை மதிப்போம்” விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
என்பதை உணர்வோம். (அல்லது) ஆ) தலைப்பு
: சான்றோர் வளர்த்த தமிழ் முன்னுரை: “தமிழே!
நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல
செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு
வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும்,
புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக்
காண்போம். பிள்ளைத்தமிழ்: குழவி மருங்கினும் கிழவதாகும் - தொல்காப்பியர் கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப்
பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: நூறு பாடல்கள் கொண்ட
நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக
நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும். பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப்
பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து
பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர்
நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால்
முற்பட்டதாகும். அந்தாதி: அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு
பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி
எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால்
அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும். கோவை: பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது
கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை
நூலாகும். முடிவுரை: "வீறுடை செம்மொழி
தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும்.
மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால்
பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு
செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய
கடமையாகும் |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி