10.ஆம் வகுப்பு – தமிழ் அலகுத்தேர்வு இயல்-6
பலவுள்
தெரிக. 9×1=9
1.
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
உழவு, மண். ஏர். மாடு ஆ) மண், மாடு, ஏர். உழவு
இ)
உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர். உழவு, மாடு, மண்
2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
3.
நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக்
கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
அ)
பாண்டிய நாடு,
சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ)
சேர நாடு, சோழ நாடு ஈ)
சோழ நாடு, பாண்டிய நாடு
4.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
5.
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது
எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே-
அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
6. மோனைச் சொற்களைத் தேர்க.
அ) பகர்வனர், கட்டு ஆ) வீதியும், நூலினும் இ) பருத்தி, காருகர் ஈ) பகர்வனர், பட்டினும்
7. காருகர் என்னும் சொல்லின் பொருள் -
அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்
8. எதுகைச் சொற்களைத் தேர்க.
அ) பகர்வனர், திரிதரு ஆ) பட்டினும், கட்டு இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்
9. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்
அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம் இ. சிலப்பதிகாரம் ஈ. திருவிளையாடற் புராணம்
குறுவினா 7×2=14
10. பாசவர்,
வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
11. அள்ளல்
பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள்
யாவை?
12.
பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ. வரப் போகிறேன் ஆ. இல்லாமல் இருக்கிறது இ. கொஞ்சம் அதிகம் ஈ. முன்னுக்குப்
பின்
13.
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு
தருக
அ. மூவேந்தர் ஆ.
நாற்றிசை இ. ஐந்திணை ஈ. பத்துப்பாட்டு
14.
தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-
1. நூலின் பயன் படித்தல் எனில் ,
கல்வியின் பயன்----
2. விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை - ----
3. கல் சிலை ஆகுமெனில்,நெல் ----- ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து -----
16. கலைச்சொல் அறிவோம்
அ.
Agreement ஆ. Discourse இ. Monarchy ஈ. Border
சிறுவினா 3×3=9
17. சேர,
சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம்
வழி விளக்குக.
18. "தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
21. ”தூசும்”
(அல்லது) ”அள்ளல்” எனத்தொடங்கும் பாடல்களை அடிபிறழாமல்
எழுதுக
விரிவான விடையளி 2×5=10
22.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
23. த.நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெரு,
வடக்கு வீதி, சிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில்
500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதே பகுதியில்
உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம்
வகுப்பு சேர விரும்புகிறார். அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை
நிரப்பி உதவுக.
24. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.
நெடுவினா 1×8=8
25.அ) நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில்
மேடை உரை எழுதுக. (அல்லது)
ஆ)
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம்
கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி