தமிழ் திறனறி தேர்வு 2025
10.ஆம் வகுப்பு தமிழ் வினாவங்கிகள்
இயல்-2
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
71) ’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’- இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள நயங்கள்
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை
இ) முரண்,இயைபு
ஈ) உவமை,எதுகை
72) செய்தி1- ஜூன்15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2-காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2. ஆமிடம்
பெற்றுள்ளது.
செய்தி பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும்
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி
1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி
1,3 ஆகியன சரி.
73) பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும் அடி உணர்த்தும் அறிவியல்
செய்தி
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல்
ஈ) கொந்தளித்தல்.
74)பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ)உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
75) பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)கொண்டல்-
1.மேற்கு
ஆ)கோடை
- 2.தெற்கு
இ)வாடை -
3.கிழக்கு
ஈ)தென்றல் - 4.வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2
இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
76) உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்………
அ) தொல்காப்பியர் ஆ) திருமூலர்
இ) பவணந்தி ஈ)
போகமுனிவர்
77) திருமூலர் இயற்றிய நூல்………
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல்
இ) திருமந்திரம் ஈ) புறநானூறு
78) உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று திருமந்திரம் குறிப்பிடுவது
அ) உணவு ஆ)
உடை இ)
உறையுள் ஈ) மூச்சுப்பயிற்சி
79) மழைக்காற்று என அழைக்கப்படுவது
அ) கோடை ஆ)
கொண்டல் இ) வாடை
ஈ) தென்றல்
80) ஊதைக்காற்று வீசும் திசை
அ) கிழக்கு ஆ)
மேற்கு இ) வடக்கு
ஈ) தெற்கு
81)’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ என்று காற்றைக்
குறிப்பிடும் நூல்……
அ) சிலப்பதிகாரம் ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை ஈ) அகநானூறு
82) தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு…….சதவீதம் மழைபொழிவைத்
தருகிறது.
அ) ஐம்பது ஆ)
அறுபது இ) எழுபது
ஈ) எண்பது
83) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்ற நூலின் ஆசிரியர்…….
அ) ஒட்டக்கூத்தர் ஆ) பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர்
இ) சயங்கொண்டார் ஈ) புகழேந்திப்புலவர்.
84) பழங்காலக் கடல்பயணங்கள் காற்றால் இயக்கப்பட்ட…………களால்
நிகழ்ந்தன.
அ) காற்றாடி ஆ)
விமானங்கள் இ) படகு
ஈ) பாய்மரக்கப்பல்
85)’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம்’
எனும்அடிகள் ஔவையாரின் குறளில்……….அதிகாரத்தில்இடம்பெற்றுள்ளன.
அ) வாயுதோரணை ஆ)
வாயுதாரணை இ) பண்புடைமை ஈ) அன்புடைமை
86) முந்நீர் என்ற சொல்லின் பொருள்
அ) கடல் ஆ)
ஆற்றுநீர் இ) ஊற்றுநீர் ஈ) மழைநீர்
87) ’வளிதொழில் ஆண்ட உரவோன்’ எனப் பாராட்டப் பட்டவன் யார்?பாராட்டியவர் யார்?
அ) வெண்ணிக்குயத்தியார்,கரிகால் பெருவளத்தான்
ஆ) கோவலன்,இளங்கோவடிகள்
இ) கரிகால் பெருவளத்தான்,வெண்ணிக்குயத்தியார்
ஈ) அதியமான்,ஔவையார்
88) பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) பிளேட்டோ ஆ)
ஹிப்பாலஸ் இ) அரிஸ்டாடில் ஈ) சாக்ரடீஸ்
89) யவனக்கப்பல்கள் வந்து சென்ற துறைமுகம்…….
அ) கொற்கை ஆ)
முசிறி இ) தொண்டி
ஈ) வஞ்சி
90) தென்மேற்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள்
அ) அக்டோபர் முதல் டிசம்பர் ஆ) ஜனவரி முதல் மார்ச்சு
இ) ஜூலை முதல் செப்டம்பர் ஈ) ஜூன் முதல் செப்டம்பர்
91) காற்று,கதிரவனின் வெப்பத்தால் சூடாகி,அடர்த்தி குறைந்து மேலேசென்று அங்குஏற்பட்ட வெற்றிடத்தைநிரப்பி………..ஆக மாறுகிறது.
அ) பருவக்காற்று ஆ) புயல்
இ) காற்றழுத்தத் தாழ்வுநிலை ஈ) வளிமண்டல சுழற்சி
92) தாழ்வுமண்டலம் ஏற்படும் காலம்………..
அ) தென்மேற்குப் பருவக்காலம் ஆ) வடகிழக்குப் பருவக்காலம்
இ) மழைக்காலம் ஈ)
இலையுதிர் காலம்.
93)’வளி மிகின் வலி இல்லை ’ என்று காற்றைச் சிறப்பித்தவர்…………
அ) வெண்ணிக்குயத்தியார் ஆ) இளநாகனார்
இ) ஐயூர் முடவனார் ஈ) ஔவையார்
94) ’கடுங்காற்று மணலைக் கொண்டுவந்து சேர்க்கிறது’ என்று இளநாகனார்
காற்றின் எத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?
அ) காற்றின் பயன்பாடு ஆ) காற்றின் திசை
இ) காற்றின் அடர்த்தி ஈ) காற்றின் வேகம்
95) புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளத்தைத் தேர்ந்தெடுக்க.
அ) நிலக்கரி ஆ)
காற்று இ) பெட்ரோல் ஈ) டீசல்
96) காற்றினால் மின்சாரம்
தயாரிக்கப் படுவதால் எதன் தேவை குறைகிறது?
அ) நிலக்கரி ஆ)
காற்று இ) மழை
ஈ) வெயில்
97) மெது உருளைகளைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்………
அ) soft
cylinder ஆ) roller இ) tyre ஈ) softees
98) இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாமிடம் பெறுவது
அ) விபத்து ஆ)
வேகமாக வாகனம் ஓட்டுதல்
இ) நீர் மாசுபாடு ஈ) காற்று மாசுபாடு
99) UNICEF என்பது………..
அ) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆ) ஐக்கிய நாடுகள்
அவை
இ) பன்னாட்டுநீதிமன்றம்ஈ)காவல்துறை
100) குளிர்பதனப்பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று……..
அ) ஹைட்ரோகார்பன் ஆ) குளோரோ புளோரோ கார்பன்
இ) சல்பர்-டை-ஆக்சைடு ஈ)
அம்மோனியா
101) காற்றுமாசுபாட்டைக் குறைக்க தற்போது குளிர்பதனப்
பெட்டிகளில் பயன்படுவது……..
அ) அம்மோனியா ஆ)
பாஸ்பீன்
இ) ஹைட்ரோகார்பன் ஈ) அசிட்டிலின்
102) உலகக் காற்றுநாள்…………
அ) செப்டம்பர் 15 ஆ) ஆகஸ்டு 15
இ) ஜூலை 15 ஈ)
ஜூன் 15
103) குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எத்தனை ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கும்?
அ) ஒரு கோடி ஆ)
ஒரு இலட்சம் இ) ஆயிரம்
ஈ) பத்தாயிரம்
104) தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் அவர்களது தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடப்படுபவை
அ) திருப்பாவை,திருவெம்பாவை ஆ) திருக்கோவை,திருச்சேவை இ) திருச்சுனை,திருவேரகம் ஈ) திருவருட்பா,திருக்கோத்தும்பி
105) உலகக் காற்றாலை மின்சார உற்பத்தியில் இந்தியா பெறுமிடம்……….
அ) இரண்டாம் ஆ)
மூன்றாம் இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
106) ஹிப்பாலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப் பட்ட நூற்றாண்டு……
அ) கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
ஆ) கி.பி.முதலாம்நூற்றாண்டு
இ) கி.மு.2.ஆம் நூற்றாண்டு
ஈ) கி.மு.முதலாம் நூற்றாண்டு
107) புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் அரண்…….
அ) சூரியன் ஆ)மழை இ)மரம் ஈ)ஓசோன்படலம்
108) தாஜ்மகால் கட்டப் பட்ட நூற்றாண்டு…….
அ) கி.பி.16
ஆ) கி.பி.17 இ) கி.பி.15 ஈ)
கி.பி.18
109)’பிராண ரஸம்’ என்பதன் பொருள்……
அ) உயிர்வளி ஆ)
பழச்சாறு இ) உயிர்வலி ஈ) துன்பம்
110)’நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,சிந்துக்குத் தந்தை,பாட்டுக்கொரு புலவன்’ என்றெல்லாம் புகழப்பட்டவர்
அ) பாரதிதாசன் ஆ) கவிமணி
இ) பாரதியார் ஈ) வாணிதாசன்
111) எட்டய்யபுர ஏந்தலாக அறியப்பட்ட கவிஞர்…….
அ) பாரதிதாசன் ஆ)
பாரதியார் இ) கவிமணி
ஈ) சுரதா
112) கேலிச்சித்திரம்,கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்………
அ) பாரதிதாசன் ஆ)
கவிமணி இ) சுரதா
ஈ) பாரதியார்
113) பாரதியார் எழுதிய காவியத்தைத் தேர்ந்தெடுக்க
அ) பாப்பா பாட்டு ஆ) கண்ணன் பாட்டு இ) பாஞ்சாலி
சபதம் ஈ) புதிய ஆத்திச்சூடி
114) உரைநடையும்,கவிதையும் இணைத்து யாப்புக்
கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படுவது
அ) வசன கவிதை ஆ)
புதுக்கவிதை
இ) மரபுக்கவிதை ஈ) ஹைக்கூ கவிதை
115) காற்று எதைச் சுமந்து வர வேண்டுமென பாரதி அழைக்கிறார்?
அ) கவிதையை ஆ)
மகரந்தத்தூளை
இ) விடுதலையை ஈ)
மழையை
116) வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்……..
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) கவிமணி ஈ) வாணிதாசன்
117) பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்……..
1) இந்தியா 2) சுதேசமித்திரன் 3) எழுத்து 4) கணையாழி
அ) 1,2 சரி ஆ)
முதல் மூன்றும் சரி இ) நான்கும் சரி ஈ) 1,2 தவறு
118)’விரிச்சி’ என்ற சொல்லின் பொருள்
அ) விரித்தல் ஆ)
மலர் இ)
நற்சொல் ஈ) தொழுதல்
119) மாஅல் என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) உரிச்சொற்றொடர் ஆ) இன்னிசையளபெடை
இ) சொல்லிசையளபெடை ஈ) செய்யுளிசையளபெடை
120) ’இன்னே வருகுவர் தாயர்’ –யார்,யாரிடம் கூறியது?
அ) முதுபெண்டிர்,தலைவியிடம் ஆ) ஆய்மகள்,கன்றிடம்
இ) தலைவி,முதுபெண்டிரிடம் ஈ) தலைவி,கன்றிடம்
121) பொருத்துக:
அ) சுவல் – 1.மலை
ஆ) கோடு – 2.தோள்
இ) நேமி -- 3.தூவி
ஈ) தூஉய் -- 4.வலம்புரிச்சங்கு
அ) 2,1,4,3 ஆ) 2,3,4,1 இ) 2,4,1,3 ஈ) 3,1,4,2
122) ’நன்னர் நன்மொழி கேட்டனம்’- யார்,யாரிடம் கூறியது?
அ) முதுபெண்டிர்,தலைவியிடம் ஆ) ஆய்மகள்,கன்றிடம்
இ) தலைவி,முதுபெண்டிரிடம் ஈ) தலைவி,கன்றிடம்
123) வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கையை உடையவர் யார்?
அ) கோவலர் ஆ)
ஆய்மகள் இ) திருமால் ஈ) சான்றோர்
124) முல்லைக்குரிய உரிப்பொருளைத் தேர்ந்தெடுக்க.
அ) ஊடலும்,ஊடல் நிமித்தமும்
ஆ) புணர்தலும்,புணர்தல் நிமித்தமும்
இ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
ஈ) இருத்தலும் இருத்தல்
நிமித்தமும்
125) முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுதும்,சிறுபொழுதும் முறையே
அ) மாலை,கார்காலம் ஆ) கார்காலம்,மாலை
இ) குளிர்காலம்,யாமம் ஈ) ஆறு பெரும்பொழுதுகளும்,வைகறை
126) ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகியது……..
அ) மழைமேகம் ஆ)
சூரியன் இ) மனிதன்
ஈ) காற்று
127) முல்லைப்பாட்டு--------நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு ஆ) எட்டுத்தொகை
இ) பத்துப்பாட்டு ஈ) நீதிநூல்கள்
128) 1) முல்லைப்பாட்டு 104 அடிகளால் ஆனது.
2) முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால்
இயற்றப் பட்டது.
3) முல்லைப்பாட்டு பத்துப்பாட்டில்
குறைந்த அடிகளைக் கொண்டது.
அ) 1 சரி 2,3 தவறு ஆ) 1 தவறு
2,3 சரி
இ) மூன்றும் சரி ஈ) மூன்றும் தவறு
129) முல்லைப்பாட்டை இயற்றியவர்----------
அ) காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் ஆ)நப்பூதனார்
இ) சீவலமாறன் ஈ)ஔவையார்
130) வேற்றுமை,வினை,பண்பு முதலியவற்றின்
உருபுகள் மறைந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்பது--------தொடராகும்.
அ) தொகாநிலை ஆ)
வேற்றுமை இ) தொகைநிலை ஈ) எழுவாய்
131) தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.
அ) ஐந்து ஆ)
ஏழு இ)
ஒன்பது ஈ) ஆறு
132) பனிக்கடல் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உவமைத்தொகை ஆ)
தொகையுவமை இ) உருவகம்
ஈ) வேற்றுமைத்தொகை
133) வேற்றுமை உருபும்,பயனும் உடந்தொக்க தொகையைக் கண்டுபிடி
அ) பள்ளி செல் ஆ) மக்கள் தொண்டு இ) செய்தொழில் ஈ) தைத்திங்கள்
134) காலம் கரந்த பெயரெச்சமே---------ஆகும்.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) வினையெச்சம் ஈ) பெயரெச்சம்
135) எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் என்னும் நான்கு அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது------
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) அளவைப்பெயர் ஈ) உவமைத்தொகை
136) மார்கழித்திங்கள்,சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெற்ற
பொதுப்பெயர்கள்
அ) மார்கழி,சாரை ஆ) திங்கள்,பாம்பு இ)
மார்கழி,பாம்பு ஈ) திங்கள்,சாரை
137) செங்காந்தள் என்ற தொகைச்சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன ஆ)
ஆகிய இ) போன்ற
ஈ) ஐ
138) முறுக்குமீசை வந்தார் என்பது------------தொகை
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
139) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்---பெயர் முன்னும்,---பெயர் பின்னும் வரும்.
அ) பொது,சிறப்பு ஆ) இடுகுறி,காரணம் இ)
காரணம்,இடுகுறி ஈ) சிறப்பு,பொது
140) வேற்றுமைத்தொகை--------வகைப்படும்.
அ) 6 ஆ) 7 இ) 8 ஈ) 9
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி