கல்வி வளர்ச்சி நாள் - முழக்கத்தொடர் எழுதுதல்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் அருமை மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். ஆண்டுதோறும் ஜூலை 15 ஆம் நாளைக் கல்வின்வளர்ச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம். இது யாருடைய பிறந்தநாள் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆம். பெருந்தலைவர் அவர்களின் பிறந்த நாளே கல்வி வளர்ச்சிநாள் ஆகும்.
இக்கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்ப்பொழில் வலைதளம் மாணவர்களுக்கான முழக்கத்தொடர் எழுதும் போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
குறிப்பு: கல்வியின் முக்கியத்துவததை உணர்த்தும் முழக்கத்தொடர்கள் மட்டுமே எழுத வேண்டும்.
போட்டி குறித்த விவரங்கள்:
- கல்வி வளர்ச்சி நாள் முழக்கத்தொடர் எழுதும் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி இலவசம்.
- கல்வியின் முக்கியத்துவததை உணர்த்தும் முழக்கத்தொடர்கள் மட்டுமே எழுத வேண்டும்.
- வேண்டுமெனில் முழக்கத்தொடரின் முக்கியத்துவம் உணர்த்தும் சிறு ஓவியங்களையும் வரையலாம்.
- ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பெறலாம்.
- 5-8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு நிலையிலும், 9-12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு நிலையிலும் ஆக இரு நிலைகளில் சிறந்த முழக்கத் தொடர்கள் தெரிவு செய்யப்படும்.
- 5-8 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 6 முழக்கத் தொடர்களும்,
- 9-12 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 10 முழக்கத் தொடர்களும், A4 தாளின் SINGLE SIDE மட்டும் எழுதி SCAN செய்து PDF வடிவில் அனுப்பவேண்டும்.
- 17-07-2025 ஆம் தேதிக்குள்ளாக மாணவர்களின் முழக்கத் தொடர்களை அனுப்ப வேண்டும். அதற்குப்பிறகு பதிவேற்றம் செய்தல் கூடாது.
- மாணவர்கள் தட்டச்சு செய்த முழக்கத்தொடர்களை அனுப்பக்கூடாது. அவரவர் கையெழுத்தில் எழுதிய முழக்கத்தொடர்களை மட்டுமே அனுப்பவேண்டும்
- இணையத்தில் உள்ளவற்றைப் பார்த்து எழுதுவதை முற்றிலும் தவிர்க்கவும்.
இரண்டு நிலைகளிலும் சிறந்த முழக்கத்தொடர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா 200 ரூபாய் பரிசாக வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றதற்கான இலவச மின்சான்றிதழ் அவரவர் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
இரண்டு நிலைகளிலும் சிறந்த முழக்கத்தொடர்கள் தெரிவு செய்யப்பட்டு , அந்தக் கட்டுரையை எழுதியவர்களுக்கான பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும். முகப்புத் தாளில் மாணவர்கள் அவர்களது பெயர்,வகுப்பு,பிரிவு,பள்ளி,ஊரின் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்ற முழு விவரங்களையும் எழுத வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முழக்கத்தொடர்கள் மற்றும் அதை எழுதியவர்களின் பெயர் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் 17-07-2025 அன்று வெளியிடப்படும்.
மேலும் உடனடித் தகவல்களுக்கு தமிழ்ப்பொழில் புலனத்தில் இணைக👇
கட்டுரையை அனுப்பும் முறை:
- பின்வரும் UPLOAD என்பதனைச் சொடுக்கி , அதில் கேட்கப்படும் விவரங்களைச் சரியாக நிரப்பி, முழக்கத்தொடர்களுக்கான PDF ஐ பதிவேற்றம் செய்யவும்.
- இரண்டு நிலைகளுக்கும் தனித்தனி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவரவர்க்குரிய இணைப்புகளில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும்.
- அவரவர் மின்னஞ்சலுக்கு பங்கேற்புச்சான்றிதழ் அனுப்பப்படும் என்பதால் சரியான மின்னஞ்சல் முகவரியைப் பதிவிடவும்
👇5-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இணைப்பு
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி