10.ஆம்வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண் வினாவங்கி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1) பரிபாடல் அடியில் விசும்பில்,
இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும் ஆ)
வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில்,
பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
2) செய்தி1-ஒவ்வோர் ஆண்டும் ஜூன்
15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி
2-காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் 2.ஆமிடம் பெற்றுள்ளது.
செய்தி
பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும்
முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல்
செய்தி
3-காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்தனர் தமிழர்.
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி
1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி
1,3 ஆகியன சரி.
3) பொருந்தும் விடைவரிசையைத்
தேர்ந்தெடுக்க.
அ)கொண்டல்- 1.மேற்கு
ஆ)கோடை - 2.தெற்கு
இ)வாடை -
3.கிழக்கு
ஈ)தென்றல் - 4.வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
4. மகிழுந்து வருமா?' என்பது -------
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்ந்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
5. அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்
காரணமாக அமைந்தது -----
அ) வேற்றுமை
உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
6) உலகம் ஐம்பூதங்களால்
ஆனது என்றவர்………
அ) தொல்காப்பியர் ஆ) திருமூலர் இ) பவணந்தி ஈ) போகமுனிவர்
7) திருமூலர் இயற்றிய நூல்………
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ) திருமந்திரம் ஈ) புறநானூறு
8) உடலைப்பாதுகாத்து வாழ்நாளை
நீட்டிக்கும் என்று திருமந்திரம் குறிப்பிடுவது
அ) உணவு ஆ) உடை இ) உறையுள் ஈ) மூச்சுப்பயிற்சி
9) மழைக்காற்று என அழைக்கப்படுவது
அ) கோடை ஆ) கொண்டல் இ) வாடை ஈ) தென்றல்
10) ஊதைக்காற்று வீசும்
திசை
அ)கிழக்கு ஆ)மேற்கு இ)வடக்கு ஈ)தெற்கு
11)’வண்டொடு புக்க மணவாய்த்
தென்றல்’ என்று காற்றைக் குறிப்பிடும் நூல்……
அ) சிலப்பதிகாரம் ஆ) புறநானூறு இ) குறுந்தொகை ஈ) அகநானூறு
12) தென்மேற்குப் பருவக்காற்று
இந்தியாவிற்கு…….சதவீதம் மழைபொழிவைத் தருகிறது.
அ) ஐம்பது ஆ) அறுபது இ) எழுபது ஈ) எண்பது
13) பத்மகிரிநாதர் தென்றல்
விடுதூது என்ற நூலின் ஆசிரியர்…….
அ) ஒட்டக்கூத்தர் ஆ) பலப்பட்டடைச்
சொக்கநாதப்புலவர்
இ) சயங்கொண்டார் ஈ) புகழேந்திப்புலவர்.
14) பழங்காலக் கடல்பயணங்கள்
காற்றால் இயக்கப்பட்ட…………களால் நிகழ்ந்தன.
அ) காற்றாடி ஆ) விமானங்கள் இ) படகு ஈ) பாய்மரக்கப்பல்
15)’வாயு வழக்கம் அறிந்து
செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம்’ எனும்அடிகள் ஔவையாரின் குறளில்……….அதிகாரத்தில்இடம்பெற்றுள்ளன.
அ) வாயுதோரணை ஆ) வாயுதாரணை இ) பண்புடைமை ஈ) அன்புடைமை
16) முந்நீர் என்ற சொல்லின்
பொருள்
அ) கடல் ஆ) ஆற்றுநீர் இ) ஊற்றுநீர் ஈ) மழைநீர்
17)’வளிதொழில் ஆண்ட
உரவோன்’ எனப்
பாராட்டப் பட்டவன் யார்?பாராட்டியவர் யார்?
அ) வெண்ணிக்குயத்தியார்,கரிகால் பெருவளத்தான் ஆ) கோவலன்,இளங்கோவடிகள்
இ) கரிகால் பெருவளத்தான்,வெண்ணிக்குயத்தியார் ஈ) அதியமான்,ஔவையார்
18) பருவக்காற்றின் பயனை
உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) பிளேட்டோ ஆ) ஹிப்பாலஸ் இ) அரிஸ்டாடில் ஈ) சாக்ரடீஸ்
19) யவனக்கப்பல்கள் வந்து
சென்ற துறைமுகம்…….
அ) கொற்கை ஆ) முசிறி இ) தொண்டி ஈ) வஞ்சி
20) தென்மேற்குப் பருவக்காற்று
வீசும் மாதங்கள்
அ) அக்டோபர் முதல் டிசம்பர்
ஆ) ஜனவரி முதல் மார்ச்சு
இ) ஜூலை முதல் செப்டம்பர்
ஈ)ஜூன் முதல் செப்டம்பர்
21) காற்று,கதிரவனின் வெப்பத்தால் சூடாகி,அடர்த்தி குறைந்து மேலேசென்று
அங்குஏற்பட்ட வெற்றிடத்தைநிரப்பி………..ஆக மாறுகிறது.
அ) பருவக்காற்று ஆ) புயல் இ) காற்றழுத்தத்
தாழ்வுநிலை ஈ)
வளிமண்டல சுழற்சி
22)தாழ்வுமண்டலம் ஏற்படும்
காலம்………..
அ) தென்மேற்குப் பருவக்காலம் ஆ) வடகிழக்குப்
பருவக்காலம்
இ) மழைக்காலம் ஈ) இலையுதிர்
காலம்.
23)’வளி மிகின் வலி
இல்லை ’ என்று காற்றைச் சிறப்பித்தவர்…………
அ) வெண்ணிக்குயத்தியார் ஆ) இளநாகனார் இ) ஐயூர் முடவனார் ஈ) ஔவையார்
24) ’கடுங்காற்று மணலைக்
கொண்டுவந்து சேர்க்கிறது’ என்று இளநாகனார் காற்றின் எத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?
அ) காற்றின் பயன்பாடு ஆ) காற்றின்
திசை இ) காற்றின் அடர்த்தி ஈ) காற்றின் வேகம்
25) புதுப்பிக்கக் கூடிய
ஆற்றல் வளத்தைத் தேர்ந்தெடுக்க.
அ) நிலக்கரி ஆ) காற்று இ) பெட்ரோல் ஈ) டீசல்
26) காற்றினால் மின்சாரம் தயாரிக்கப் படுவதால் எதன்
தேவை குறைகிறது?
அ) நிலக்கரி ஆ) காற்று இ) மழை ஈ) வெயில்
27) மெது உருளைகளைக் குறிக்கும்
ஆங்கிலச்சொல்………
அ) soft cylinder ஆ) roller இ) tyre ஈ) softees
28) இந்தியாவில் மிகுந்த
உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாமிடம் பெறுவது
அ) விபத்து ஆ) வேகமாக
வாகனம் ஓட்டுதல் இ)
நீர் மாசுபாடு ஈ) காற்று மாசுபாடு
29) UNICEF என்பது………..
அ) ஐக்கிய நாடுகளின் சிறுவர்
நிதியம் ஆ) ஐக்கிய நாடுகள் அவை
இ) பன்னாட்டுநீதிமன்றம் ஈ) காவல்துறை
30) குளிர்பதனப்பெட்டி
வெளியிடும் நச்சுக்காற்று……..
அ) ஹைட்ரோகார்பன் ஆ)
குளோரோ புளோரோ கார்பன்
இ) சல்பர்-டை-ஆக்சைடு
ஈ) அம்மோனியா
31) காற்றுமாசுபாட்டைக் குறைக்க தற்போது குளிர்பதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்
படுவது……..
அ) அம்மோனியா ஆ) பாஸ்பீன் இ) ஹைட்ரோகார்பன் ஈ) அசிட்டிலின்
32) உலகக் காற்றுநாள்…………
அ) செப்டம்பர்
15 ஆ) ஆகஸ்டு 15 இ) ஜூலை 15
ஈ) ஜூன் 15
33) குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எத்தனை ஓசோன் மூலக்கூறுகளைச்
சிதைக்கும்?
அ) ஒரு கோடி ஆ) ஒரு இலட்சம் இ) ஆயிரம் ஈ) பத்தாயிரம்
34) தாய்லாந்து மன்னரின்
முடிசூட்டு விழாவில் அவர்களது தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடப்படுபவை
அ) திருப்பாவை, திருவெம்பாவை ஆ) திருக்கோவை, திருச்சேவை இ) திருச்சுனை, திருவேரகம் ஈ) திருவருட்பா, திருக்கோத்தும்பி
35)உலகக் காற்றாலை மின்சார
உற்பத்தியில் இந்தியா பெறுமிடம்……….
அ) இரண்டாம் ஆ)மூன்றாம் இ)ஐந்தாம் ஈ)ஆறாம்
36) ஹிப்பாலஸ் பருவக்காற்று
கண்டுபிடிக்கப் பட்ட நூற்றாண்டு……
அ) கி.பி.இரண்டாம் நூற்றாண்டு ஆ) கி.பி.முதலாம்நூற்றாண்டு
இ) கி.மு.2.ஆம் நூற்றாண்டு
ஈ) கி.மு.முதலாம் நூற்றாண்டு
37) புற ஊதாக்கதிர்களைத்
தடுக்கும் அரண்…….
அ) சூரியன் ஆ) மழை இ) மரம் ஈ) ஓசோன்படலம்
38) தாஜ்மகால் கட்டப் பட்ட
நூற்றாண்டு…….
அ) கி.பி.16 ஆ)
கி.பி.17 இ) கி.பி.15 ஈ)
கி.பி.18
39)’பிராண ரஸம்’
என்பதன் பொருள்……
அ) உயிர்வளி ஆ) பழச்சாறு இ) உயிர்வலி ஈ) துன்பம்
40) தண்பெயல்
என்ற சொல்லின் பொருள்----------
அ) குளிர்ந்த மழை ஆ) தனது மழை இ) இளவேனில் ஈ) முதுவேனில்
41) ஐம்பூதங்களில்
முதல் பூதமாக பரிபாடல் குறிப்பிடுவது---------------
அ) காற்று ஆ) வானம் இ)
நிலம் ஈ) நீர்
42 ) அணுக்களின்
ஆற்றல் கிளர்ந்ததால் சிதறியவை
அ) கருப்பொருட்கள் ஆ)
துகள்கள் இ)
பாறைகள் ஈ) பருப்பொருட்கள்
43) நம்
பால்வீதி போன்று பல பால் விதிகள் இருப்பதை நிரூபித்தவர்----------
அ) மேத்யூ ஹைடன் ஆ)
ஸ்டீபன் ஹாக்கிங் இ) எட்வின் ஹப்பிள் ஈ)பிளெமிங்
44) பல
பால் வீதிகள் இருப்பது நிரூபிக்கப்பட்ட ஆண்டு
அ)1934
ஆ)1924 இ) 1944 ஈ) 1904
45) அண்டத்
துகள்கள் கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும்
தூசுத்துகளைப்போன்று இருக்கிறது என்று கூறியவர்
அ) மாணிக்கவாசகர் ஆ)
எட்வின் ஹப்பிள் இ) ஸ்டீபன் ஹாக்கிங் ஈ) ஐன்ஸ்டீன்
46) பரிபாடல்------------நூல்களுள் ஒன்று.
அ) பத்துப்பாட்டு ஆ) பதினெண் கீழ்க்கணக்கு இ) எட்டுத்தொகை ஈ) நீதி
நூல்கள்
47) ஓங்கு
என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல்---------
அ) கலித்தொகை ஆ)
பரிபாடல் இ)
நற்றிணை ஈ) குறுந்தொகை
48) சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட நூல்
------------
அ)அகநானூறு ஆ)புறநானூறு இ)கலித்தொகை ஈ)பரிபாடல்
49) பரிபாடலில்
கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை-------
அ) 34 ஆ) 25 இ) 24
ஈ) 54
50) எட்வின்
ஹப்பிள் என்பவர்----------
அ)சீன தத்துவஞானி ஆ)
அமெரிக்க வானியல் அறிஞர் இ) பிரெஞ்சு ஆளுநர்
ஈ)மதபோதகர்
51)’அண்டப்
பகுதியின் உண்டைப் பிறக்கும்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்“ எனக் குறிப்பிடும்
நூல்
அ) பரிபாடல் ஆ)
திருவாசகம் இ) பெருமாள் திருமொழி
ஈ) கலித்தொகை
52) பரிபாடலில்
புவிக்கு கூறப்பட்ட உவமை----------
அ) நெருப்புப் பந்து ஆ)
உருவமில்லாத காற்று இ) வெள்ளம் ஈ) ஊழி
53) பொருத்துக
அ) விசும்பு - 1.சிறப்பு
ஆ) ஊழி -
2.யுகம்
இ) ஊழ் - 3.வானம்
ஈ) பீடு
- 4.முறை
அ) 3,2,4,1 ஆ) 4,3,2,1 இ) 1,2,3,4 ஈ) 3,4,1,2
54) ’கருவளர்
வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்‘ இவ்வடிகளில் இடம்பெற்ற
நயம்
அ) மோனை ஆ) எதுகை இ)
இயைபு ஈ)முரண்
55)
நாகூர் ரூமியின் இயற்பெயர்
அ) முகமது அக்பர் ஆ) முகமது ஜான் இ) முகமது
ரஃபி ஈ) முகமது அசாருதீன்
55)
நாகூர் ரூமி----மாவட்டத்தில் பிறந்தவர்
அ) மதுரை ஆ) தேனி இ) நாகை ஈ) தஞ்சை
56)
நாகூர் ரூமி ---- இதழில் எழுதத் தொடங்கினார்
அ) தினத்தந்தி ஆ) குமுதம் இ) கணையாழி ஈ) எழுத்து
57)
நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமி எழுதிய-----
அ) புதினம் ஆ) நாடகம் இ) கட்டுரை ஈ) கவிதைத்தொகுதி
58) ஒரு தொடர்மொழியில்
இரு சொற்களின் இடையில் வேறுசொல் வேண்டாது பொருள் உணர்த்துவது----
அ) இடைச்சொல் ஆ) தொகைநிலைத்தொடர்
இ ) தொகாநிலைத்தொடர் ஈ) வேற்றுமைத்தொகை
59) தொகாநிலைத்தொடர்--------வகைப்படும்.
அ) 6 ஆ) 9 இ) 8 ஈ) 10
60) வினைப்பயனிலை தொடர்ந்து வந்த எழுவாய்த் தொடரைக்
கண்டுபிடி
அ) எழிலன் ஓவியன் ஆ) நெல் விளைந்தது இ) மழை பெய்யுமா? ஈ) அவன் மனிதன்
61) வினைமுற்றுடன் பெயர்
தொடர்வது--------
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) வினைமுற்றுத்தொடர் ஈ) முற்றெச்சத்தொடர்
62) முற்றுப்பெறாத வினை,பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது----------
அ) வினைமுற்றுத்தொடர் ஆ) வினையெச்சத்தொடர்
இ) முற்றெச்சம் ஈ)
பெயரெச்சத்தொடர்
63) உண்டவர் உண்ண,
உண்கின்ற அனைவரும் மெய்ம்மறந்து போயினர்.அடிக்கோடிட்ட சொற்கள் முறையே
அ) வினையாலணையும் பெயர்,
வினையெச்சம், பெயரெச்சம்
ஆ) தொழிற்பெயர்,
வினையெச்சம், பெயரெச்சம்
இ) வினையெச்சம்,
பெயரெச்சம், வினையாலணையும் பெயர்
ஈ) பெயரெச்சம், வினையெச்சம், வினைத்தொகை
64) வேற்றுமைத் தொகாநிலைத்
தொடரைத் தேர்வு செய்க.
அ) அன்பே வா ஆ) காவிரி
பாய்ந்தது இ)
பள்ளிக்குச் சென்றாள்
ஈ) கேட்ட வினா
65) மற்றொருவர் என்பது
--------------- தொடர்.
அ) எண்ணுப்பெயர் ஆ) இடைச்சொற்றொடர்
இ) வினையாலணையும் பெயர் ஈ) வேற்றுமைத்தொடர்
66) பெயரெச்சங்களை----------
என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதால்--------உருவாகின்றன.
அ) செய்ய, வினையெச்சம் ஆ) செய்யும், பெயரெச்சம்
இ) செய, முற்றெச்சம் ஈ) செய,கூட்டுநிலைப்பெயரெச்சங்கள்.
67) அடுக்குத்தொடரைக் கண்டறிக.
அ) பலபல ஆ) பற்பல இ) பளபள ஈ) சல சல
68) பொழிந்த நெய்க்கண் வேவையொடு- இலக்கணக்குறிப்பு
அ) இறந்தகாலப் பெயரெச்சம் ஆ) இறந்தகால
வினையெச்சம்
இ) வேற்றுமைத்தொகை ஈ) உருவகம்
69) நோனாச் செரு என்பதன்
இலக்கணக் குறிப்பு
அ) வேற்றுமைத்தொகை ஆ) பெயரெச்சம்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
ஈ) எதிர்கால வினைமுற்று
70) சொல்லிசையளபெடைகளைத்
தேர்ந்தெடுக்க
அ) அசைஇ,அல்கி ஆ)
அசைஇ,கெழீஇ இ) கெழீஇ,அல்கி ஈ)
பரூஉ,அல்கி
71) வினைத்தொகையைக் கண்டறிக
அ) நன்மொழி ஆ) மற்றொன்று இ) பள்ளிசெல் ஈ) அலங்கு
கழை
72) இடைச்சொல் தொடரில்
இடைச்சொல்லுடன் தொடர்வது
அ) பெயர்,வினை ஆ)
வினா,விடை இ) பெயர்,வினா ஈ)
வினை,வினா
60) ஒரு சொல் இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட முறை அடுக்கித்தொடர்வது
அ) இரட்டைகிளவி ஆ) அடுக்குத்தொடர் இ) இரட்டுறமொழிதல் ஈ) உரிச்சொற்றொடர்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி