10 TH STD TAMIL FIRST MID TERM MODEL QUESTION PAPER-2

 

முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்-2

10.ஆம் வகுப்பு தமிழ்                            மதிப்பெண்கள்: 50                  கால அளவு: 1.30 மணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:                                                                   10×1=10

1. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்  இ) தாளும் ஓலையும்   ஈ) சருகும் சண்டும்

2. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.        

3. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ) குலைப்பெயர் வகை  ஆ) மணிப்பெயர் வகை  

இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை

4. பழமொழியை நிறைவு செய்க. ஒரு பானை----

அ) ஒரு சோறு   ஆ) பண்டம் குப்பையிலே  

இ) சோற்றுக்கு ஒரு சோறு பதம்  ஈ) தண்ணீர் குளிர்ச்சி

5. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்   ஈ) வானத்தையும் பேரொலியையும்

6. மகிழுந்து வருமா?' என்பது -------

அ) விளித்தொடர்  ஆ) எழுவாய்ந்தொடர்  இ) வினையெச்சத்தொடர்   ஈ) பெயரெச்சத்தொடர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க:

     தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

     இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

     மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

     முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

7. தென்னன் மகளே எனக் குறிப்பிடப்படுவது

) பாண்டியன்  ) தமிழ்  ) கடல்  ) தொல்காப்பியம்     

8. பாப்பத்து என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?   

) எட்டுத்தொகை  ) பத்துப்பாட்டு  ) பதினெண் கீழ்க்கணக்கு  ) சிற்றிலக்கியங்கள்

9. பாடலில் உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்க

) தென்னன் மகளே ஆ) தென்னன் இன்னறும்

) முன்னும் நினைவால்  ) மன்னும் சிலம்பே

10 . நற்கணக்கு இலக்கணக்குறிப்பு

) வினைத்தொகை  ) வேற்றுமைத்தொகை  ) பண்புத்தொகை  ) விளித்தொடர்

நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:                                                    4×2=8

11. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக

12. மென்மையான மேகங்கள்,துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

13 .தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

14. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

15. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

16. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி க்க:                                                      3×2=6

17. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

18.  எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

19. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க

    அ. பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்  

    ஆ. ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

20. எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

            . நாற்றிசையும் செல்லாத நாடில்லை   . ஐந்து சால்பு ஊன்றிய தூண்

21. கலைச்சொல் எழுதுக   . Vowel   . Land Breeze

மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி                                                3×4=12

22. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

23. உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய் ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

24. எழில்குமரனின் மகன் தமிழ்மேகன் தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு வேண்டி திருத்தணி பகுதியிலுள்ள துணியகம் ஒன்றில் விண்ணப்பிக்க விரும்புகிறார். அவருக்கு தன்விவரப்பட்டியல்  நிரப்பி உதவுக.

25. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

      கோலொடு நின்றான் இரவு     - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

26. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

கட்டுரை வடிவில் விடையளிக்க:                                                                                           1×8=8

27. . நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

(அல்லது)

. பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க

அடிமாறாமல் எழுதுக                                                                                                          4+2=6

28 ”அன்னை மொழியே…” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

(அல்லது)

     ”விருந்தினனாக…” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

29. “பல்லார்…” எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.

 பதிவிறக்க


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை