முதல்
இடைப்பருவத்தேர்வு 2025, சென்னை & செங்கல்பட்டு மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
7X1=7
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ) எழுவாய்த்தொடர் |
1 |
2. |
ஆ) மணிப்பெயர் வகை |
1 |
3. |
இ) எம்+தமிழ்+நா |
1 |
4. |
ஈ) பாடல் , கேட்டவர் |
1 |
5. |
இ)
பரிபாடல் |
1 |
6. |
அ) கருவளர்
– உரு அறிவாரா |
1 |
பகுதி-2 பிரிவு-1
3X2=6 |
||
7 |
சிலப்பதிகாரம், மனிமேகலை |
2 |
8 |
காற்று
உயிருக்கு நாற்று , தூய காற்று அனைவரின்
உரிமை (மாதிரி விடைகள்) |
2 |
9 |
அ. உலகிலேயே தமிழ்மொழிக்காக உலக
மாநாடு நடத்திய முதல் நாடு எது? ஆ. உலகக் காற்றாலை மின்
உற்பத்தியில் இந்தியா எவ்விடத்தைப்
பெற்றுள்ளது? ( மாதிரி விடை) |
2 |
10 |
·
செந்நெல் ·
வெண்ணெல் ·
கார்நெல் ·
சம்பா மற்றும் உள்வகைகள் ·
மட்டை |
2 |
11 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
பிரிவு-2
3X2=6 |
||
12 |
அ. கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள் ஆ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித்
தேர்வில் வென்றார் |
2 |
13 |
கொல்லாமை
– எதிர்மறை தொழிற்பெயர், உரை _ முதனிலை
தொழிற்பெயர் |
2 |
14 |
அ. நான்கு – ௪
ஆ. ஆயிரம் – க000 |
2 |
15 |
கட்டுரையைப்
படித்த (வேற்றுமை உருபு – ஐ) |
2 |
16 |
கிளர்ந்த– கிளர்
+ த் (ந்) + த்
+ அ கிளர் – பகுதி, த் – சந்தி,
த்(ந்) – ந் ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை அ – பெயரெச்சவிகுதி |
2 |
பகுதி-3 பிரிவு-1 3X3=9 |
||
17 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
18 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது |
3 |
19 |
அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை ,
தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை. |
3 |
20 |
அ.
ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு
மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே
அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன்
மண்டேலா ஆ.
மொழி என்பது
கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே
அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் |
3 |
21 |
அ.
ஊதைக்காற்று ஆ. வடக்கு இ. பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் |
|
பிரிவு-2 1X3=3 |
||
22 |
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! |
3 |
பகுதி-4 2X4=8
23 |
(மாதிரி
விடை) வள்ளுவன்
வாக்கில் ஒன்றைச் சொன்னது! காலம்
யாவும் கடந்து நின்றது! சிந்தனைச்
சிறகை விரித்துப்பார் என்றது! அறிவு
சிறக்க அறிந்துகொள் என்றது! என்னையும்
கவிஞனாக்க துணிந்து நின்றது! இது
வெறும் காட்சி மட்டுமன்று! என்
மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்! |
4 |
24 |
1.
நான் செல்லும் வழி இன்சொல்
வழி. 2.
என் நண்பர்களை இன்சொல்
வழியில் நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட
விடமாட்டேன் 4.
பிறர் மனம் மகிழும்படி
நடப்பேன் 5.
பிறருக்கு நன்மை செய்வேன் |
4 |
25 |
உங்கள் கிராமத்துக்கு நூலக வசதி வேண்டி பொது
நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக திருத்தணி, 29-06-2025. அனுப்புநர் செ. தமிழரசன், 50, அன்னை இல்லம், குமரன்
நகர், திருத்தணி, திருவள்ளூர்
மாவட்டம். பெறுநர் பொது
நூலக இயக்குநர் அவர்கள், பொது நூலகத்துறை
இயக்குநரகம், சென்னை-2. ஐயா, பொருள்: நூலக
வசதி வேண்டுதல் – சார்பு வணக்கம். எங்கள் ஊரில் எண்ணற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களும் உள்ளனர். அனைவரும் அவர்களது அறிவைபெருக்கி, வாழ்வில் முன்னேற்றமடைய கிளை நூலகம் அமைக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். |
4 |
26 |
திரண்ட கருத்து: கவிஞன் நானே காலத்தைக்
கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய்
அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை
உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல்,
அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை. மோனை
நயம்: செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து
ஒன்றி வருவது மோனை ஆகும். ü கவிஞன்-
கருப்படு ü இவை
சரி
- இவை
தவறாயின் எதுகை
நயம்: செய்யுளில் முதல் எழுத்து
அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதுஎதுகையாகும். ·
கருப்படு - பொருளை
- உருப்பட முரண்
நயம்: பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப் படுவது
முரண் ஆகும். ஆக்கல் × அழித்தல்
என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது. இயைபு
நயம்: அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும். ·
புகழுடைத் தெய்வம் ...பொருளென்
செல்வம் அணி
நயம்: கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக யானோர் காலக்கணிதம் என உருவகப்படுத்தி உள்ளதால்
இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது. ·
நானோர் புகழுடையத் தெய்வம் சந்த
நயம்: சந்தம் தமிழுக்குச்
சொந்தம் என்பதற்கு ஏற்ப,
இப்பாடலில் 'எண்சீர் கழிநெடிலடி' ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும்
பெற்றுள்ளது. |
4 |
பகுதி-5 2X6=12
27 |
புயலிலே ஒரு தோணி முன்னுரை: ப.சிங்காரம் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம்
உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான்
புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம் விடாது
பெய்த மழை: ·
கடுமையான வெயில் மறைந்தது, ·
மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. ·
மீண்டும் மீண்டும் மழை பெய்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து
நின்றனர். தள்ளாடிய
கப்பல் (தொங்கான்): ·
மழை பெய்வது அதிகரித்தது. ·
பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்!
என்று கத்துகிறான். ·
இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின. ·
கப்பல் தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின.. பயணிகளின் தவிப்பு: ·
கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு முறை
சுற்றிப்பார்த்தார். ·
பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். ·
கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை
என்றார். கரையைக்
காணுதல்: ·
ஐந்தாம் நாள் மாலையில் சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்
மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன. ·
அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. முடிவுரை: . புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள
வர்ணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக்
குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின. |
6 |
28 |
நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: ஒரு நாட்டின் வளமும், அங்கு பேசப்படும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் தேவநேயப்
பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. தேவநேயப்பாவாணர்: தமிழ்
மொழியின் பழமையை ஆராய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார்.
தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகள் தமிழ் மொழியின் பெருமையை
மிகுதிப்படுத்துகின்றன. சொல்வளத்திற்கான சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF”
என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் தமிழிலோ பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை
பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
பல்வேறு பகுதிகளைக் குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் உள்ளன . ü எண்ணற்ற
நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. ü சிறுதானியங்கள்
தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை:
சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் |
6 |
29 |
தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ் முன்னுரை: தமிழ் இன்றளவிலும்
கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக்
காண்போம். பிள்ளைத்தமிழ்: ·
கடவுளையோ,
அரசனையோ
அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப்
பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். ·
ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம்
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: ·
நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம்
என்று பெயர். ·
மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே
முதல் சதக நூலாகும். ·
இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் சதகத்தில் சிறப்புகளாகும். பரணி:
·
போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே
பரணி ஆகும். ·
செயங்கொண்டார் பாடிய
கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும். கோவை: ·
பாடலுக்கும்,
அடுத்த
பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை. ·
கி.பி எட்டாம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும். முடிவுரை: சான்றோர்கள் தமிழை
வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்
மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும் |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி