7 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-3 25-26

 7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்

வினா விடைகள்
இயல்-3

விடுதலைத் திருநாள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.வானில் முழுநிலவு அழகாக ----------  அளித்தது.

அ) தயவு இ துணிவு  ஆ) தரிசனம்   ஈ) தயக்கம்

2.இந்த-------முழுவதும் போற்றும்படி வாழவதே சிறந்த வாழ்வு.

அ) வையம்   ஆ) வானம்  ) ஆழி   ஈ) கானகம்

3.சீவனில்லாமல் - எனனும் சொல்லைப் பிரிந்து எழுதக் கிடைப்பது

அ) சீவ + நில்லாமல் ஆ)சீவன் + நில்லாமல் ) சீவன் +இல்லாமல்   ஈ) சீவ + இல்லாமல்

4.விலங்கொடித்து - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) விலம் + கொடித்து ஆ) விலம் + ஓடித்து இ விலன் + ஓடித்து ஈ) விலங்கு + ஓடித்து

5.காட்டை + எரித்து - என்பதனைச் சேர்த்தெழுதக கிடைக்கும் சொல்

அ) காட்டைஎரித்து ஆ) காட்டையெரித்து  )காடுஎரித்து   ஈ) காடுயெரித்து

6. இதம் + தரும் - என்பதனைச் சேர்த்தெழுதக கிடைக்கும் சொல்

அ) இதந்தரும்   ஆ) இதம்தரும்   ) இதத்தரும்   ) இதைத்தரும்

குறுவினா

1. பகத்சிங் கண்ட களவு யாது?

விடை: இன்று இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார்.

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

விடை:  அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என்று  மீரா குறிப்பிடுகிறார்.

சிறுவினா    

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

விடை:   

·        இந்தியத்தாய் சினத்துடன் தன்னுடைய கை விலங்கை உடைத்தாள்

·        பகைவரை அழித்து, தன்னுடைய கூந்தலை முடித்தாள், 

·        தன் நெற்றியில் திலகமிட்டுக் காட்சியளிக்கிறான்.

சிந்தனை வினா

நாட்டுப்பற்றை வளர்க்கும்  வகையில் விடுதலை நானை எவ்வாறு கொண்டாடலாம்?

விடை:  

·        விடுதாய் போராட்ட நிகழ்வுகளை நாடகமாக நடத்தலாம்

·        விடுதலை வீர்ரைப் போல வேடமிட்டு அவர் தம் செயல்களை எடுத்துக் கூறலாம்.

·        பேச்சுப் பேசட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்தலாம்.

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்

அ) தூத்துக்குடி   ஆ) காரைக்குடி   இ) சாயல்குடி  ஈ) மன்னார்குடி

2. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர்

அ) இராஜாஜி  ஆ) நேதாஜி  இ) காந்திஜி  ஈ) நேருஜி

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்

அ) இராஜாஜி   ஆ) பெரியார்  இ) திரு.வி.க  ஈ) நேதாஜி

குறு வினா

1. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

விடை: 

·        உண்மையை மறைக்காமல் பேசுபவர்

·        சுத்தத் தியாகி

2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படக் காரணம் யாது?

விடை:

ü  முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் வீர உரையாற்றினார்.

ü  அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர்.

ü  எனவே வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் அவருக்குத் தடைவிதித்தது.

3 . முத்துராமலிங்கர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

விடை:  

·        தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றுவார்

·        பல்துறை ஆகியவற்றில் ஆற்றல் உடையவராக விளங்கினார்.

சிறு வினா

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.

விடை:

ü  நேதாஜியைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

ü  இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

ü  விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்

2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?

விடை:

ü  23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.

ü  தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.

ü  அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

சிந்தனை வினா

சிறந்த தலைவருக்குரிய பண்புகள்எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

விடை:

ü  உரிமைக்காகப் போராடுதல்

ü  பொதுநல வாழ்வு

ü  சாதி, மத, இன,மொழி ஆகியன பாராமை

ü  நாட்டுப்பற்று

கப்பலோட்டிய தமிழர்

1. வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.

முன்னுரை:

   கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார்.

சுதேசக் கப்பல்

  ஆங்கிலேயர் கப்பல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார்.இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறை

   சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரது நண்பர்களையும்  சிறையில் அடைத்தது.

வ.உ.சிதம்பரனாரின் தியாகம்

   வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார்.  சிறையில் செக்கிழுத்தார்.சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார்.செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.

தமிழ்ப்பற்று

   வ.உ.சிதம்பரனார் சிரையிலும்  தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை 'மனம் போல் வாழ்வு' என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்..

முடிவுரை

   "பாயக் காண்பது சுதந்திர வெள்ளம்

    பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்"

          என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?  என்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார்.

ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.

அ) 40   ஆ) 42    இ) 44    ஈ) 46

2. 'எழுதினான்' என்பது _______.

அ) பெயர்ப் பகுபதம்  ஆ) வினைப் பகுபதம்  இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) வினைப் பகாப்பதம்

3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.

அ) நான்கு   ஆ) ஐந்து   இ) ஆறு   ஈ) ஏழு

4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.

அ) பகுதி   ஆ) விகுதி   இ) இடைநிலை   ஈ) சந்தி

பொருத்துக.

விடை:                     

1. பெயர்ப் பகுபதம் – பெரியார்

2. வினைப் பகுபதம் - வாழ்ந்தான்  

3. இடைப் பகாப்பதம் - மன்  

4. உரிப் பகாப்பதம் - நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

1. போவாள் – போ + வ் + ஆள்

போ - பகுதி          

வ் - எதிர்கால இடைநிலை        

ஆள் – பெண்பால் விகுதி  

2. நடக்கின்றான் - நட + க் + கின்று + ஆன்

ந ட - பகுதி

க் - சந்தி

கின்று – நிகழ்கால இடைநிலை

ஆன் – ஆண்பால் விகுதி

பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.

1. பார்த்தான் பார்+த்+த்+ஆன்

பார்பகுதி

த்- சந்தி

த்- இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி.

2. பாடுவார் பாடு+வ்+ஆர்

            பாடுபகுதி ,

வ்எதிர்கால இடைநிலை

ஆர்பலர்பால் விகுதி

குறுவினா

1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன ?

விடை: ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும்.  எ.கா. பூ

2. பதத்தின் இருவகை கள் யாவை ?

விடை: பகுபதம், பகாப்பதம் என பதம் இருவகைப்படும்.

3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?

விடை: பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.   

அவையாவன : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

4. விகுதி எவற்றைக் காட்டும்?

விடை: திணை, பால், முற்று , எச்சம்

5. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?

விடை:   பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன:

1. பெயர்பெயர்ப்பகுபதம்

2. இடப்பெயர்ப்பகுபதம்

3. காலப்பெயர்ப்பகுபதம்

4. சினைப்பெயர்ப்பகுபதம்

5. பண்புப்பெயர்ப்பகுபதம்

6. தொழில்பெயர்ப்பகுபதம்

மொழியை ஆள்வோம்

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

2. பொதுமக்கள் அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக் கொடி பறந்தது.

4. திருக்குறளை எழுதியவர் யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

எழுவாய்:

   வீரர்கள், பொதுமக்கள், பாண்டியனுடைய,  திருக்குறளை

பயனிலை:

    காத்தனர், எரித்தனர், பறந்தது, யார்?,

செயப்படுபொருள்:

   நாட்டைக் , அந்நியத் துணிகளைத், கொற்கைத் துறைமுகத்திலே, எழுதியவர்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

1. கண்ணன் பாடம் படித்தான். 

2. மேரி ஓவியம் வரைந்தாள்.

3. நான் கவிதை எழுதினேன். 

4. விதை விருட்சமாக வளர்ந்தது.

5. ஆசிரியர் செய்யுளைக் கற்பித்தார்.


கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

நான் விரும்பும் தலைவர் காமராசர்

முன்னுரை: 

கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார்.பல தலைவர்களை உருவாக்கியதால் பெருந்தலைவர் என்றழைக்கப் பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். 

இளமைக்காலம்:          

      காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. 

கல்விப்பணி: 

     பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார்  மாணவர்கள் உயர்கல்வி பெறப் பல கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்கினார் 

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:

·        மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.

·        அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.

·        மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். 

·        ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.

·        பல இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.

 முடிவுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்"

               என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.

மொழியோடு விளையாடு

இடைச்சொல் '' சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.

(எ.கா.) வீடு கட்டினான் - வீடு + ஐ + கட்டினான் -  வீட்டைக் கட்டினான்.

1. கடல் பார்த்தாள் - கடல் + ஐ + பார்த்தாள்  - கடலைப் பார்த்தாள்

2. புல் தின்றது  - புல் + ஐ + தின்றது - புல்லைத் தின்றது.

3. கதவு தட்டும் ஓசை - கதவு + ஐ + தட்டும் ஓசை - கதவைத் தட்டும் ஓசை.

4. பாடல் பாடினாள் - பாடல் + ஐ + பாடினாள் - பாடலைப் பாடினாள்.

5. அறம் கூறினார்  - அறம் + ஐ + கூறினார்  - அறத்தைக் கூறினார்

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை எழுதுக.

1.     கண்கண்ணழகு கண்ணுண்டு

2.    மண்மண்ணழகுமண்ணுண்டு

3.    விண்விண்ணழகுவிண்ணுண்டு

4.    பண்பண்ணழகு - பண்ணுண்டு

அகம் என முடியும் சொற்களை எழுதுக.            

1. நூலகம்   2. குறளகம்   3. நகலகம் 

4. அச்சகம்  5. துறைமுகம்   6. தமிழகம்

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் பால்களைக் கொண்டது.

2. எனது வயது கக

3. நான் படிக்கும் வகுப்பு

4. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.

5. திருக்குறளில் ௩௩ அதிகாரங்கள் உள்ளன.

6. இந்தியா ககூசஎ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.


1. மூதறிஞர்   - திருப்பூர் குமரன்

2. வீரமங்கை   - வேலுநாச்சியர்

3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் - கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்தவன்  - சின்னமலை

5. கொடிகாத்தவர்  - திருப்பூர் குமரன்

6. எளிமையின் இலக்கணம் - கக்கன்

7. தில்லையடியின் பெருமை  - வள்ளியம்மை

8. கப்பலோட்டிய தமிழர் - சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன் - பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர் - காமராசர்

11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி  - நாகம்மை

12. மணியாட்சியின் தியாகி - வாஞ்சி நாதன்

கலைச்சொல் அறிவோம்

1. கதைப்பாடல் -  Ballad

2. துணிவு -  courage

3. தியாகம் - sacrifice

4. அரசியல் மேதை - Political Genius

5. பேச்சாற்றல் -Elocution

6. ஒற்றுமை - Unity

7. முழக்கம்  - Slogan

8. சமத்துவம் -Equality

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை