7 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 16-06-2025 முதல் 20-06-2025
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : விரிவானம் (ஆளுக்கு ஒரு வேலை) ,
கற்கண்டு (குற்றியலுகரம்,குற்றியலிகரம்)
1.கற்றல் நோக்கங்கள் :
@ கலைகள் மூலம் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல்
Ø குற்றியலுகர, குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)
நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிக்கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே இலக்கணப் பகுதியைப் படித்தல்.
5.மனவரைபடம் :
@ உலகில் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கிறார்கள். மாணவர்களின் வேலை படிப்பதுதான்
8.மதிப்பீடு:
சிறுவன் முதலில் யாரை விளையாட அழைத்தான்?
குற்றியலுகரம் என்பது யாது?
குற்றியலுகர வகைகள் யாவை?
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பாடப்பகுதிகளில் இடம்பெற்ற குற்றியலுகரச்சொற்களை எழுதிவரச் செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 710 - பாடப் பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடி கண்டறிதல்
Ø 701, 709- பல்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்,ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி