7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-2

 7.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 07-07-2025 முதல் 11-07-2025        

மாதம்          ஜூலை         

வாரம்     :   இரண்டாம்  வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்     

தலைப்பு: நால்வகைக் குறுக்கங்கள் (கற்கண்டு)

1.கற்றல் நோக்கங்கள்:

     @ எழுத்துகள் குறுகி ஒலிக்கும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல்

2.கற்பித்தல் துணைக்கருவிகள்:

  வலையொளிப்பதிவுகள்,விளக்கக் காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம்:

மாத்திரை என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்:

                   இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

5.மனவரைபடம்:
நால்வகைக் குறுக்கங்கள்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
@ குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.
@ நமது பாடப்பகுதியில் ஐகாரக்குறுக்கம்,ஔகாரக் குறுக்கம்,மகரக் குறுக்கம்,ஆய்தக் குறுக்கம் ஆகியவற்றைப் பற்றி காண்போம்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • குறுக்கம் என்றால் என்ன? (MOT)

  • ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன? (HOT)

  • வரும் வண்டி- எவ்வகைக் குறுக்கம்? விளக்குக

9. குறைதீர் கற்றல்:

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

10.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

11.தொடர்பணி:

@ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்

12.கற்றல் விளைவு

   @ 720 - பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக


 எழுதும்பொழுது. பொருத்தமான சொற்கள்தொடரமைவுகள்சொற்றொடர்


மரபுத்தொடர்,  நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளைப் பொருத்தமாகப்


 பயன்படுத்துதல்


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை