7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-1

  7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 30-06-2025 முதல் 04-07-2025         

மாதம்         ஜூலை

வாரம்     :  முதல் வாரம்                                 

 வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :   1. தமிழரின் கப்பற்கலை

                                             2. விலங்குகள் உலகம்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø தமிழரின் கப்பல் கட்டும் தொழில்நுட்ப முறையை இலக்கியங்களின் வழி அறிந்து வியத்தல்

Ø  காடுகளும் காட்டு உயிர்களும் நாட்டின் உயிர்நாடி என்பதைப் புரிந்துகொள்ளுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø யாரெல்லாம் கடற்கரைக்குச் சென்றுள்ளீர்கள்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • உரைநடைப்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

தமிழரின் கப்பற்கலை
விலங்குகள் உலகம்
6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • நீர்வழிப்பயணம்

  • கப்பல் கட்டும் கலை

  • பாய்மரக்கப்பல்கள்

  • கப்பலின் உறுப்புகள்

  • செலுத்தும் முறை

  • விலங்குகளின் வாழ்விடமாகிய காடுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும்

  • யானையும் புலியும் வளத்தின் குறியீடுகள்


7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. தோணி என்பது எதைக்குறிக்கும்?
2. கப்பல் மாலுமியின் பெயர் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1. கப்பலுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் யாவை?
2. வளத்தின் குறியீடுகள் எவை ?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. காட்டு விளங்குகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

கப்பல் குறித்த புகைப்படங்களைத் தொகுத்துவரச் செய்தல்

12.கற்றல் விளைவு

   Ø 715- பல்வேறு கலைகளிலும் தொழில்களிலும் (கைத்தொழில்கட்டடக்கலைஉழவுநாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்.

Ø 701 - வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும்  செய்தல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை