6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE WEEK-4

6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 23-06-2025 முதல் 27-06-2025      

மாதம்         ஜூன்

வாரம்     : நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :   தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

1.கற்றல் நோக்கங்கள்   :

           Ø எழுத்துகளின் வகை, தொகைகளை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   

@ தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றி அறிதல் அவசியம்.

மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்:

@ இலக்கண வரையறையை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  படித்துக் காட்டுதல்

# ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

# தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

# எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:                    

தமிழ் எழுத்துகளின் வகையும்,தொகையும்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
      தமிழ் எழுத்துகள் முதலெழுத்துகள்,சார்பெழுத்துகள் என இரு வகைப்படும்.
         @ உயிர் 12 ம்,மெய் 18 ம் முதலெழுத்துகள் ஆகும்.
         @ சார்பெழுத்து 10 வகைப்படும்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) : 
  • உயிரெழுத்துகள் எத்தனை?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
@ முதலெழுத்துகள் என்றால் என்ன?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
# சார்பெழுத்து என்பது யாது?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பாடப்பகுதிகளில் மொழிப்பயிற்சிகளுக்கு விடை எழுதிவரச் செய்தல்.

12.கற்றல் விளைவு:

 Ø  620 -  பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை