10.ஆம்
வகுப்பு – தமிழ்
செய்யுள் நெடுவினாக்கள்
1.
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
கவிஞன் யானோர்
காலக் கணிகும்.
கருப்படு பொருளை
உருப்பட வைப்பேன்!
நானோர் புகழுடைத்
தெய்வம்
பொன்னிலும்
விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால்
இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின்
எதிர்ப்பதென் வேவை!
ஆக்கள் அளித்தல்
அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே
அறிந்தவை;
அறிக! - கண்ணதாசன்
திரண்ட கருத்து:
கவிஞன் நானே
காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு
உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம்.
பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை
எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
ü கவிஞன்- கருப்படு
ü இவை சரி - இவை தவறாயின்
எதுகை நயம்:
செய்யுளில் முதல்
எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதுஎதுகையாகும்.
·
கருப்படு
- பொருளை - உருப்பட
முரண் நயம்:
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப் படுவது முரண்
ஆகும். ஆக்கல் ×
அழித்தல்
என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.
இயைபு நயம்:
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ
இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
·
புகழுடைத்
தெய்வம் ...பொருளென் செல்வம்
அணி நயம்:
கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு
இணையாக யானோர் காலக்கணிதம் என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி
பயின்று வந்துள்ளது.
·
நானோர்
புகழுடையத் தெய்வம்
சந்த நயம்:
சந்தம் தமிழுக்குச்
சொந்தம் என்பதற்கு ஏற்ப,
இப்பாடலில் 'எண்சீர் கழிநெடிலடி' ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும்
பெற்றுள்ளது.
2.
இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச்
செவிசாய்ந்த நிகழ்வை நயத்துடன் எழுதுக
விடை:
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.
ü
இடைக்காடனார்
இறைவனிடம் முறையிட்டார்
ü
இறைவன்
கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.
ü
குலேச
பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.
ü
இறைவன்
குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்
ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
3. சந்தக் கவிதையில்
சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும்
கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து
அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!
விடை:
ü
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர்.
ü
சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார்.
ü
பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை
வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும்
அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.
ü
இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில்
செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்
4.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
|
மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் |
இக்கால வணிக வளாகங்கள் |
1 |
நறுமணப்
பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம்
செய்யப்பட்டன. |
நறுமணப்
பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன. |
2 |
பட்டு, பருத்தி நூல்
ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர். |
இன்றைக்கு
கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர். |
3 |
முத்துமணியும்
பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன. |
குளிரூட்டப்பட்ட
அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. |
4 |
எட்டு
வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன. |
எல்லாவித
பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன. |
5 |
மருவூர்
பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர். |
இன்றைய
வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும்
உள்ளனர். |
5.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்
பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி
கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்:
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான்.
பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி
அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும்
ஒருசேரப் பொழிந்தான்.
கருணையன்
தாயை இழந்து வாடுதல்:
இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.
கருணையனின்
தவிப்பு:
துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.
பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:
கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி