10.ஆம் வகுப்பு - தமிழ்
உரைநடை நெடுவினாக்கள்
1.
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று
விளக்குக.
நாட்டுவளமும்
சொல்வளமும்
முன்னுரை:
'நாடும்
மொழியும் நமதிரு கண்கள்'
என்கிறார் மகாகவி
பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம்
இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது
நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம்.
தேவநேயப்பாவாணர்:
தமிழ்
மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார்.
தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான
பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.
ஒரு நாட்டின் வளமும்,
அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய
பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.
சொல்வளத்திற்கான சில
சான்றுகள்:
ü
ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை
பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில்
கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப்
பெயர்களாக அழைக்கப்படுகின்றன.
ü
விளை
பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.
ü
பயிர்களின்
அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்
முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ü
செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என
எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது.
ü
தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்
முடிவுரை:
சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை
கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது
எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்
2.
நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை ஆள்வதால் ஏற்படும் பயன்கள்
மொழி வளத்தின் மகத்துவம்
முன்னுரை:
மனிதர்கள் ஒருவருடன் ஒருவர்
தொடர்புகொள்ளும் முக்கியமான கருவியாக மொழி விளங்குகிறது. மொழி என்பது வெறும்
வார்த்தைகளின் தொகுப்பல்ல;
அது ஒரு சமூகத்தின் கலாசாரம், அறிவு, உணர்வு, எண்ணங்கள் ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கும்
ஓர் அழகிய வலையமைப்பாகும்.
சொல்
வளத்தின் தேவையும் பயன்களும்:
v
நாம்
பேசும் மொழியில் அதிகமான சொற்களை கையாள்வதன் மூலம் நமக்குப் பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன.
முதன்மையாக, அது ஒரு தெளிவான தொடர்பை உருவாக்க உதவுகிறது.
v
ஒரே
கருத்தை பலவாறு வெளிப்படுத்தும் திறனைச் சொற்கள் அளிக்கின்றன. இது மற்றவர்களுடன்
உள்ள உறவுகளை வலுப்படுத்தும்.
v
உணர்வுகளை
நுட்பமாக வெளிப்படுத்தும் திறன்,
சொல் வளத்தால் ஏற்படுகிறது.
v
படைப்பு
திறன் வளர்ச்சிக்கும் சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கவிதை, சிறுகதை,
கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களில் எழுதியிட சொல் வளம் ஒரு
அடித்தளம் ஆகும்.
v
சொல்
வளம் ஒரு தனிமனிதரை மற்றவர்களை ஈர்க்கக்கூடிய திறனுடையவராக மாற்றுகிறது.
மொழியைப்
பேணும் வழி:
ஒரு மொழியின் செம்மையை,
இசையை, பண்பாட்டை புரிந்துகொள்வதற்கும்,
அதனைத் துல்லியமாகப் பேணுவதற்கும் சொல் வளம் மிக அவசியமானது. இது
நம் பூர்வீக மொழியை மீட்டெடுக்கவும், வளர்க்கவும் பெரிதும் உதவுகிறது.
அதிகமாக சொற்களை அறிந்து பயன்படுத்தும் பழக்கம், நம்மை
அறிவாளிகளாகவும், அழகாக உரையாடக்கூடியவர்களாகவும்
மாற்றுகிறது.
முடிவுரை:
மொழி என்பது நம்மை உலகிற்கு
அறிமுகப்படுத்தும் முகம். அந்த முகம் அழகாக, வண்ணமாக
இருப்பதற்கு, சொற்கள் என்பது சிறந்த அலங்காரங்கள். எனவே,
நம் மொழியில் அதிகமான சொற்களை கையாளும் பழக்கத்தை வளர்த்தெடுக்க
வேண்டும். இது நம்மை அறிவிலும், மனிதத் தொடர்பிலும்
வளமாக்கும்.
3.
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
காற்று மாசுபாட்டைத்
தடுக்கும் வழிமுறைகள்
முன்னுரை:
நாம் தினமும் சுவாசிக்கின்ற
காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில்
மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும்,
விலங்குகளும், மரங்களும்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க
நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
பசுமை பரப்புகளை
அதிகரித்தல்:
மரங்கள் காற்றில் உள்ள
கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக
மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல்,
புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.
பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்துதல்:
ஒவ்வொருவரும் தனித்தனியாக
வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப்
பதிலாக பேருந்து,
ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக
காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.
எரிபொருள்
சிக்கனமுடைய வாகனங்கள்:
மின்சார வாகனங்கள் மற்றும்
எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக்
கட்டுப்படுத்தலாம். பெட்ரோல்,
டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத்
தவிர்ப்பது நல்லது
தொழிற்சாலைகளில்
கட்டுப்பாடுகள்:
ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம்
வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.
ü மின் உலைகள், பசுமை
தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு
குறையும்.
குப்பைகளைச்
சரியாக நிர்வகித்தல்:
குப்பைகளை திறந்தவெளியில்
எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது
செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை
என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.
முடிவுரை:
காற்று மாசுபாட்டைத்
தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும்
முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான
காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள்,
நாளைக்கு நலமாக இருப்போம்!
4. காற்று
பேசியதைப்போல
, நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக
நிலம் பேசுகிறது
முன்னுரை
:
”அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை”
என்று வள்ளுவன் என்னை
பெருமைப்படுத்தி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பல்வேறு வகைகளில்
மனிதர்கள் என்னை மாசுபடுத்துவது என்னை வருத்தம் அடையச் செய்கிறது.
வேறு
பெயர்கள்:
நிலமாகிய எனக்கு அசும்பு, காசினி,
வட்டகை, கழனி, களர்
கொல்லை, சுரம், தகர் ,நத்தம் என்று பலவகைப் பெயர்கள் உண்டு. எனது மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப
நான் பெயரிட்டு அழைக்கப்படுகின்றேன்.
ஐவகை
நிலங்கள்:
நில மகளாகிய எனக்கு பழந்தமிழர்
குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல், பாலை
என்று பெயரிட்டு, எனது தன்மைக்கு ஏற்ப என்னை ஐவகை நிலங்களாக
வகைப்படுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு நான் இரண்டற கலந்து இருப்பது
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இலக்கியங்களில்
நான்:
v " நீலத்
திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும்
குமரி எல்லை"
என்று
மகாகவி கவிதையால் கொஞ்சியது என்னைத்தான்.
v
"
சிறு பல் தொல்குடி பெறுநீர் சேர்ப்பன்" என்று அகநானூறு
எனது வேறு வடிவமாகிய கடல் பகுதியை குறித்தது. இவை போன்று இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் என்னைப்பற்றி இருப்பது
எனக்கு பெருமிதம் அளிக்கிறது.
எனது
வருத்தம்:
v நான் மனிதர்களாகிய
உங்களுக்கு மரம்,
செடி ,கொடி வளரவும் பயிர்கள் விளையவும்
வேளாண்மைக்கு உற்ற நண்பனாகவும் விளங்குகின்றேன்.
v வற்றாத ஆறுகளையும்
குளங்களையும் ஏரிகளையும் தந்து மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறேன்.
v மேலும் எண்ணிலடங்கா
வளங்களை என்னுள் கொண்டிருக்கிறேன். அதை மனிதர்களாகிய நீங்களும் மிகுதியாகப் பயன்படுத்துகிறீர்கள்.
v ஆனால் மனிதர்களாகிய
நீங்களோ ரசாயன உரங்களை பயன்படுத்துதல், நெகிழிப்பைகளை மிகுதியாகப் பயன்படுத்துதல், மேலும்
ஆலைக் கழிவுகளை என்னுள் பாய்ச்சுதல் என்று பல வகைகளில் என்னை மாசுபடுத்துவது என்னை
ஆழ்ந்த துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.
எனது
வேண்டுகோள்:
v மனிதர்களின்
சுயநலத்திற்காக என்னை மாசுபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.
v நெகிழி பயன்பாட்டை
முற்றிலும் குறைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த துவங்குங்கள்
v மரங்களை வெட்டாமல்
இன்னும் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முற்படுங்கள்.
v என்னிலிருந்து அதிக
கனிம வளங்களைத் தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள்.
v
முடிவுரை:
மனிதர்களே என்னுள்
இருக்கும் வளங்களை எடுத்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக எண்ணிக் கொண்டால், எதிர்காலச்
சந்ததியினருக்கு என்னால் கிடைக்கும் எந்த நன்மையையும் என்னால் தர இயலாமல்
போய்விடும். எனவே என்னை மாசுபடுத்தாமல் என்னை முறையாகப்
பயன்படுத்துங்கள் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழி செய்யுங்கள்!!
5.
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன்
விளக்குக.
விடை:
தமிழர்களின் விருந்தோம்பல்
முன்னுரை:
விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர்
சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர்
கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால தமிழர்களின் விரும்பபோல்
பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.
தனித்து உண்ணாமை:
தனித்து உண்ணாமை
என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக்
கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.
விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:
விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக்
கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு
தமிழருக்கு உண்டு. இதனை,
”அல்லில் ஆயினும்
விருந்து வரில் உவக்கும்”
என்று நற்றிணை குறிப்பிடுகிறது.
வறுமையிலும் விருந்தோம்பல்:
ü
தமிழர்
வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.
ü
விதை
நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.
ü
வாளைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர்.
ü
கருங்கோட்டுச்
சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.
நிலத்திற்கேற்ற
விருந்து:
நெய்தல் நிலத்தவர் பாணர்களை
வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.
விருந்தை
எதிர்கொள்ளும் தன்மை:
வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு
உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும்
உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
“பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”
என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.
முடிவுரை:
பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக
விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி பெருமிதம் கொள்வோம்.
6.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை
அழகுற விவரித்து எழுதுக.
விடை:
வரவேற்பு:
விருந்தோம்பல்
என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக
என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள் அமர்வதற்கு
இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க
நீர் தந்தோம்.
கலந்துரையாடல்:
நாங்கள் அனைவரும்
காலை உணவு உண்டபின்,
வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம்
விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே
உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு
தயாரானது.
விருந்து உபசரிப்பு :
தமிழர் பண்பாட்டில்
வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான
உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து
அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.
நகர்வலம்:
விருந்தினருக்கு
சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை
வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை
பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்
இரவு விருந்து :
நகர்வலம் முடிந்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு
சுவைத்துச் சாப்பிட்டனர்.
பிரியா விடை :
இரவு விருந்து
முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய
மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.
7. தமிழின் இலக்கிய
வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் -
தமிழுக்குச் செழுமை.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம்
சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ்
ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
முன்னுரை :
ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு
துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல்
வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?
மொழிபெயர்ப்பும்
தொடக்கமும்:
'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை
வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை
முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை
மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு
இலக்கியங்கள்:
என்று சின்னமனூர்ச்
செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை
அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை
செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி,
கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி
கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.
மொழிபெயர்ப்பின் அவசியமும்
பயனும்:
மொழிபெயர்ப்பு எல்லா
காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள்
உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர்
அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள்.
இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.
எட்டுதிக்கும் செல்வீர்:
எட்டுத்திக்கும்
கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு
நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும்
பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மொழிபெயர்ப்புக் கல்வி:
மொழிபெயர்ப்பைக் கல்வியாக
ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை
நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி
ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.
முடிவுரை :
'உலக நாகரிக வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும்
மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.
8. போராட்டக் கலைஞர்
பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய
தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை:
கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர் எனப்
பன்முக ஆற்றல் கொண்டவர். "முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால்
போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்
தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும்
பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித்
திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள்
இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.
பேச்சுக் கலைஞர்:
v
மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
"நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும்
பாராட்டப்பட்டது.
v
பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க "சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்"
ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
நாடகக் கலைஞர்:
v
தமக்கே
உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான
பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம்,
வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை
எழுதினார்.
திரைக் கலைஞர்
v
கலைஞரின்
திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக
நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச்
செய்தார்
v
சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை
வசனம் எழுதினார்
இயற்றமிழ்க் கலைஞர்
தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக்
கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன்,
பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம்,
ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.
முடிவுரை
உடல் மண்ணுக்கு உயிர்
தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.
9. நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
முன்னுரை:
என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில்
நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க
நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்
சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு:
பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர். இது பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே
விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர்.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.
மாணவப் பருவமும்,
நாட்டுப் பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள்
தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு
வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும்.
முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க,
நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா
உருவாகும்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி