10 TH STD TAMIL QUESTION & ANSWER UNIT-1

 

10.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது  ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்

2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்  இ) தாளும் ஓலையும்   ஈ) சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

அ) எந்+தமிழ்+நா  ஆ) எந்த + தமிழ் +நா   இ) எம் + தமிழ் +நா   ஈ) எந்தம் + தமிழ் +நா

4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் விளையாலணையும் பெயரும் முறையே -

அ) பாடிய கேட்டவர்   ஆ) பாடல் பாடிய  இ) கேட்டவர்; பாடிய   ஈ) பாடல் : கேட்டவர்

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ) குலைப்பெயர் வகை  ஆ) மணிப்பெயர் வகை  இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை

குறுவினா

1. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

ü  பல கை என்று வந்தபோது கையைக் குறித்தது.

ü  பலகை என்று வந்தபோது மரப்பலகையைக் குறித்தது.

ü  தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது.

2. மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!

   முன்னும் தினைவால் முடிதாழ வாழ்த்துவமே! -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக

விடை: சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

விடை:

சரியான தொடர்கள்:

ü  ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன

ü  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

          பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.

4. "கொள்வோர் கொள்சு: குரைப்போர் குரைக்க!

     உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

பாடல் அடிகளில் உள்ள மோனை. எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

மோனைச்சொற்கள்: (சீர் மோனை)

          கொள்வோர் , கொள்க

            குரைப்போர், குரைக்க

எதுகைச் சொற்கள்: (அடி எதுகை)

          கொள்வோர் , உள்வாய்

5. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:


·        செந்நெல்  

·        வெண்ணெல்

·        கார்நெல்

·        சம்பா  மற்றும் உள்வகைகள்

·        மட்டை

சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

ஆகியனவற்றை தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுகிறார்

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

    இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க

விடை:

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3. அறிந்தது, அறியருந்து, புரித்தது. புரியாதது. தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.

விடை: அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

நெடுவினா

1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

நாட்டுவளமும் சொல்வளமும்

முன்னுரை:

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்'

            என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம்.

தேவநேயப்பாவாணர்:

          தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

            ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

ü  ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

ü  விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.

ü  பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ü  செந்நெல் வெண்ணெல் கார்னல் சம்பா மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது

ü  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

       சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்

2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக

களிஞன் யானோர் காலக் கணிகும்.

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

நாலோசர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேவை!

ஆக்கள் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!                  -  கண்ணதாசன்

திரண்ட கருத்து:

கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

ü  விஞன்- ருப்படு

ü  வை சரி - வை தவறாயின்

எதுகை நயம்:

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதுஎதுகையாகும்.

·        கருப்படு  -  பொருளை  - உருப்பட

முரண் நயம்:

பாட்டுக்கு முரண் செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப் படுவது முரண் ஆகும். ஆக்கல் × அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.

·        புகழுடைத் தெய்வம் ...பொருளென் செல்வம்

அணி நயம்:

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக யானோர் காலக்கணிதம் என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

·        நானோர் புகழுடையத் தெய்வம்

சந்த நயம்:

சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் 'எண்சீர் கழிநெடிலடி' ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

3. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

புயலிலே ஒரு தோணி

முன்னுரை:

தரைமேல் பிறக்க வைத்தான் -  எங்களைத்

   தண்ணீரில் பிழைக்க வைத்தான்

            பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்

விடாது பெய்த மழை:

கடுமையான வெயில் மறைந்து,இமை நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள  கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தள்ளாடிய கப்பல் (தொங்கான்):

           மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான்ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல் தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..

பயணிகளின் தவிப்பு:  

பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம்  தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான். அதற்கு கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.

கரையைக் காணுதல்:

            ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக   மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர  கப்பல்கள்  கரை முழுவதும் நின்றிருந்தன.

முடிவுரை:

இயற்கையைப் போன்று யாராலும் கொடுக்க முடியாது

       இயற்கை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது

 

தமிரோ?” என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.யா மஸ்தாஇன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார்புயலிலே ஒரு தோணி கதையில்  இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின.

கற்பவை கற்றபின்

(பக்க எண்:7)

2. நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை ஆள்வதால் ஏற்படும் பயன்கள்

மொழி வளத்தின் மகத்துவம்

முன்னுரை:

மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளும் முக்கியமான கருவியாக மொழி விளங்குகிறது. மொழி என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், அறிவு, உணர்வு, எண்ணங்கள் ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கும் ஓர் அழகிய வலையமைப்பாகும்.

சொல் வளத்தின் தேவையும் பயன்களும்:

v  நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை கையாள்வதன் மூலம் நமக்குப் பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன. முதன்மையாக, அது ஒரு தெளிவான தொடர்பை உருவாக்க உதவுகிறது.

v  ஒரே கருத்தை பலவாறு வெளிப்படுத்தும் திறனைச் சொற்கள் அளிக்கின்றன. இது மற்றவர்களுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்தும்.

v  உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் திறன், சொல் வளத்தால் ஏற்படுகிறது.

v  படைப்பு திறன் வளர்ச்சிக்கும் சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களில் எழுதியிட சொல் வளம் ஒரு அடித்தளம் ஆகும்.

v  சொல் வளம் ஒரு தனிமனிதரை மற்றவர்களை ஈர்க்கக்கூடிய திறனுடையவராக மாற்றுகிறது.

மொழியைப் பேணும் வழி:

      ஒரு மொழியின் செம்மையை, இசையை, பண்பாட்டை புரிந்துகொள்வதற்கும், அதனைத் துல்லியமாகப் பேணுவதற்கும் சொல் வளம் மிக அவசியமானது. இது நம் பூர்வீக மொழியை மீட்டெடுக்கவும், வளர்க்கவும் பெரிதும் உதவுகிறது. அதிகமாக சொற்களை அறிந்து பயன்படுத்தும் பழக்கம், நம்மை அறிவாளிகளாகவும், அழகாக உரையாடக்கூடியவர்களாகவும் மாற்றுகிறது.

முடிவுரை:

       மொழி என்பது நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முகம். அந்த முகம் அழகாக, வண்ணமாக இருப்பதற்கு, சொற்கள் என்பது சிறந்த அலங்காரங்கள். எனவே, நம் மொழியில் அதிகமான சொற்களை கையாளும் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இது நம்மை அறிவிலும், மனிதத் தொடர்பிலும் வளமாக்கும்.

(பக்க எண்: 14)

1. தேன், நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர் மொழிகளாக்குக.

1.     தேன் - தேன் எடுத்தான்

2.    நூல் - நூல் பல கல்.

3.    பை பை வாங்கினான்

4.    மலர் - மலர் பறித்தேன்.

5.    வா - விரைந்து வா.

2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

     (காண், சிரி, படி, தடு)

எ.கா: காண் - காட்சி, காணுதல், காணல், காணாமை

ü  சிரி- சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை

ü  படி - படிப்பு, படித்தல், படிக்காமை

ü  தடு - தடுப்பு, தடுத்தல், தடுக்காமை

3. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன் :  எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)

தம்பி           : கடைக்கு (தனிமொழி)

அண்ணன் :  இப்பொழுது என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி)

தம்பி          :   பருப்பு வாங்குகிறேன். (தொடர்மொழி)

அண்ணன் : எதற்கு? (தனிமொழி)

தம்பி           : பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் (தொடர்மொழி)

அண்ணன்: இன்று பருப்பு சோறு வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர்மொழி)

தம்பி          : சரி இன்று அம்மாவைப் பிரியாணி செய்து தரச்சொல்வோம். (தொடர்மொழி)

4. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.  இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

ü  அழைக்கும்  - அழைத்தல்

ü  ஏறுவேன்ஏறுதல்

ü  அமர்வேன்அமர்தல்

ü  பார்ப்பேன்  - பார்த்தல்

ü  எய்தும் - எய்தல்

5. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் - இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

1.     கட்டு - முதனிலைத் தொழிற்பெயர்

2.    சொட்டு -  முதனிலைத் தொழிற்பெயர்

3.    வழிபாடு- விகுதி பெற்ற தொழிற்பெயர்

4.    கேடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

5.    கோறல் - விகுதி பெற்ற தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்ப்பு:-

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

விடை : ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

விடை: மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

     தேறும் சிலப்பதி காமதை

ணிலே எம்முயிர்  ள்ளளவும்நிதம்

         ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை,மந்தை,கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

கற்குவியல்

புல்

புற்கட்டு

பழம்

பழக்குலை

ஆடு

ஆட்டுமந்தை

 

) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

விடை: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை: ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

விடை: நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

விடை: பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

) தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

விடை:          பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

விடை:          வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைக் தந்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழை முகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

விடை:          நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சிக் கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

விடை:          பூங்காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

விடை:          ஆவைப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிற்றைப் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

பொதுக்கட்டுரை

1. குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டுசான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

நயம் பாராட்டுக:-

          தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

                        தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

            ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

                        மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

            வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

                        தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

            தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

திரண்ட கருத்து:

            தேனை விட இனிய செந்தமிழ் மொழியே! தென்னாடு பெருமைக் கொள்ளும் தென்மொழியே! உடம்பில் ஒளிவிட்டு விளங்கும் உயர்ந்த மொழியே! உணர்வுக்கு உணர்வாக விளங்கும் மொழியே! வானை விட புகழைக் கொண்ட மொழியே! மாந்தர்களுக்கு இரு கண்களாக விளங்கும் நன்மொழியே! தானாகவே சிறப்புற்று விளங்கும் தனித்தமிழ் மொழியே! தழைத்து இனிது உயர்வாய் எம்மொழியே.

மையக் கருத்து:

            தமிழ்மொழியின் சிறப்புகளை கூறி, மொழி தழைத்து வளரும் தன்மையினைக் கூறுகிறார்.

மோனை :

            சீர் தோறும் அடி தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

            தேனினும்தென்னாடு

            னினும்ணர்வினும்

எதுகை :

            சீர் தோறும் அடி தோறும் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

இயைபு :

            அடிதோறும் சீரோ,எழுத்தோ,ஓசையோ ஒன்றி வருவது இயைபு.

            மொழியேமொழியே

சந்த நயம் :

            எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

அணி:

            மொழியின் சிறப்பாக உயர்வாக கூறியுள்ளமையால் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

மொழியோடு விளையாடு

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

தேன்மழை

பூ விலங்கு

பொன்செய்

பொன்விலங்கு

மணிவிளக்கு

பூமழை

மணிமேகலை

வான்மழை

 

எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,இரண்டு

’ ,

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

ஆயிரம்

000

 

அகராதியில் காண்க.    (அடவி, அவல், சுவல், செறு, பழனம், புறவு)

அடவி - காடு, திரள், தொகுதி, சோலை

அவல் -பள்ளம், விளைநிலம், குளம், நெல் இடியல்

சுவல் - பிடரி, முதுகு, மேடு, தொல்லை

செறு -வயல், குளம், பாத்தி, கோபம்

பழனம் - வயல், மருதநிலம், பொய்கை

புறவு - புறா, சிறுகாடு, முல்லைக்கொடி, பயிரிடும் நிலம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

 

 

                                                        

 

 

 

 

 

 

 

 

 

 

நிற்க அதற்குத் தக

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்

கலைச்சொல் அறிவோம்

1.     Vowel - உயிரெழுத்து

2.    Consonant – மெய்யெழுத்து

3.    Homograph – ஒப்பெழுத்து

4.    Monolingual – ஒரு மொழி

5.    Conversation - உரையாடல்

6.    Discussion – கலந்துரையாடல்

 DOWNLOAD PDF

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை