மூன்றாம் திருப்புதல் தேர்வு-2025
- இராணிப்பேட்டை
- வேலூர்
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- நாகப்பட்டிணம்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
|
ஆ. மணி வகை |
1 |
|
ஈ. புதுமை |
1 |
|
இ. குறிஞ்சி,
மருதம், நெய்தல் நிலங்கள் |
1 |
|
ஈ. கேட்ட
பாடல் |
1 |
|
ஈ. வானத்தையும்
, பேரொலியையும் |
1 |
|
அ. மலைபடுகடாம் |
1 |
|
இ. முல்லை |
1 |
|
இ. சிலப்பதிகாரம் |
1 |
|
இ. சரயு
நதி |
1 |
|
அ. இகழ்ந்தால்
என்மனம் இறந்துவிடாது |
1 |
|
அ. கருணையன்,
எலிசபெத்துக்காக |
1 |
|
ஆ. பெருஞ்சித்திரனார் |
1 |
|
இ. கனிச்சாறு |
1 |
|
அ. அந்தும்பி,
முந்துற்றோம் |
1 |
|
அ. வண்டு |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. வாழையின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஆ. விளியுடன் வினை தொடர்வது யாது? (மாதிரிகள்) |
2 |
17 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü
சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது (
பொதுமொழி) |
2 |
18 |
போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர்
ம.பொ.சி. |
2 |
19 |
வேளாண்மை செழிக்கவும்
மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர்
பண்பாட்டின் மகுடம் ஆகும். |
2 |
20 |
குருபீடம்,
யுகசந்தி, ஒருபிடி சோறு,உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா? |
2 |
21 |
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ. நேற்று
என்னைச் சந்தித்தவர் என் நண்பர். ஆ. ஊட்டமிகு
உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார் |
2 |
23 |
(மாதிரி விடைகள்) அ.
வளியை வாளியில் அள்ள முடியாது. ஆ. தோட்டினைத்
தொட்டுப் பார்த்தான் |
2 |
24 |
4 வகை-
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
2 |
25 |
அ.
புற ஊதாக்கதிர்கள் ஆ.
நம்பிக்கை |
2 |
26 |
முதற்பொருள்: நிலம்-முல்லை , பொழுது-மழைக்காலம் , மாலை கருப்பொருள்:
வரகு (உணவு) |
2 |
27 |
அ.
ஐந்து – ரு ஆ. எட்டு - அ |
2 |
28 |
கூத்துக்கலைஞர்
பாடத்தொடங்கியதும்,
கூடியிருந்த மக்கள் அமைதியாயினர் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
29 |
|
3 |
|||||||||||||||
30 |
·
சங்க இலக்கியங்கள் காட்டும்
அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ·
இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. ·
நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து
இன்றைக்கும் பொருந்தக்கூடியது. ·
மேற்கூறிய காரணங்களால் சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
|||||||||||||||
31 |
அ. தொண்ணூற்றாறு ஆ. பிள்ளைத்தமிழ் இ. ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்
பிள்ளைத்தமிழ் |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
33 |
ü நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
ü மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப்
பண்புத்தொகை ü பூங்கொடி-
அன்மொழித்தொகை ü ஆடுமாடு
–உம்மைத்தொகை ü குடிநீர்
– வினைத்தொகை ü மணி
பார்த்தாள் – இரண்டாம்
வேற்றுமைத்தொகை |
3 |
||||||||||||||||||||||||
36 |
நிரல்நிறை
அணி நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்
பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும். எ.கா. அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. -
குறள்: 45 பாடலின்
பொருள்: இல்வாழ்க்கை அன்பும் அறமும்
உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும்
அதுவே ஆகும். அணிப்பொருத்தம்: இக்குறளில்
அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும்
பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும். |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||
38 அ. |
ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் ஆ) கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது
கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான்.
பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி
அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும்
ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.
|
5 |
||
39
|
அ) முறையீட்டுக் கடிதம் அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின்
மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம். நான் அரக்கோணத்தில்
உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன். அங்கு வழங்கப்பட்ட
புலவுச் சோறு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது. அந்த
உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்: அரக்கோணம், நாள்: 08-01-2022. உறைமேல்
முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஆ) நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001 ஐயா, பொருள்: கட்டுரையை
வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் : 04-03-2021
உறை
மேல் முகவரி:
|
5 |
||
40 |
(மாதிரி) சிந்திக்கத்
தூண்டும் காட்சி! சிந்தையில்
நின்ற காட்சி! எதிர்காலத்தேவை
இக்காட்சி! உண்மையை
உணர்த்தும் காட்சி! மனதில்
வைத்தால் நமக்கு நன்மையை அளிக்கும் காட்சி! என்
கவிதைக்கு இரையான காட்சி! |
5 |
||
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||
42
அ. |
(
மாதிரி விடை) ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள் ü சாலைகளில்
இடப்பக்கம் வண்டிகள் செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்! அதுதான் முதல் விதி. ü சாலையின்
ஓரங்களில் இருக்கும் அடையாளப் பலகைகளைப் புரிந்து ஊர்திகளை இயக்கவேண்டும். ü மகிழுந்தில்
செல்பவர்கள் கட்டாயம் இருக்கைப்பட்டை அணியவேண்டும். அதுவே உயிர்ப் பாதுகாப்பு! ü காதுகளை
அடைத்தவாறு காதணி பேசிகளை அணிந்துகொண்டு பாடல் கேட்கவேண்டுமானால்
பின்னிருக்கையில் அமர்ந்து செல்லுங்கள் - ஊர்தியை இயக்கியவாறு அல்ல! ü சாலையில்
இடப்பக்கம் திரும்ப, முடிந்த அளவு இடப்பக்கம்
வந்த பிறகு,
வண்டியின்
இடப்புறச் சைகைவிளக்கை ஒளிரவிட்டவாறு, கண்ணாடியில்
கண்காணித்துக்கொண்டே இடப்பக்கமாகத் திரும்பவேண்டும். ஊர்தி
ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டியவை: v ஓட்டுநர்
உரிமம் v ஊர்தியின்
பதிவுச் சான்றிதழ் v ஊர்திக்குச்
செலுத்திய வரிச் சான்றிதழ் v ஊர்திக்
காப்பீட்டுச் சான்றிதழ் v மகிழுந்து,
சரக்குந்து
போன்ற வண்டிகள், அப்பகுதிகளில்
ஓட்டுவதற்கான இசைவுச் சான்றிதழ் ஆ) 1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக்
கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது
– நெல்சன் மண்டேலா. 2.
மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி,
அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக்
ப்ரெளன் |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. v திராவிட மொழிகளில் மூத்தது. v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை: v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம்
செய்ய வேண்டும். ஆ. மகளிர் நாள் விழா அறிக்கை நாள்: 28.01.2025 இடம்: பள்ளிக் கலையரங்கம் v மகளிர்
நாளை முன்னிட்டு, எங்கள்
பள்ளியில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டது. கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,
மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து
கொண்டனர். v விழாவிற்கு
தலைமை ஆசிரியர் வரவேற்புரை வழங்கி நிகழ்வை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து,
சிறப்பு விருந்தினராக வருகை தந்த இதழாளர்
கலையரசி அவர்கள் பெண்கள் சமூக வளர்ச்சியில் பெறும் இடத்தைப் பற்றி பேசினார்.
அவரது உரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல ஈர்ப்பு அளித்தது. v பின்னர்,
பள்ளி ஆசிரியர்கள் மகளிர் நாளின் சிறப்பைப்
பற்றி உரையாற்றி, மாணவிகள்
அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இறுதியாக,
மாணவத் தலைவர் நன்றியுரை வழங்கி விழாவை
நிறைவு செய்தார். v இந்த
நிகழ்வு மாணவர்கள் அனைவருக்கும் மகளிர் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்திய
ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது. |
8 |
44 |
அ.
முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய
அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. ஆ.
ü அறிவும் பண்பும் இறைவன்
நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன்
திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின்
உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற
பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று
அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள்
பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு
மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான
உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச்
செய்வோம். |
8 |
45 |
அ. கலைத்திருவிழா கட்டுரை
(அரசுப்பொருட்காட்சி எனக் கேட்கப்பட்டுள்ளது) முன்னுரை: கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன். அறிவிப்பு: நுழைவாயிலின் வழியாக
நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள்
எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை
உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ஓரிடத்தில்
அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின்
எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது நிகழ்த்தப்பட்ட கலைகள்: அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து
உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில்
நிகழ்த்தப்பட்டன. முடிவுரை: .கூட்ட நெரிசல் மிக
அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச்
சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு
அமைந்தது. ஆ. நூல்கள், செய்தித்தாள்கள்,
மற்றும் வானொலி: அறிவை விரிவாக்கும் ஊடகங்கள் முன்னுரை: நாம் வாழும் உலகம் தினசரி புதிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த
மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்திகளின் பங்கு முக்கியமானது.
மனிதர்களுக்கு அறிவை பரப்பி, உலக நிகழ்வுகளை புரிந்துகொள்ள
உதவும் ஊடகங்கள் பலவாக உள்ளன. செய்திகள்
அறிதல் பயன்பாடு: செய்திகளை தெரிந்து கொள்வது எளிமையான விஷயமாக
இருந்தாலும், அதனால் கிடைக்கும் பயன் அளப்பரியது. உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல்
மட்டுமல்லாமல், சமூக அறிவு, அரசியல்
நிலவரம், பொருளாதார வளர்ச்சி போன்றவையும் இதில் அடங்கும். செய்திகள்
பெறும் வகைகள்: செய்திகளை பெற பல்வேறு வழிகள் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை: v
செய்தித்தாள்கள் – இதன் மூலம் நாடு, உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, வர்த்தகம் போன்ற தகவல்களை பெறலாம். v
வார, மாத இதழ்கள் – சிறப்பு கட்டுரைகள், ஆய்வுகள், வாழ்க்கை முறையை மேம்படுத்தும் தகவல்களை
வழங்கும். v
வானொலி பயன்பாடு – உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள உதவும், குறிப்பாக கிராமப்புறங்களில் முக்கியமானது. குழு
விவாதங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்: செய்திகளை விவாதிப்பது, பகிர்வது சமூக மாற்றத்திற்கு
வழிவகுக்கும். மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க செய்திகளை அறிந்து கொள்ளும்
பழக்கம் மிக அவசியம். தகவல் பரிமாற்றம் ஏற்படும் போது, புதிய
யோசனைகள், சமூக மாற்றங்கள் உண்டாகின்றன. வாசிப்பை
நேசிப்போம் –
இல்லம் தோறும் நூலகம்: நூல்கள் மனித வாழ்க்கையில் அறிவு வழங்கும்
கருவியாக உள்ளன. புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதற்காக இல்லம் தோறும் ஒரு
சிறிய நூலகம் உருவாக்கலாம். இது வாசிப்பை ஊக்குவித்து அறிவை விரிவாக்கும். முடிவுரை: செய்திகளை அறிந்து கொள்ளும் வழிமுறைகளை
சரியாக பயன்படுத்தினால்,
சமூக முன்னேற்றத்திற்கும், அறிவு
விரிவாக்கத்திற்கும் அது பெரிதும் உதவும். புத்தகங்கள், செய்தித்தாள்கள்,
வானொலி போன்றவை நம்மை அறிவின் பாதையில் அழைத்து செல்லும் சிறந்த
ஊடகங்களாகும். |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி