QUARTERLY EXAM QUESTION PAPER & ANSWER KEY TIRUVALLUR DISTRICT 10 TH STD TAMIL

 10. ஆம் வகுப்பு - தமிழ்

காலாண்டுத்தேர்வு வினாத்தாள் & விடைக்குறிப்பு

திருவள்ளூர் மாவட்டம்

10ஆம் வகுப்புதமிழ்

திருவள்ளூர் மாவட்ட காலாண்டுப் பொதுத்தேர்வு – 2026

  உத்தேச விடைக்குறிப்பு

                                                               பகுதி – I                                             15×1=15

1. ) எம் + தமிழ் + நா.

2. ஆ. வான்வெளியில் பேரொலியில்

3. ) கிண்கிணி.

4. ) மொட்டின் வருகை.

5. ) சருகும் சண்டும்.

6. ஆ) 3,1,4,2

7. ) சிறுபாணாற்றுப்படை.

8. ) திணை வழுவமைதி.

9. ஆ) எழுவாய்த் தொடர்.

10. ) வினைத்தொகை.

11. ) பாடல்; கேட்டவர்.

12. ) காலக்கணிதம்.

13. ) கண்ணதாசன்.

14. அ) புகழ்ந்தால் – கழ்ந்தால்

15. எழுது’ – ஏவல் வினைமுற்று. (வினாத்தாளில் கொடுக்கப்பட்ட தேர்வுகளில் இது தெளிவாக இடம்பெறவில்லை.)

பகுதி – II     பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்                                                    4×2=8

16. விடைகளுக்கேற்ற வினாக்கள்:
) பெண்கள் எவ்வாறு விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்?
) மூசு என்பது எதைக் குறிக்கும்?

17. மென்மையான மேகங்கள் கடல் நீரைப் பருகி மேலெழுகின்றன; பெருமலைகளின் மீது தங்கி, மின்னல்இடியைத் துணிச்சலுடன் ஏந்தி, இருள் சூழ்ந்த மேகங்களாக உருமாறி, உலக உயிர்களின் துயர் நீங்க மழையாகப் பொழிகின்றன.

18. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்கள்:   “வாருங்கள்! வருக! அமருங்கள்! நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் உள்ளவர்கள் நலமா? உணவு உண்ணுங்கள்.”

19. மொழிபெயர்ப்பு பல மொழிகளுக்கிடையே அறிவு, கருத்து, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு ஆகியவற்றைப் பரிமாற உதவுகிறது. உலக அறிவைத் தமிழில் பெறவும், தமிழ்ச் சிந்தனைகளைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லவும் பயன்படுகிறது.

20. ) நெல்கூலம்.
    ) வேர்க்கடலைகடலை.
    ) காஞ்சிரைகாழ்.
     ) தென்னைதேங்காய்.

21. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
     இன்மை புகுத்தி விடும்.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்                                                    5×2=10

22. சிரித்துப் பேசினார்என்பது உவகை/மகிழ்ச்சி காரணமாகசிரித்துச் சிரித்துப் பேசினார்என அடுக்குத்தொடராகும்.

23. ) கொடுகோடு: “அளவுகோல் கொடு; கோட்டை நேராக வரையலாம்”
    ) சிலைசீலை: “சிலையைச் சுற்றிச் சீலையால் அலங்கரித்தனர்.”    (மாதிரி விடைகள்)

24. கிளர்ந்த = கிளர் + த்(ந்) + த் + .
       கிளர்பகுதி; த்சந்தி; ந்விகாரம்; த்இறந்தகால இடைநிலை; பெயரெச்ச விகுதி.

25. அ. Vowel – உயிரெழுத்து. ஆ.  Feast – விருந்து.    அ. பழக்குலை  ஆ. புற்கட்டு

26. ) நம் இந்தியத் திருநாட்டின் வாக்காளர்களுக்கும் வயதுபதினெட்டு (18) – க அ
)  அவசர ஊர்தி எண் – க0அ

27. ) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
    ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றார்.

28. ) பண்டம் குப்பையிலே.    ) அமுதமும் நஞ்சு.

பகுதி – III : பிரிவு – 1

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                             2×3=6

29. இளம்பயிர் வகைச் சொற்களைத் தொடரில் அமைத்தல்:


1. நெல் நாற்று வயலில் நடப்பட்டது.
2. மாங்கன்று நட்டு வைத்தேன்.
3. தென்னம்பிள்ளை நன்றாக வளர்கிறது.
4. வாழைக்குருத்து பசுமையாக இருந்தது.
5. சோளப் பைங்கூழ் வயலில் பசுமையாக வளர்ந்தது.

30.

1.        உயிராய் நான்மழையாய் நான்

2.        நானின்றி பூமியே சுழலாது 

3.       பூமித்தாயின் குருதி நான்.

31.

) தமிழ்நாடு பொருள்வளமுடையது என்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்குகிறது.
) கோதுமையின் வகைகள்: சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை.
) தமிழ்நாட்டு நெல் வகைகள்: செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை, கார். சம்பாவில் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா போன்ற பல உள்வகைகள் உள்ளன.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                             2×3=6

32.

·        திருவடியில் சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன.

·        இடையில் அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஒளிவீசுகின்றன.

·        பசும்பொன் போல் ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடுகிறது.

·        நெற்றியில் பொட்டுடன் வட்டவடிவச் சுட்டி அசைகிறது.

·        காதில் குண்டலங்களும் குழைகளும் அசைந்தாடுகின்றன.

·        உச்சிக் கொண்டையும் அதிலுள்ள முத்துகளும் ஆடுகின்றன; பவளம் போன்ற திருமேனியும் ஆட, முருகன் செங்கீரை ஆடுகிறான்.

33. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழன்னையைப் பழமைக்குப் பழமையான நறுங்கனியாகவும், குமரிக்கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாகவும், பாண்டிய மன்னனின் மகளாகவும், திருக்குறளின் பெருமைக்குரியவளாகவும் போற்றுகிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியச் செல்வங்களின் தாயாக இருப்பதாலும் தமிழன்னையை வாழ்த்துகிறார்.

34.

அ. அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

ஆ.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

     எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

     போமெனில் பின் செல்வதாதல்               

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

       ஒழுக்கமும் வழிபடும் பண்பே.      

பிரிவு – 3

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                             2×3=6

35. அறிந்தது அறிதல்; அறியாதது அறியாமை; புரிந்தது புரிதல்; புரியாதது புரியாமை; தெரிந்தது தெரிதல்; தெரியாதது தெரியாமை; பிறந்தது பிறத்தல்; பிறவாதது பிறவாமை.

36. எடுத்துக்காட்டு உவமையணி: ஒரு தொடரில் உவமையும் மற்றொரு தொடரில் உவமேயமும் வந்து, உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.
37. அலகிட்டு வாய்ப்பாடு:

 

சீர்

அசை

வாய்பாடு

1

ஒழுக்/கத்/தின்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

2

எய்/துவர்

நேர் +நிரை

கூவிளம்

3

மேன்/மை

நேர் + நேர்

தேமா

4

இழுக்/கத்/தின்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

5

எய்/துவர்

நேர் +நிரை

கூவிளம்

6

எய்/தாப்

நேர் + நேர்

தேமா

7

பழி

நிரை

மலர்

இத்திருக்குறள் மலர் என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் மட்டும் விடையளிக்கவும்                                                                5×5=25

38.அ. (மாதிரி விடை)

·        எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினரை அன்புடன் வரவேற்றேன்.

·        முதலில் அவர்களின் நலம் விசாரித்து, குடிக்கத் தண்ணீர் வழங்கினேன். பின்னர் பழம்/பானம் கொடுத்து இளைப்பாறச் செய்தேன்.

·        வீட்டில் தயாரித்த உணவை அன்புடன் பரிமாறினோம். அவர்களுடன் இனிமையாக உரையாடி, தேவையான உதவிகளைச் செய்து, மகிழ்ச்சியுடன் வழியனுப்பினோம்.

·        விருந்தோம்பல் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பாகும்.

) ஆள்வினை உடைமைவள்ளுவர் கூறும் கருத்து:

·        ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோறு சோர்வு அடையாதெ இருக்க வேண்டும் நற்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்

·        விடாமுயற்சி என்ற உயர் பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்

·        முயற்சி செய்தால் ஒருவருக்கு செல்வம் பெருகும் முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்

·        ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருப்பினும் அது இழிவன்று: அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

·        சோர்விலாவது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றி அடைவர்.

39. ) வாழ்த்து மடல்

                                                           7, பெரிய தெரு,

                                                              மயிலை,

                                                             10-06-2025.

அன்புள்ள நண்பா,

      நலம். நலம் அறிய ஆவல்.மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழ்களில் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.மரங்களின் பயன்களையும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக்கூறி, இருக்கிறாய்.

     நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். உயிர்வளியைக் காசுகொடுத்து வாங்கும் நிலை வராதபடி,நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்”,“மரங்களை அழிக்காதேஎன்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆக்கச் செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றைச் சுவாசிப்போம்.

                                                                இப்படிக்கு

                                                               உன் அன்புத் தோழன்

                                                                 .சங்கர்

உறைமேல் முகவரி:

பெறுநர்:                       .கண்ணன்,                         10 வடமலை தெரு,              திருநகர்,

மதுரை-11.

 

                                                                                                                        

 

 

 

 

 

) அனுப்புநர் , பெறுநர், ஐயா, பொருள், கடிதத்தின் உடல், இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

40. காட்சிக் கவிதைமாதிரி:
குடம் சுமக்கும் கிராமத்து மங்கை,
காலைப் பொழுதின் அமைதித் தங்கை;
நீரைச் சுமந்து நடைபோடும் அழகு,
உழைப்பில் மலரும் வாழ்வின் ஒளகு;
மண்ணோடு இணைந்த வாழ்வின் சிறப்பு,
பெண்ணின் உழைப்பே குடும்பத்தின் செழிப்பு.”

41. படிவத்தை உரிய விவரங்களுடன் நுரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

42. ) ஆங்கிலப் பகுதியின் தமிழாக்கம்:

            மரியாதைக்குரியவர்களே, என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.


) ‘பள்ளியில் நான்வீட்டில் நான்என்ற தலைப்பில் ஐந்து செயல்கள்:
1. பள்ளியில் ஆசிரியர்களை மதிப்பேன்.
2. பாடங்களை முறையாகக் கற்பேன்.
3. பள்ளித் தூய்மையைப் பேணுவேன்.
4. வீட்டில் பெற்றோருக்கு உதவுவேன்.
5. வீட்டில் பெரியோரை மதித்து அன்புடன் நடப்பேன்.

பகுதி – V : 8 மதிப்பெண் வினாக்கள்

43. ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:

·        காற்று மாசுபாட்டைத் தடுக்க மரங்களை அதிகமாக நட்டு வளர்க்க வேண்டும்.

·        வாகனங்களின் புகை வெளியீட்டைக் குறைக்க வேண்டும்; பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

·        தொழிற்சாலைகளில் கழிவுவாயுக்களைச் சுத்திகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். குப்பை, பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

·        சூரிய, காற்றாலை போன்ற தூய ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும்.

·        பசுமைப் பகுதிகளைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

) ‘செம்மொழி தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

·        மொழிபெயர்ப்பு தமிழின் இலக்கியம், அறிவியல், கல்வி, தொழில்நுட்பம் போன்ற பல துறைகளுக்கு உலக அறிவைக் கொண்டு வருகிறது. பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் அறியவும், தமிழின் சிறப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

·        பிறமொழிச் சொற்களையும் கருத்துகளையும் தமிழுக்கேற்ற வகையில் கொண்டு வருவதன் மூலம் சொல்வளம் பெருகுகிறது.

·        அறிவியல் கருத்துகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்வி வளங்கள் ஆகியவை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிதில் கிடைக்கின்றன. ஆகவே மொழிபெயர்ப்பு தமிழின் வளர்ச்சிக்கும் உலகத் தொடர்புக்கும் முக்கியமான கருவியாகும்.

44. ) ‘புயலிலே ஒரு தோணி

·        புயலின் போது கடல் கொந்தளித்து, காற்று வேகமாக வீசி, அலைகள் தோணியை மோதுகின்றன. இடி, மின்னல், காற்றின் சீற்றம், அலைகளின் ஓசை ஆகியவை தோணியில் பயணிப்போரின் அச்சத்தையும் போராட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன.

·        ஒலிக்குறிப்புச் சொற்கள் புயலின் தீவிரத்தை வாசகரின் கண்முன் கொண்டு வருகின்றன.

·        தோணி அலைகளோடு போராடிச் செல்லும் காட்சி, மனிதனின் துணிச்சலையும் உயிர் காக்கும் போராட்டத்தையும் உணர்த்துகிறது.

) ‘அன்னமையா’ – பெயரும் செயலும்:

·        அன்னம்என்பது உணவைக் குறிக்கும்.

·        பசியால் வாடிய பரமேஸ்வரன் என்ற மணிக்கு அன்னமையா தண்ணீரும் நீத்துப்பாகும் வழங்கி, பின்னர் சுப்பையாவின் புஞ்சைக்கு அழைத்துச் செல்கிறான்.

·        அங்கு கம்மஞ்சோறும் துவையலும் பகிர்ந்து வழங்கப்படுகின்றன.

·        பசியுடன் வந்தவருக்கு உணவு வழங்கியதால்அன்னமையாஎன்ற பெயர் அவரது செயலை மிகவும் பொருத்தமாக வெளிப்படுத்துகிறது.

·        அவரின் கருணையும் விருந்தோம்பலும் தமிழர் பண்பாட்டின் சிறப்பை உணர்த்துகின்றன.

45. ) ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ – கட்டுரை:

·        தமிழ் தொன்மையும் செழுமையும் கொண்ட செம்மொழியாகும். தமிழை வளர்த்த சான்றோர்கள் இலக்கியம், இலக்கணம், உரைநடை, கவிதை, காப்பியம், அறநூல் எனப் பல துறைகளில் அளப்பரிய பணியாற்றியுள்ளனர்.

·        சங்கப் புலவர்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற இலக்கியங்களை உருவாக்கினர். திருவள்ளுவர் திருக்குறள் வழியாக உலகப் பொதுமறையை வழங்கினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும், சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையையும் படைத்தனர்.

·        கம்பர், சேக்கிழார், குமரகுருபரர், பாரதியார், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்றோர் தமிழின் இலக்கிய வளத்தை மேலும் பெருக்கினர்.

·        தமிழ் மொழியின் சொல்வளத்தையும் பொருள்வளத்தையும் ஆய்ந்து பாதுகாத்த அறிஞர்களின் பணி குறிப்பிடத்தக்கது. சான்றோர் வளர்த்த தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது நமது கடமையாகும்.

ஆ) நூல் மதிப்புரைமாதிரி:

·        நூலின் தலைப்பு: அக்னிச் சிறகுகள்

·        ஆசிரியர்: அப்துல் கலாம்

·        நூல் வகை: தன்வரலாற்று நூல்

·        மையப்பொருள்: எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் கல்வி, உழைப்பு, விடாமுயற்சி மூலம் உயர்ந்த வாழ்க்கைப் பயணம்.

·        மொழிநடை: எளிமையானதும் ஊக்கமளிப்பதுமானதும்.

·        சிறப்பு: மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அறிவியல், கல்வி, உழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
முடிவுரை: மாணவர்கள் படிக்க வேண்டிய பயனுள்ள நூலாக இது அமைந்துள்ளது.

  விடைக்குறிப்பைப் பதிவிறக்க



 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை