TNTET PAPER-2 EDUCATION PSYCHOLOGY UNIT-1 QUESTION ANSWER & ONLINE QUIZ

 தாள்-2 கல்வி உளவியல்

அலகு-1 (குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்


1. குழந்தைப்பருவம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் எத்தகையக் காலமாகக் கருதப்படுகிறது?

(A) முழுமையான முதிர்ச்சி அடையும் காலம்

(B) கற்றல் மற்றும் பயிற்சியின் இறுதி காலம்

(C) வளர்ச்சிக்கான அடித்தளக் காலம்

(D) சமூகப் பண்புகளை மட்டும் பெறும் காலம்

2. வளர்ச்சியின் செயல்முறை குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

(A) வளர்ச்சி எப்போதும் கணிக்க முடியாதது.

(B) வளர்ச்சி முன்னறியத்தக்க மாதிரியைப் பின்பற்றுகிறது.

(C) வளர்ச்சிக்கு மரபு மட்டுமே காரணமாகும்.

(D) வளர்ச்சி வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட வயதில் நின்றுவிடுகிறது.

3. உடல் அமைப்பிலும் அதன் செயல்பாடுகளிலும் வளர்ச்சி எத்திசையில் நடைபெறுகிறது?

(A) மையத்திலிருந்து வெளிப்புறமாக

(B) தலை முதல் கீழ்நோக்கி

(C) காலிலிருந்து மேல்நோக்கி

(D) இடமிருந்து வலமாக

4. பின்வருவனவற்றை கால வரிசைப்படி முறைப்படுத்துக:

1. வளரிளம் பருவம்  2. குழவிப்பருவம்  3. ஆரம்பக் குழந்தைப் பருவம்  4. பிந்தைய குழந்தைப் பருவம்

(A) 2, 3, 4, 1

(B) 1, 2, 3, 4

(C) 2, 4, 3, 1

(D) 3, 2, 4, 1

5. பொருத்துக (வயது வரம்பு):

 (a) குழவிப்பருவம் |   - (i) 10 முதல் 12 வயது வரை

(b) ஆரம்பக் குழந்தைப் பருவம் | - (ii) 20 வயது முதல்

(c) பிந்தைய குழந்தைப் பருவம் | - (iii) பிறப்பு முதல் 3 வயது வரை |

(d) முதிர் பருவம் | -  (iv) 7 முதல் 9 வயது வரை |

(A) a-iii, b-iv, c-i, d-ii

(B) a-iii, b-i, c-iv, d-ii

(C) a-iv, b-iii, c-i, d-ii

(D) a-ii, b-iv, c-i, d-iii

6. 'பூப்படைதல்' (Puberty) பொதுவாக எந்தப் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது?

(A) பிந்தைய குழந்தைப் பருவம்

(B) வளரிளம் பருவம்

(C) முதிர் பருவம்

(D) குழவிப் பருவம்

7. பிந்தைய குழந்தைப் பருவத்தின் (Later Childhood Stage) வயது வரம்பு என்ன?

(A) 4 முதல் 6 வயது வரை

(B) 7 முதல் 9 வயது வரை

(C) 10 முதல் 12 வயது வரை

(D) 13 முதல் 19 வயது வரை

8. பிறப்புக்கு முந்தைய நிலை (Pre-natal Stage) என்பது எதிலிருந்து எதுவரை?

(A) பிறப்பு முதல் 1 வயது வரை

(B) கருவுறுதல் முதல் பிறப்பு வரை

(C) பிறப்பு முதல் 3 வயது வரை

(D) 3 வயது முதல் 6 வயது வரை

9. கூற்று (A): வளர்ச்சி கருவிலிருந்து கல்லறை வரை (womb)தொடர்கிறது.

   காரணம் (R): வளர்ச்சி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை (Principle of Continuous Development).

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்கு சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல.

(C) A சரி, ஆனால் R தவறு.

(D) A தவறு, ஆனால் R சரி.

10. வளர்ச்சியின் வேகம் (Rate of Development) குறித்து கீழ்க்கண்டவற்றுள் எதுசரியானது?

(A) வளர்ச்சி எல்லாப் பருவங்களிலும் ஒரே சீரான வேகத்தில் நடைபெறும்.

(B) வளர்ச்சியின் வேகம் எப்போதும் நிலையானது.

(C) வளர்ச்சி சில நேரங்களில் வேகமாகவும், மெதுவாகவும்.

(D) முதிர்ச்சி அடைந்த பிறகு வளர்ச்சி நின்றுவிடும்.

11. "இடைவெளிகளுடன் கூடிய வளர்ச்சி" (Fits and Starts) எதனை விளக்குகிறது?

(A) வளர்ச்சி எப்போதும் ஒரே சீராக இருக்கும்.

(B) வளர்ச்சியின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

(C) வளர்ச்சி தலை முதல் கால் வரை நடைபெறும்.

(D) வளர்ச்சி மரபை மட்டுமே சார்ந்தது.

12. மனித வளர்ச்சியில் 'வேகமான வளர்ச்சி' (Rapid Growth) மீண்டும் எப்போது ஏற்படுகிறது?

(A) ஆரம்பக் குழந்தைப் பருவத்தில்

(B) பிந்தைய குழந்தைப் பருவத்தில்

(C) பருவமுதிர்ச்சி தொடங்கும் வேளையில்

(D) முதிர் பருவத்தில்

13. வளர்ச்சியானது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் எவ்வாறு அமைகிறது?

(A) மிக மெதுவாக

(B) நிலையாக

(C) மிக வேகமாக

(D) மாற்றமில்லாமல்

14. "எல்லாக் குழந்தைகளும் ஒரே அளவில், ஒரே வேகத்தில் வளர்வது இல்லை"-இக்கூற்று எதனை வலியுறுத்துகிறது?

(A) தொடர்ச்சியான வளர்ச்சிக் கோட்பாடு

(B) தனிநபர் வேறுபாட்டுக் கொள்கை

(C) ஒருங்கிணைப்புக் கோட்பாடு

 (D) முதிர்ச்சிக் கோட்பாடு

15. ஒரு நபரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் வேகம் மற்றும் தரத்தை (Rate and Quality) நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது எது?

(A) உணவு முறை

(B) பள்ளிச் சூழல்

(C) மரபணுக்கள்

(D) நண்பர்கள்

16. வளர்ச்சி என்பது எவற்றின் இடைவினையின் (Interaction) விளைவு?

(A) மரபு + சூழல்

(B) மரபு x சூழல்

(C) பள்ளி + வீடு

(D) ஆசிரியர் + மாணவர்

17. முதிர்ச்சி (Maturation) என்பது எதைக் குறிக்கிறது?

(A) அனுபவத்தின் மூலம் ஏற்படும் மாற்றம்

(B) பயிற்சியால் விளையும் திறன்

(C) பிறப்பிலிருந்தே உயிரியல் ரீதியாக வெளிப்படுதல்

(D) சமூகப் பழக்கவழக்கங்களைக் கற்றல்

18. பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் ஏற்படும் நடத்தை மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

(A) முதிர்ச்சி

(B) கற்றல்

(C) வளர்ச்சி

 (D) மரபு

19. குழந்தையின் முழுமையான வளர்ச்சி (Holistic Development) எதன் அடிப்படையில் அமைகிறது?

(A) முதிர்ச்சி மட்டும்

(B) கற்றல் மட்டும்

(C) முதிர்ச்சி மற்றும் கற்றல்

(D) சத்தான உணவு மட்டும்

20. ஆசிரியர்கள் வளர்ச்சியைப் பற்றியும் அதன் பண்புகள் குறித்தும் அறிந்திருப்பது ஏன் அவசியம்?

(A) பாடத்திட்டத்தை முடிக்க

(B) குழந்தையின் வளர்ச்சிக்குப் பொறுப்பானவர்கள்

(C) பெற்றோரிடம் புகார் அளிக்க

(D) தேர்வு நடத்த

21. வளர்ச்சிக் கோட்பாடுகள் ஆசிரியர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?

(A) மாணவர்களைத் தண்டிப்பதற்கு

(B) குழந்தைகளின் எதிர்பார்பைப் புரிந்துகொள்ள

(C) நிர்வாகப் பணிகளைச் செய்ய

(D) விடுமுறை நாட்களைத் திட்டமிட

22. ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் (Phase of Development) எவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது?

(A) மகிழ்ச்சி மட்டும்

(B) சிரமங்கள் மற்றும் சவால்கள்

(C) முழுமையான அமைதி

(D) பின்னடைவு மட்டும்

23. ஒரு மனிதன் வாழ்வைத் தொடங்கும் நிலை:

(A) முழு உருவமாக

(B) சிறிய ஒற்றை உயிரணுவாக

(C) பல செல்களின் தொகுப்பாக

(D) நரம்பு மண்டலமாக

24. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:

(A) குழவிப்பருவம் 13 முதல் 19 வயது

(B) வளரிளம் பருவம் - பிறப்பு முதல் 3 வயது

(C) பிந்தைய குழந்தைப் பருவம் 10 முதல் 12 வயது

(D) முதிர் பருவம் - 4 முதல் 6 வயது

25. ஒரு குழந்தை 4 வயதில் பேசக் கற்கிறது, மற்றொரு குழந்தை 2 வயதில் கற்கிறது. இது எதைக் குறிக்கிறது?

(A) வளர்ச்சியில் பின்தங்கிய நிலை

(B) தனிநபர் வேறுபாடு

(C) தவறான வளர்ப்பு முறை

(D) மரபுக் கோளாறு

26. 7 முதல் 9 வயது வரையிலானப் பருவம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

(A) முன்-குழந்தைப் பருவம்

(B) ஆரம்பக் குழந்தைப் பருவம்

(C) பிந்தைய குழந்தைப் பருவம்

(D) வளரிளம் பருவம்

27. 20 வயது அல்லது முழு முதிர்ச்சி அடைந்ததிலிருந்து முதுமைக்காலம் வரை உள்ள பருவம்:

(A) வளரிளம் பருவம்

(B) முதிர் பருவம்

(C) பிந்தைய குழந்தைப் பருவம்

(D) வளரிளம் பருவம்

28.கூற்று (A): ஆசிரியர்கள் வளர்ச்சியைப் பற்றியும் அதன் பண்புகள் குறித்தும் அறிந்திருப்பது அவசியமாகும்.

காரணம் (R): பள்ளியின் நிர்வாகப் பணிகளைச் செய்வதே ஆசிரியரின் முதன்மைப் பணியாகும்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்கு சரியான விளக்கம்,

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல.

(C) A சரி, R தவறு.

(D) A தவறு, R சரி.       

29. கூற்று (A): வளர்ச்சி ஒரு தொடர்ச்சியானச் செயல்முறை (Continuous Process) ஆகும்.

காரணம் (R): வளர்ச்சி கருவிலிருந்து கல்லறை வரை (womb to tomb) முறையற்ற இடைவெளி இல்லாமல் தொடர்கிறது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்கு சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல.

(C) A சரி, R தவறு.

(D) A தவறு, R சரி.

30. கூற்று (A): ஒரு நபரின் வளர்ச்சி என்பது அவரது மரபு (heredity) மற்றும் சூழல் (environment) ஆகியவற்றின் இடைவினையின் விளைவு ஆகும்.

காரணம் (R) : மரபணுக்கள் மட்டுமே ஒருவரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் வேகம் மற்றும் தரத்தை முழுமையாக நிர்ணயிக்கின்றன; சூழலுக்கு இதில் பங்கு இல்லை.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்கு சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல.

(C) A சரி, R தவறு.

(D) A தவறு, R சரி.

31. "வளர்ச்சி" (Growth) மற்றும் "முன்னேற்றம்" (Development) குறித்த ஒப்பீட்டில், 'அளவியல் மாற்றங்கள்' (Quantitative changes) எதனுள் அடங்கும்?

(A) முன்னேற்றம் மட்டும்

(B) வளர்ச்சி மட்டும்

(C) நடத்தை மாற்றங்கள்

(D) முதிர்ச்சி

32. சுற்றுச் சூழல் தாக்கங்கள் மரபணுக்களின் வெளிப்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராயும் உயிரியலின் வளர்ந்து வரும் துறை எது?

(A) நடத்தை மரபியல் (Behavioural Genetics)

(B) சமூக மரபுரிமை (Social Heritage)

(C) மேல் மரபியல் (Epigenetics)

(D) செல் உயிரியல் (Cytology)

33."என்னிடம் நலமான சில குழந்தைகளைக் கொடுங்கள்... அவர்களைப் பேரறிஞர்களாகவோ, பெருங் குற்றவாளிகளாகவோ நான் மாற்றிக் காட்டுகிறேன்" என்று கூறியவர் யார்?

(A) மார்கன் (Morgan)

(B) வாட்சன் (Watson)

(C) மெண்டல் (Mendel)

(D) கோல்மன் (Coleman)

34. மனித செல்களில் எத்தனை ஜோடி குரோமோசோம்கள் உள்ளன?

(A) 46 ஜோடிகள்

(B) 23 ஜோடிகள்

(C) 22 ஜோடிகள்

(D) 40,000 ஜோடிகள்

35. கோல்மன் அறிக்கையின்படி (Coleman Report), ஒரு பள்ளிக்கும் மற்றொரு பள்ளிக்கும் கல்விச் சாதனையில் காணப்படும் வேறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என்ன?

(A) ஆசிரியரின் கற்பித்தல் முறை

(B) பள்ளியின் உள்கட்டமைப்பு

(C) குழந்தைகளின் முன்னறிவு வேறுபாடு

(D) அரசாங்கக் கொள்கைகள்

36. "ஒத்த இயல்பு ஒத்த இயல்பினையே உருவாக்கும்" என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?

(A) பிரான்சிஸ் கால்டன்

(B) கார்ல் பியர்சன்

(C) கிரிகோர் மெண்டல்

 (D) ப்ளூம்

37. ஆய்வாளர்கள் மற்றும் அவர்களின் கருத்துகளைப் பொருத்துக:

(a) வாட்சன்  - (i) ஒத்த இயல்பு ஒத்த இயல்பினையே உருவாக்கும்

(b) கிரிகோர் மெண்டல் - (ii) ஜீன்களின் பண்புகள் ஆய்வு

(c) கோல்மன் - (iii) சூழ்நிலைவாதம்

(d) மார்கன் - (iv) குழந்தைகளின் முன்னறிவு வேறுபாடு

(A) (a-iii), (b-i), (c-iv), (d-ii)

(B) (a-i), (b-ii), (c-iii), (d-iv)

(C) (a-iii), (b-iv), (c-i), (d-ii)

(D) (a-ii), (b-iii), (c-iv), (d-i)

38. கூற்று (A): ஒரே பெற்றோருக்குப் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை ஆகியோரிடம் மரபுநிலைப் பண்புகளில் வேறுபாடுகள் காணப்படும்.

காரணம் (R): பாலணுக்கள் முதிர்ச்சி பெறும்போது நிகழும் 'குறைவுப்பகுப்பு' (Reduction division) நிகழ்வில், ஒவ்வொரு ஜோடியிலும் எந்த குரோமோசோம் தள்ளப்படுகிறது என்பது மாறுபடும்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A-விற்கு சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A-விற்கு சரியான விளக்கமல்ல.

(C) A சரி, R தவறு.

(D) A தவறு, R சரி.

39. கூற்று (A): முன்னேற்றம் (Development) என்பது உடல் வளர்ச்சி (Growth) இல்லாமலும் சாத்தியம்.

   காரணம் (R): சில குழந்தைகள் உயரம், எடையில் அதிகரிக்காமல் இருந்தாலும், சமூக மற்றும் அறிவாற்றல் துறைகளில் மேம்பாடு அடைவதைக் காணலாம்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A-விற்கு சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; R விளக்கம் அல்ல.

(C) A சரி, R தவறு.

(D) A தவறு, R சரி.

40. கூற்று (A): பெற்றோர் வெளிப்படையாகக் காட்டாத சில பண்புகள் குழந்தைகளிடம் வெளிப்படையாகத் தோன்றக்கூடும்.

காரணம் (R): மரபுநிலைப் பண்புகள் சில சந்ததிகள் பின்னடைந்து (recessive/skipped) அடுத்த சந்ததிகளில் வெளிப்படுவதும் உண்டு.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A-விற்கு சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; விளக்கம் அல்ல.

(C) A சரி, R தவறு.

(D) A தவறு, R சரி.

41. ஒரு ஆசிரியர், "இந்த மாணவன் ஒரு ஏழைக்குடும்பத்திலிருந்து வருகிறான், இவனால் நன்றாகப் படிக்க முடியாது, இவன் புத்திசாலித்தனம் குறைவு" என்று கருதி, அவனது வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருக்கிறார். இந்த ஆசிரியரின் மனப்பான்மை எதைச் சார்ந்தது?

(A) சமூக மரபுரிமை

(B) தீவிர சூழ்நிலைவாதம்

(C) தீவிர மரபுநிலைவாதம்

(D) மேல் மரபியல்

42. ஒரு வகுப்பறையில் இரட்டையர்களான 'ராமு' மற்றும் 'சோமு' படிக்கிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி உள்ளனர் (Identical). ஆனால் ராமு அமைதியாகவும், சோமு துடிப்பாகவும் உள்ளான். இந்த வேறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்?

(A) அவர்களின் மரபணு வேறுபாடு

(B) சூழல் மற்றும் அனுபவங்களின் தாக்கம்

(C) பள்ளியின் வேறுபாடு

(D) குரோமோசோம் எண்ணிக்கை மாற்றம்

43. ஒரு குழந்தை உயரம் மற்றும் எடையில் சராசரி அளவை விடக் குறைவாக உள்ளது, ஆனால் மொழித்திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனில் மிகச் சிறப்பாக உள்ளது. இக்குழந்தையின் நிலை எதை உணர்த்துகிறது?

(A) வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றம் சாத்தியம்

(B) முன்னேற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியம்

(C) வளர்ச்சியும் முன்னேற்றமும் ஒன்றுக்கொன்று இணையானது

(D) மரபுநிலை குறைபாடு

44. வாட்சனின் (Watson) சவாலை ஏற்று, ஒரு ஆசிரியர் ஒரு குழந்தையைச் சிறந்த மருத்துவராக மாற்ற விரும்புகிறார். அவர் எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

(A) குழந்தையின் பரம்பரை வரலாற்றில்

(B) குழந்தைக்கு வழங்கப்படும் சூழல் மற்றும் பயிற்சியில்

(C) குழந்தையின் பெற்றோரின் உடல்நலத்தில்

(D) குழந்தையின் குரோமோசோம் ஆய்வில்

45. ஒரு மாணவனின் தந்தை பெரிய கணித மேதை. ஆனால் அந்த மாணவன் கணிதத்தில் சராசரிக்கும் குறைவாகவே மதிப்பெண் பெறுகிறான். இது எதைக் குறிக்கிறது?

(A) ஒத்த இயல்பு ஒத்த இயல்பை உருவாக்கும்

(B) மரபுநிலை மாறுபடுதல்

(C) சூழ்நிலை மட்டுமே காரணம்

(D) ஆசிரியர் தவறு

46. ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குத் தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கிறார். இதன் மூலம் அவர் மாணவர்களுக்கு எதை வழங்குகிறார்?

(A) உயிரியல் மரபுரிமை

(B) ஜீனோம் வரைபடம்

(C) சமூக மரபுரிமை

(D) மரபுநிலை மாற்றங்கள்

47. சூழ்நிலைவாதிகள் (Environmentalists) குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

(A) மனித வளர்ச்சியின் தன்மை சூழ்நிலையின் இயல்பைச் சார்ந்தே இருக்கும்.

(B) மரபுநிலையின் பங்கு மிகக் குறைவானது என்று கருதுகின்றனர்.

(C) ஒரு மனிதரால் செய்யக்கூடிய செயல்களைப் பிற மனிதர்களாலும் செய்ய முடியும்.

(D) நல்ல பரம்பரையில் பிறந்தவர்கள் மட்டுமே அறிவாளிகளாக முடியும் என்று நம்புகின்றனர்.

48. கீழ்க்கண்டவற்றுள் எது 'சமூக மரபுரிமை' (Social Heritage) ஆகாது?

(A) இலக்கியம்

(B) சமயக் கோட்பாடுகள்

(C) கண் நிறம் மற்றும் இரத்த வகை

(D) பழக்கவழக்கங்கள்

49. ஒரு கரு இரட்டையர்கள் (Monozygotic Twins) உருவாவதற்கான காரணம்:

 (A) இரு வேறு விந்தணுக்கள் இரு முட்டைகளைக் கருவுறச் செய்தல்.

(B) ஒரு கருவுற்ற முட்டை தாயின் வயிற்றில் வளரத் தொடங்கும் நிலையிலேயே இரண்டாகப் பிரிவது.

(C) குரோமோசோம் எண்ணிக்கை 46-லிருந்து 23 ஆவது.

(D) வெவ்வேறு பெற்றோரின் ஜீன்கள் கலப்பது.

50. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது 'முன்னேற்றம்' (Development) என்பதைச் சரியாக விளக்குகிறது?

(A) எடையைக் கிலோகிராமில் அளவிடுதல்.

(B) உயரத்தை சென்டிமீட்டரில் அளவிடுதல்,

(C) குழந்தையின் செயல்பாடு மற்றும் நடத்தையில் ஏற்படும் தரமான மாற்றம்.

(D) 18 வயதுடன் நின்றுவிடுவது.

51. மரபுநிலை மாற்றங்களுக்கு (Variation) ஒரு காரணம்:

(A) பள்ளிக்கூடம்

(B) குன்றல்பகுப்பின்போது குரோமோசோம்கள் தள்ளப்படுதல் மற்றும் இணைதல்

(C) சத்தான உணவு

(D) நல்ல உடை

52. கூற்று (A): வாட்சன் (Watson) எனும் அறிஞர், குழந்தைகளை எத்தன்மையுடையவர்களாக வளர வேண்டும் என்று முன்பே சொன்னால், அவர்களைப் பேரறிஞர்களாகவோ அல்லது பெருங் குற்றவாளிகளாகவோ மாற்றிக் காட்டுவதாகக் கூறினார்.

காரணம் (R): வாட்சன், மனித வளர்ச்சியில் மரபுநிலையை விடச் சூழ்நிலைக்கே (Environment) முழுமையான முக்கியத்துவம் அளித்தார்; மரபுநிலை பற்றி அவருக்குக் கவலை இல்லை.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

53. கூற்று (A): சில பெற்றோரிடம் வெளிப்படையாகக் காணமுடியாத பண்புகளைக் குழந்தைகளிடம் காணமுடிகிறது.

காரணம் (R): சில மரபுநிலைப் பண்புகளைப் பெற்றோர் வெளிப்படையாகக் காட்டாமல் தேக்கி வைத்திருப்பர்; இப்பண்புகள் அக்குழந்தைகளிடம் வெளிப்படையாகத் தோன்றக்கூடும்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

 (D) A தவறு; ஆனால் R சரி.

54. கூற்று (A): ஒரே பெற்றோருக்குப் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை ஆகியோரிடம் மரபுநிலைப் பண்புகளில் ஓரளவு வேறுபாடுகள் காணப்படும்.

காரணம் (R): பாலணுக்கள் முதிர்ச்சி அடையும் போது, ஒவ்வொரு ஜோடி குரோமோசோம்களிலிருந்தும் எந்த ஒரு குரோமோசோம் தள்ளப்படுகிறது (குறைவுப்பகுப்பு) என்பது ஒரு குழந்தைக்கும் மற்ற குழந்தைக்கும் மாறுபடும்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

55. கூற்று (A): ஒரு கரு இரட்டையர்களிடம் (Identical Twins) மரபுநிலைப் பண்புகள் ஒத்துக் காணப்படும்.

காரணம் (R): ஒரு கருவுற்ற முட்டை தாயின் வயிற்றில் வளரத் தொடங்கும் நிலையிலேயே இரண்டாகப் பிரிந்து இரட்டைக் குழந்தைகளாக வளர்வதால் இவர்கள் உருவாகிறார்கள்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

56. கூற்று (A): கல்வியின் வழியே ஒருவன் பெறும் நற்பண்புகள் நேரடியாக அவனது சந்ததியினருக்குச் செல்வதில்லை.

காரணம் (R): கல்வி, 'சமூக மரபுரிமை' (Social Heredity) எனப்படும் இலக்கியம், நுண்கலைகள், அறநெறிகள் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்குப் பெருக்குவதற்கு மட்டுமே துணைபுரிகிறது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

57. பட்டியல் | மற்றும் பட்டியல் | ஐப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ளக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

 (a) அளவியல் மாற்றம் (Quantitative)  - (i) செயல்பாடு மற்றும் நடத்தை மேம்பாடு.

(b) பண்பு மாற்றம் (Qualitative)  - (ii) நீளம், உயரம் மற்றும் எடையில் அதிகரிப்பு.

(c) வளர்ச்சி இல்லாத முன்னேற்றம் - (iii) உடல் வளர்ச்சியை ஏற்படுத்தினாலும் செயல்திறன் முன்னேற்றம் இல்லை.

(d) முன்னேற்றம் இல்லாத வளர்ச்சி குறியீடுகள்: - (iv) உடல் அளவில் அதிகரிக்காமல் செயல்திறன் மேம்பாடு அடைதல்.

(A) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)

(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)

(D) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

58. H.E. கேரட் (H.E. Garret) அவர்களின் கூற்றுப்படி, சமூகமயமாதல் அல்லது சமூகப் பண்புகள் வளர்ச்சி என்பது எதைக் குறிக்கிறது?

(A) சமூக அளவில் முதிர்ச்சி நிலையை அடைவது

(B) உயிரியல் ரீதியான ஒரு தனிநபர் நல்ல மனிதனாக மாறும் நடைமுறை

(C) குழுவினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக மாறுதல்

(D) சமூகத் திறன்களைக் கற்றல்

59."சமூகப் பண்புகள் என்பது சமூக அளவில் முதிர்ச்சி நிலையை அடைவதாகும்" -என்று வரையறுத்தவர்

(A) H.E. கேரட் (Garret)

(B) பவுலி (Bowely)

(C) .பி.ஹர்லாக் (E.B. Hurlock)

(D) பியாஜே (Piaget)

 

60. கூற்று மற்றும் காரணம்:

கூற்று (A): சமூகமயமாதல் என்பது ஒரு குழந்தை சமூக வாழ்க்கைக்குத் தேவையான மனநிலையையும், திறனையும், மதிப்புகளையும் பெறுவதாகும். காரணம் (R): இதன் மூலம் அக்குழந்தை தாம் சார்ந்திருக்கும் குழுவினரால்  ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக மாறுகிறது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; R தவறு.

(D) A தவறு; R சரி.

61. கீழ்க்கண்டவற்றுள் எது சமூகப் பண்புகள் வளர்ச்சியின் அடிப்படைப் பண்பு அல்ல?

(A) கூடி வாழ்தல்

(B) விட்டுக்கொடுத்தல்

(C) தனித்து இயங்குதல்

(D) ஒத்துப்போதல்

62.குமரப்பருவத்தில் குழந்தைகள் எதன் அடிப்படையில் சுயநலத்தைத் துறந்து, தேசம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீது நேசம் கொள்கிறார்கள்?

(A) பாலியல் ரீதியான விழிப்புணர்வு

(B) குழு மனப்பான்மை

(C) பெற்றோரின் வற்புறுத்தல்

(D) பொருளாதாரத் தேவை

63. ஒரு பதின்பருவ மாணவன் (Adolescent) தனது நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்துவதிலும், உண்மை மற்றும் நம்பிக்கை (Truth and Faith) ஆகியவற்றில் அதிகப் பற்றுதலுடனும் காணப்படுகிறான். ஆசிரியராக நீங்கள் இதை எவ்வாறு புரிந்துகொள்வீர்கள்?

(A) சமூக வளர்ச்சிப் பண்பு.

(B) சமூக அக்கறையற்ற செயல்.

(C) மனவெழுச்சிப் பாதிப்பின் அறிகுறி.

(D) படிப்பில் கவனத்தைச் சிதறடிக்கும் செயல்.

64. குமரப்பருவத்தினரின் சமூக இடைவினைகளை (Social interactions) உற்றுநோக்கப் பள்ளி செய்யக்கூடிய சிறந்த செயல்பாடு எது?

(A) வகுப்பறையில் பாடம் நடத்துதல்.

(B) அருங்காட்சியகம், நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்.

(C) தேர்வு வைத்தல்.

(D) வீட்டுப்பாடம் கொடுத்தல்.

65. குமரப்பருவத்தினரைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றவும், மனித குலத்திற்குத் தொண்டாற்றத் தூண்டவும் ஆசிரியர் கையாள வேண்டிய சிறந்த உத்தி எது?

(A) கடுமையான தண்டனைகளை வழங்குதல்.

(B) பொருளாதாரப் பாடங்களை நடத்துதல்.

(C) தியாகம் செய்த தலைவர்களின் கதைகளைக் கூறுதல்.

(D) அறிவியல் சோதனைகளைச் செய்தல்.

66. பொருத்துக (செயல்பாடு நோக்கம்):

 (a) நீதிமன்றம்/அருங்காட்சியகம் செல்லுதல்   - (i) தொழில்கள் மற்றும் தேசப்பயன்பாடு அறிதல்

(b) தொழிலாளர்களைப் பள்ளிக்கு அழைத்தல் - (ii) ஒத்துழைப்பு மற்றும் பிறரிடமிருந்து கற்றல்

(c) பாட இணைச் செயல்பாடுகள் - (iii) சமூக நிகழ்வுகளை அறிமுகப்படுத்தல்

(d) தலைவர்கள் பிறந்தநாள் விழா | (iv) சமூக இடைவினைகளை உற்றுநோக்க

(A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

(B) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)

(C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

(D) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

67. கூற்று (A): பள்ளிகளில் பல்வேறு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மக்களை அழைத்து வந்து பேசச் செய்ய வேண்டும்.

காரணம் (R): இதன் மூலம் மாணவர்கள் அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றியும், அவை தேசத்திற்குப் பயன்படும் விதம் பற்றியும் அறியலாம்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; R தவறு.

(D) A தவறு; R சரி.

68. கூற்று (A): ஒருவர் தம் மனவெழுச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், அவர் சமூகத்தில் பிறரால் மதிக்கப்படுவார்.

காரணம் (R): மனவெழுச்சிகளை ஆளும் தன்மை உடையவரை சமூகம் 'ஆளுமை மிக்கவர்' என அங்கீகரிக்கிறது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; R தவறு.

(D) A தவறு; R சரி.

69. வரிசைப்படுத்துக (தர்க்க ரீதியாக):

மனவெழுச்சி கட்டுப்பாட்டின் விளைவுகள்:

1. தம்மைப் பாதுகாத்துக் கொள்பவராக இருத்தல்.

2. மனவெழுச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.

3. பிறரால் மதிக்கப்படுதல்.

(A) 2, 1, 3

(B) 1, 2, 3

(C) 3, 2, 1

(D) 2, 3, 1

70. ஆசிரியர்கள், மாணவர்களின் மனவெழுச்சி வளர்ச்சியை எதிர்கொள்ள, அன்பு மற்றும் அரவணைப்பு வழங்குவதை எவ்வாறு கருத வேண்டும்?

(A) கூடுதல் பணி

(B) தவிர்க்க வேண்டிய செயல்

(C) அடிப்படைப் பணி

(D) பெற்றோரின் பணி

71.'Morale' என்ற இலத்தீன் சொல்லின் பொருள் என்ன?

(A) அறிவு, ஞானம்

(B) நடத்தை, வழக்கம்

(C) சமூகம், குழு

(D) சட்டம், விதிமுறை

72. சமூகக் குழுவினரின் இணக்கமான அடையாளமாகத் திகழ்வது எது?

(A) செல்வம்

(B) கல்வி

(C) அறநெறி ஒழுக்கம் (Morality)

(D) அதிகாரம்

73.   கூற்று (A): உண்மையான ஒழுக்கம் என்பது எந்த வெளிப்புற சக்தியாலும் திணிக்கப்பட முடியாது.

காரணம் (R): உண்மையான ஒழுக்கம் என்பது ஒரு தனிநபரின் உள்ளிருந்து வருவதாகவும், உள்ளார்ந்த இயற்கையானதாகவும் இருக்கும்.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; R தவறு.

(D) A தவறு; R சரி.

74. பவுலி (Bowely) மற்றும் சிலர் ஒரு நபரின் நடத்தை ஒழுங்கிற்குக் கீழ்க்கண்ட எந்தத் தகுதியைக் குறிப்பிடவில்லை?

 

(A) சுயக்கட்டுப்பாடு

(B) மனசாட்சி

(C) பொருளாதார வசதி

(D) சுறுசுறுப்பு

75.குமரப்பருவத்தினரின் நடத்தையை வடிவமைப்பதில் ஆசிரியரின் எத்தகைய தன்மை முக்கியமானது?

(A) கண்டிப்பான தன்மை

(B) முன்மாதிரியான நடத்தை

(C) நகைச்சுவை உணர்வு

(D) அதிக அறிவுத்திறன்

76. கூற்று (A): சமூகமயமாதல் (Socialization) என்பது ஒரு குழந்தை தான் சார்ந்திருக்கும் குழுவினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நபராக மாறும் செயல்முறையாகும்.

காரணம் (R): இச்செயல்முறையின் மூலம் ஒரு குழந்தை சமூக வாழ்க்கைக்குத் தேவையான மனநிலையையும், திறனையும், மதிப்புகளையும் பெறுகிறது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

77. கூற்று (A): குமரப்பருவத்தினரின் சமூக இடைவினைகளை (Social interactions) உற்றுநோக்க, அவர்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அருங்காட்சியகம், நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

காரணம் (R): வகுப்பறைச் சூழல் மட்டுமே மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்க்கப் போதுமானது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

78.கூற்று (A): சுயநலத்தைத் துறந்து தியாகம் செய்த சிறந்த தலைவர்களின் கதைகளைக் குமரப் பருவத்தினரிடம் கூற வேண்டும். காரணம் (R): இக்கதைகள் அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதுடன், மனித குலத்திற்குத் தொண்டாற்றவும் தூண்டுகின்றன.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R.சரி.

79. கூற்று (A): குமரப்பருவம் நல்ல நட்புறவு வட்டத்தை விரிவாக்கும் ஒரு பருவமாகக் குறிப்பிடப்படுகிறது.

காரணம் (R): இப்பருவத்தில் மனவளர்ச்சி (Mental development) சார்ந்த நடத்தைகள் அவர்களின் சமூகப் பண்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான  விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

80. கூற்று (A): ஆசிரியர் குமரப்பருவத்தினர் முன் உயர்ந்த நடத்தையை உடையவராகத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

காரணம் (R): ஆசிரியரின் முன்மாதிரியான நடத்தையை விட, குமரப்பருவத்தினரின் நடத்தையை வடிவமைப்பதில் வேறு எதுவும் சிறப்பாக உதவிட முடியாது.

(A) A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A விற்குச் சரியான விளக்கம்.

(B) A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R என்பது A விற்குச் சரியான விளக்கமல்ல.

(C) A சரி; ஆனால் R தவறு.

(D) A தவறு; ஆனால் R சரி.

வினாடிவினாவில் பங்கேற்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை