7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
இயல்-2 (மூன்றாம் பருவம்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பொருத்துக
1. வையம்
- அ) மனம்
2. இடர்
- ஆ) அகல் விளக்கு
3. தகளி
- இ) உலகம்
4. சிந்தை
- ஈ) துன்பம்
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-ஆ 4-அ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
2. சுடர் ஆழியான்- இடர் ஆழி என்பதில் வரும் நயம்
அ) இயைபு ஆ) முரண் இ) மோனை
ஈ) எதுகை
3. பொய்கையாழ்வார் துன்பத்தை எவ்வாறு உருவகம்
செய்கிறார்
அ) பனி ஆ) வானம் இ) கடல் ஈ) அலை
4. உவமை வேறு , உவமிக்கப்படும்
பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது
அ) உவமையணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) சொல் பின்வருநிலையணி ஈ) உருவக அணி
5. உருவக அணியில் ----- முன்னும், ----- பின்னுமாக அமையும்
அ) உவமை , உவமேயம் ஆ) உவமேயம்,
உவமை
இ) உவமை , உவம உருபு ஈ) உவம உருபு, உவமேயம்
6. பூதத்தாழ்வார் எதை அகல் விளக்காக கொண்டார்?
அ) அன்பு ஆ) அறிவு இ) பக்தி ஈ)
ஆர்வம்
7. அன்பே - இன்புருகு என்பதில் வரும் நயம்
அ) மோனை ஆ) எதுகை இ) இயைபு ஈ) முரண்
8. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ
அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது
அ) எதுகை ஆ) முரண் இ)
இயைபு ஈ) அந்தாதி
9. அந்தாதி ------- வகைகளில் ஒன்று
அ) இலக்கணம் ஆ) காப்பியம் இ) சிற்றிலக்கியம் ஈ) நிகண்டு
10. பொய்கையாழ்வார் பிறந்த ஊர்
அ) திருவிடைகழி ஆ) திருப்பாசூர் இ) திருவெஃகா
ஈ) திருச்சுழி
11. பூதத்தாழ்வார் பிறந்த ஊர்---
அ) சீவைகுண்டம் ஆ) மாமல்லபுரம் இ) ஆழ்வார்
திருநகரி ஈ) மயிலை
12. இன்சொல்- வன்சொல் என்பதில் உள்ள நயம்
அ) எதுகை ஆ) மோனை இ) இயைபு
ஈ) முரண்
13. அறநெறிச்சாரம் என்ற நூலை
இயற்றியவர்
அ) மாங்குடி மருதனார் ஆ) கபிலர் இ) ஔவையார் ஈ) முனைப்பாடியார்
14. முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
அ) வைணவம் ஆ) சைவம் இ) பௌத்தம் ஈ) சமணம்
15. முளைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
அ) 12 ஆ) 13 இ) 14 ஈ) 15
16. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
அ) 222 ஆ) 223 இ) 224 ஈ) 225
17. திருக்குறள் குறிக்கோளுடன் எதை
அறிமுகப்படுத்துகிறது?
அ) தொண்டு நெறி ஆ) ஆன்ம நெறி
இ) ஒப்புரவு நெறி ஈ) ஈகை நெறி
18. "ஒருவர் எல்லோருக்காகவும் எல்லாரும்
ஒருவருக்காகவும் " என்னும் பொதுவுடமை நெறிக்கு உரியவர்
அ) கணியன் பூங்குன்றனார் ஆ) அவ்வையார் இ) கம்பர் ஈ) திருவள்ளுவர்
19. " உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்" என்று
கூறியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) நாமக்கல்
கவிஞர்
20. வறுமையை ------என்றும், செல்வத்தை----- என்றும் கூறுவது
தமிழ் மரபு
அ) மருந்து , பிணி ஆ) பிணி,
மருந்து இ) செல்வம், பிணி ஈ) செல்வம், மருந்து
21. "செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந
பலவே"
அ) திருக்குறள் ஆ)
அகநானூறு இ) கலித்தொகை ஈ) புறநானூறு
22. ஊருணி என்பது----
அ) ஊரின் பெயர் ஆ) விலங்கு இ) இடம் ஈ) நீர்நிலை
23. நாயன்மார் அடிச்சுவட்டில் , குறட்செல்வம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்----
அ) ஞானியார் அடிகளார் ஆ)
குன்றக்குடி அடிகளார் இ)
சுந்தர அடிகளார் ஈ) ஞானேஸ்வர் அடிகளார்
24. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்
அ) ஒப்புரவு நெறி ஆ) அருளோசை இ) அறிக சமூகம்
ஈ) ஞான ஒளி
25. ஒருவர் எல்லாருக்காகவும் , எல்லாரும் உறவுக்காகவும் என்பது எவ்வகை நெறி?
அ) தனி உடைமை ஆ) பொதுவுடமை இ) பொருள் உடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
26. ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லின் பொருள்
அ) அன்பு செய் ஆ) அறம் செய் இ) தியானம் செய்
ஈ) உதவி செய்
27. திணை எத்தனை வகைப்படும்?
அ)
இரண்டு ஆ) மூன்று இ)
நான்கு ஈ) ஐந்து
28. அஃறினை சரியாகப் பிரித்து எழுதும் முறை
அ) அஃகு+திணை ஆ) அல்+திணை இ) அஃ+றிணை ஈ)
அல்+றிணை
29. பால் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து
30. பொருந்தாததைத்
தேர்ந்தெடுக்க
அ) மாணவன் ஆ) செல்வன் இ) மாணவி ஈ) மலர்கள்
31. ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிப்பது
அ) பலவின்பால் ஆ) பலர்பால் இ) ஆண்பால்
ஈ) ஒன்றன்பால்
32. பொருந்திய இணையை தேர்ந்தெடுக்க
அ) அழகன், நகரம் ஆ) மாணவன் ,
ஆசிரியர் இ) மாணவன், புத்தகம் ஈ) பசு, உழவன்
33. தமிழில் எண் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ):மூன்று இ) நான்கு
ஈ) ஐந்து
34. இடம்---- வகைப்படும்
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
35. நாம், நாங்கள் நம்மை
நமக்கு என்பன---
அ) தன்மை ஒருமைகள் ஆ) தன்மை பன்மைகள்
இ) முன்னிலை ஒருமைகள் ஈ) முன்னிலை பன்மைகள்
36. முன்னிலை பன்மையை தேர்ந்தெடுக்க
அ) நான் ஆ) நாம் இ) நீ ஈ) நீர்
37. அவன், அவள், அது, அவை, அவர்கள் போன்றன-----
பெயர்கள்
அ) தன்மை ஒருமை ஆ) தன்மை
பன்மை இ) முன்னிலை ஒருமை ஈ) படர்க்கை
38. பொருந்தாதைத் தேர்ந்தெடுக்க
அ) விறுவிறு ஆ) கிடுகிடு இ) பற்பல ஈ) பளபள
39. ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து
வருவதை---- என்பர்
அ) ஒரு பொருட் பன்மொழி ஆ)
இரட்டைக்கிளவி இ)
அடுக்குத் தொடர் ஈ) சிலேடை
40. இரட்டை கிளவியைத் தேர்ந்தெடுக்க
அ) சிற்சில ஆ) பற்பல இ) கலகல ஈ) வா வா
41. வினைச் சொல்லுக்கு அடைமொழியாக குறிப்பு பொருளில்
வருவது
அ) வினையெச்சம் ஆ) பெயரெச்சம் இ) இரட்டைக்கிளவி ஈ) அடுக்குத்தொடர்
42. விரைவு, வெகுளி, உவகை ,அச்சம்
, அவலம் ஆகிய பொருள்களில் வருவது
அ) வினையெச்சம் ஆ) பெயரெச்சம் இ)
இரட்டைக்கிளவி ஈ) அடுக்குத்தொடர்
43. குரங்கு கிடுகிடுவென
மரத்தில் ஏறியது - அடிக்கோடிட்ட சொல் எதைக் குறிக்கிறது?
அ) வினையெச்சம் ஆ) பெயரெச்சம் இ) இரட்டைக்கிளவி ஈ) அடுக்குத்தொடர்
44. பயின்றான் என்ற வினைச்சொல்லுக்குரிய எதிர்கால
வினைச்சொல்
அ) பயில் ஆ) பயில்கிறான் இ)
பயில்கின்றான் ஈ)
பயில்வான்
45. செல்கின்றன என்பதற்கு உரிய பால்
அ) ஒன்றன்பால் ஆ) பலவின்பால் இ) பலர்பால் ஈ)
ஆண்பால்
46. மகளிர் என்ற சொல்லின்
எதிர் பாலுக்குரிய பெயர்
அ) நங்கை ஆ) தோழி இ) ஆடவர் ஈ) அணங்கு
47. இவர்தான்
எனது தந்தை - இத்தொடரில் உள்ள இவர் என்பது
அ) தன்மை பெயர் ஆ) முன்னிலை பெயர் இ) படர்க்கை பெயர் ஈ) இடுகுறிப் பெயர்
48. உயர்திணைக்குரிய பால்கள்
எத்தனை?
அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து ஈ) ஆறு
49. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானை யாத்தற்று - இத்
திருக்குறளில் இடம்பெற்றுள்ள அணி
அ) எடுத்துக்காட்டு
உவமையணி ஆ) உருவக அணி
இ) பொருள் பின்வருநிலையணி ஈ) உவமையணி
50. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது
இயல்வது -----
அ) அரசு ஆ) அமைச்சு இ) நாடு ஈ) பகை
51. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளம் தரும் நாடு- இத்திருக்குறளில் பயின்று வரும் அணி
அ) பொருள் பின்வருநிலையணி ஆ) சொல் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) சிலேடை அணி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி