TNTET 6 TH STD TAMIL QUESTION BANK UNIT-1 TERM-1

 6. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள் 


இயல்-1

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. நிரூமித்த என்ற சொல்லின் பொருள்

அ) நிர்வகித்த ஆ)  உருவாக்கிய இ) வரைந்த ஈ) அழித்த

2. தமிழர் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் என்று பாரதிதாசன் எதை உருவகம் செய்கிறார்?

அ) மதுரை ஆ) தமிழ் இ) குமரிக்கண்டம் ஈ) குடும்பம்

3. சொற்கள் ஒரே ஓசையில் முடிவதை ------ என்பர்

அ) இயைபு ஆ) எதுகை இ) மோனை ஈ) முரண்

4. பேர்-நேர் , பால், வேல் என்பவற்றில் அமைந்துள்ள நயம்

அ) இயைபு ஆ) எதுகை இ) மோனை ஈ) முரண்

5. பாரதிதாசனின் இயற்பெயர்

அ) சுப்பிரமணியன் ஆ) கனக சபை இ)  சுப்புரத்தினம் ஈ)  இராமலிங்கம்

6. புரட்சிக்கவி என்று சிறப்பிக்கப்படுபவர்

அ) கவிமணி ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்

7. பாரதிதாசனின் சிறப்பு பெயரை தேர்ந்தெடுக்க

அ) தேசியக் கவி ஆ) நாமக்கல் கவிஞர் இ) பாவேந்தர் ஈ) பாவலரேறு

8. நிலவு + என்று என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

அ) நிலயன்று ஆ)  நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவு என்று

9. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

அ) செம்பு +  பயிர் ஆ) செம்+பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்மை + பயிர்

10. உலகில் ----க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன

அ) 4000 ஆ) 5000 இ) 6000 ஈ) 7000

11. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

     இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்

அ) கவிமணி ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்

12. " என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாடியவர்

அ) கவிமணி ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்

13. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்

அ) அகத்தியம் ஆ) நன்னூல் இ) தண்டியலங்காரம் ஈ) தொல்காப்பியம்

14. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் -----எழுத்துகளாகவே அமைந்துள்ளன

அ) வட்டெழுத்து ஆ) இடஞ்சுழி இ) வலஞ்சுழி ஈ) உட்சுழி

15. "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்று குறிப்பிடும் நூல்

அ) நன்னூல் ஆ)  தொல்காப்பியம் இ) தண்டியலங்காரம் ஈ) நம்பியகப்பொருள்

16. “இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு

      ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" இன்று தமிழ்நாட்டின் எல்லையை குறிப்பிடும் நூல்

அ) நன்னூல் ஆ)  சிலப்பதிகாரம் இ) தண்டியலங்காரம் ஈ) நம்பியகப்பொருள்

17. சீர்மை என்பது ------ ஐக் குறிக்கும்

அ) அழகு ஆ) ஆற்றல் இ) அறிவு ஈ)  ஒழுங்குமுறை

18. அஃறிணை என்ற சொல்லை சரியாக பிரித்து எழுதும் முறை

அ) அஃகு+ திணை ஆ) அல்ல+திணை இ) அல்+ திணை ஈ) அக்க + திணை

19. அஃறிணை என்பது

அ) உயர்வான திணை ஆ)  உயர்வு அல்லாத திணை

இ) உயிர் அற்ற திணை ஈ) உயிருள்ள திணை

20. பாகு என்பது----- சுவையுடையது

அ) கசப்பு ஆ) புளிப்பு இ) உவர்ப்பு ஈ) இனிப்பு

21. எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவை----- இலக்கிய நூல்கள்

அ) பதினெண் கீழ்க்கணக்கு ஆ) சங்க இ) சங்கம் மருவிய ஈ) இடைக்கால

22. திருக்குறள் நாலடியார் ஆகியவை ------ நூல்கள் ஆகும்

அ) பதினெண் கீழ்க்கணக்கு ஆ) சங்க இ) காப்பிய ஈ) இடைக்கால

23. பூ எத்தனை நிலைகளைக் கொண்டது?

அ) ஐந்து ஆ) ஆறு இ) ஏழு ஈ) எட்டு

24. மரம், விலங்கு, பெரிய, திருமகள் , அழகு, அறிவு  உள்ளிட்ட பல சொற்களைக் குறிக்கும் ஒரே சொல்லை தேர்ந்தெடு

அ) கா ஆ) வை இ) மா ஈ) கோ

25. ----- எண்ணத்தை வெளிப்படுத்தும் , ----- உள்ளத்தை மகிழ்விக்கும், -----உணர்வில் கலந்து வாழ்வில் நிறைகுறைகளை சுட்டிக்காட்டும்

அ) இசை, நாடகம் , இயல் ஆ) நாடகம், இசை, இயல்

இ) இயல், நாடகம், இசை ஈ)  இயல், இசை, நாடகம்

26. கட்டுரைபுதினம் சிறுகதை போன்றன---- வடிவங்கள்

அ) செய்யுள் ஆ) உரைநடை இ) மரபுக் கவிதை ஈ) புதுக்கவிதை

27. அகத்தி, பசலை, முருங்கை முதலியவற்றின் தாவர இலை பெயர்

அ) இலை ஆ) தழை இ) கீரை ஈ) கன்று

28. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

அ) ஆல் ஆ) அரசு இ) மா ஈ) கோரை

29. மடல் என்ற இலை பெயர் வகையை பெற்றவை

அ) சப்பாத்திக்கள்ளி , தாழை ஆ) அருகுகோரை  இ) நெல், வரகு ஈ) கரும்பு , நாணல்

30. புல் என்ற இலை பெயர் வகையை பெற்றவை

அ) சப்பாத்திக்கள்ளி , தாழை ஆ) அருகுகோரை  இ) நெல், வரகு ஈ) கரும்பு , நாணல்

31. தாள் என்ற இலை பெயர் வகையை பெற்றவை

அ) சப்பாத்திக்கள்ளி , தாழை ஆ) அருகுகோரை  இ) நெல், வரகு ஈ) கரும்பு , நாணல்

32. கூந்தல் என்பது எதனுடைய இலைப்பெயர் வகை

அ) தென்னை ஆ) கரும்பு இ) வாழை ஈ) கமுகு

33. தொன்மை என்ற சொல்லின் பொருள்

அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை

34. 12+16=? விடையை தமிழெண்ணில் தேர்க

அ) க உ  ஆ) உ க இ) அ எ ஈ) உ அ

35. தமிழில் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த நூல்

அ) சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாயணம் இ) திருக்குறள் ஈ) தேவாரம்

36. Lights from many lamps என்ற நூலை எழுதியவர்

அ) ஷேன் வாட்சன் ஆ) லிலியன் வாட்சன்

இ) வால்ட் விட்மன் ஈ)  வில்லியம் வேர்ட்ஸ் வொர்க்

37. அப்துல் கலாம் எதனைக் கொண்டு செயற்கைக்கால்களை உருவாக்கினார்?

அ) நெகிழி ஆ) ரப்பர் இ) கர்பன் இழை ஈ) பித்தளை

38. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

அ) 4 ஆ) 5 இ) 8 ஈ) 10

39. இயல்பாக காற்று வெளிப்படும் போது----  எழுத்துக்கள் பிறக்கின்றன

அ) மெய் ஆ) உயிர் இ) உயிர் மெய் இ) சார்பு

40. உயிர் குறில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 5 ஆ) 7 இ) 90 ஈ) 126

41. உயிர் நெடில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 5 ஆ) 7 இ) 90 ஈ) 126

42. உயிர் மெய் குறில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 5 ஆ) 7 இ) 90 ஈ) 126

43. உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 5 ஆ) 7 இ) 90 ஈ) 126

44. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு ----- மாத்திரை

அ) 1 ஆ) 2 இ) 1/2 ஈ) 1 1/2

45. மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு---- மாத்திரை

அ) 1 ஆ) 2 இ) 1/2 ஈ) 1 1/2

46. க்,ச்,ட்,த்,ப்,ற் என்பன ----மெய்யெழுத்துக்கள்

அ) வல்லினம் ஆ)  மெல்லினம் இ)  இடையினம் ஈ) மூக்கினம்

47. உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

48. உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 247 ஆ) 216 இ) 90 ஈ) 126

49. தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் மொத்தம்

அ) 216 ஆ) 247 இ) 30 ஈ) 12

50. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு

அ) 1 ஆ) 2 இ) 1/2 ஈ) 1 1/2

 👉 PDF வடிவில் பதிவிறக்க

👉 விடைகளை அறிய



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை