FIRST REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY COIMBATORE DISTRICT

 

முதல் திருப்புதல் தேர்வு-2025 கோவை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. நற்றிணை  

1

2.     

. ஒரு சிறு இசை

1

3.     

. மன்னன், இறைவன்

1

4.     

. வான்வெளியில், பேரொலியில்

1

5.     

. சருகும், சண்டும்

1

6.     

. கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

1

7.     

. சிலப்பதிகாரம்

1

8.     

. ஒழுக்கத்தை 

1

9.     

. வெட்சித்

1

10.   

. பண்புத்தொகை

1

11.    

. காசி நகரத்தின் பெருமையைப்பாடும் நூல்

1

12.   

. சிலப்பதிகாரம்

1

13.   

. இளங்கோவடிகள்

1

14.   

. பாவர்-வாவர் () . பாவர்சுநர்  (இரண்டும் சரி)

1

15.   

. எண்ணெய் விற்பவர்

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப் பெருக்கம் செய்வது அரசனின் கடமையாகும்

2

17

. கோவில்பட்டியைச் சுற்றியுள்ள வட்டாரப்பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் யாது?

. கலைஞர் கருணாநிதி எதற்காக அறியப்பட்டவர்?

2

18

ü    பூஞ்சோலைகள்

ü  செண்பகக் காடுகள்

ü  மலர்ப்பொய்கைகள்

ü  தடாகங்கள்

ü  கமுகத் தோட்டங்கள்

ü  நெல்வயல்கள்

2


19

கல்வி செல்வம் , விருந்து ஈகை

2


20

·        செந்நெல்  

·        வெண்ணெல்

·        கார்நெல்

·        சம்பா  மற்றும் உள்வகைகள்

·        மட்டை

2

21

அருமை  உடைத்தென் றசாவாமை  வேண்டும்

 பெருமை முயற்சி  தரும்.

2

                                                                  

                                                           பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

1. ஐந்துரு   2. எட்டு -

2

23

. வளியை வாளியில் அள்ள முடியாது  . மடு மேல் மாடு நின்றது

2

24

. சோறு   . கரு

2

25

. பண்பாடு   . ஒப்பெழுத்து

2

26

ü  தண்ணீர் குடிதண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை

ü  தயிர்க்குடம்தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

2

27

உறங்குகின்ற = உறங்கு+கின்று+

உறங்கு- பகுதி, கின்று- நிகழ்கால இடைநிலை, -பெயரெச்ச விகுதி

2

28

# உழவர் வயலில் உழுதனர். # நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.      ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது    ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

30

. விருந்தே புதுமை  . முன்பின் அறியாத புதியவர்    . விருந்து

3

31

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  வானமும், உருவமில்லாக் காற்றும், பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும்.

ü  பூமி உருவாகி, ஊழிக்காலம் தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.

ü  மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி, அவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது

3

33

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

34

 

.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்

.

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

3

 

                                                                   பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது.

வஞ்சப் புகழ்ச்சி அணி:

     ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

அணிப்பொருத்தம்

      தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல, கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர். இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.

3

36

சீர்

அசை

வாய்பாடு

வன்கண்

நேர்+நேர்

தேமா

குடிகாத்தல்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கற்றறிதல்

நேர் +நிரை+நேர்

கூவிளங்காய்

ஆள்வினையோ

நேர் +நிரை+நேர்

கூவிளங்காய்

டைந்துடன்

நேர்+நிரை

கூவிளம்

மாண்ட

நேர்+நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

3

37

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.

தனித்து உண்ணாமை:

தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.

விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:

            விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை

அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” 

என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

வறுமையிலும் விருந்தோம்பல்:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

நிலத்திற்கேற்ற விருந்து:

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:

வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”

 என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி பெருமிதம் கொள்வோம்.

(அல்லது)

)

v  ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும்.

v  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர்.

v  உலகத்தோடு இணைந்து வாழாதவர், கற்றவராயினும் அறிவு இல்லாதவரே

5

39

.

உறவினருக்குக் கடிதம்

7, திருத்தணி,

14-05-2024

அன்புள்ள அத்தைக்கு,

            நலம். நலமறிய ஆவல். எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்பாராட்டி, பரிசு வழங்கினர். எனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியைத் தங்களுடனும்  பகிர விரும்புகிறேன். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.

நன்றி!

இப்படிக்கு

தங்கள் அன்புள்ள

வா.நிறைமதி

 

 ) மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     .இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்          

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001          

ஐயா,

    பொருள்: புயலில். சாய்ந்த மரங்களை அகற்றக்கோருதல் சார்பு

      வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடும் புயலில் எண்ணற்ற மரங்கள் சாய்ந்த்துவிட்டன.எனவே சாய்ந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                                                                                                    இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                                  .இளமுகில்.

இடம்: அரக்கோணம்

நாள்: 15-10-2022.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

) உரிய விடையை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

)

    தமிழ் இலக்கியத்திற்கு தான் செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில், கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம். திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, "குறளோவியம்" எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

 

மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்

இக்கால வணிக வளாகங்கள்

1

நறுமணப் பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம் செய்யப்பட்டன.

நறுமணப் பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன.

2

பட்டு, பருத்தி நூல் ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர்.

இன்றைக்கு கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர்.

3

முத்துமணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன.

குளிரூட்டப்பட்ட அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன.

4

எட்டு வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன.

எல்லாவித பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன.

5

மருவூர் பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.

 

இன்றைய வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும் உள்ளனர்.

 

(அல்லது)

) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை:

நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

பசுமை பரப்புகளை அதிகரித்தல்:

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல்:

ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.

எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது

தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:

ü  தொழிற்சாலைகள் வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

ü  மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.

குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:

குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது  செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!

8

44

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோ? பரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                 

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:          

 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:                                             

  தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே

(அல்லது)

)  புதிய நம்பிக்கை

முன்னுரை:                                               

               வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்  தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம்.

மேரியின் குடும்பச்சூழல்:

               மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். 

மேரிக்கு நடந்த துன்பம்:

           மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தை கையில் எடுத்து  அதைப் புரட்டத்தொடங்குகிறாள்.

          அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாதுஎன்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில்  பேசினர். அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக  ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

தூண்டுகோல்- மிஸ்வில்சன் :

         ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து  நின்றாள். பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.

சிறப்பாகக் கல்விகற்ற மேரி:

     மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.

முடிவுரை:

           மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை  இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.

8

45

) தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

 (அல்லது)

) சுற்றுச்சூழல் மாசு மற்றும் கட்டுப்பாடு

முன்னுரை:

      மனித வாழ்வின் அடிப்படையாக விளங்குவது சுற்றுச்சூழலாகும். காற்று, நீர், நிலம் ஆகியவை மனிதனின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அறிவியல் வளர்ச்சி, தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் இன்று சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால் மனித உடல்நலம் மட்டுமன்றி, இயற்கையின் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல்:

        மனிதனைச் சுற்றி அமைந்துள்ள இயற்கை கூறுகளான காற்று, நீர், நிலம், தாவரங்கள், விலங்குகள் ஆகிய அனைத்தையும் இணைத்ததே சுற்றுச்சூழல் ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடொன்று சார்ந்து இயங்கி, உயிர்களின் வாழ்வை பாதுகாக்கின்றன. சுற்றுச்சூழல் சுத்தமாகவும் சமநிலையுடனும் இருந்தால்தான் மனித வாழ்க்கை நலமாக அமையும்.

மாசுக்கட்டுப்பாடு:

       மாசு என்பது இயற்கையின் தூய்மையை கெடுக்கும் தீங்கான பொருட்களின் கலப்பாகும். இதனை கட்டுப்படுத்துவது மனிதனின் முக்கியக் கடமையாகும். அரசின் சட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாசுக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன.

நீர் மாசு:

      தொழிற்சாலைகளின் கழிவுநீர், வீட்டு கழிவுகள், ரசாயன உரங்கள் ஆகியவை ஆறுகள், குளங்கள், ஏரிகளில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது. மாசடைந்த நீரைப் பயன்படுத்துவதால் குடல் நோய்கள், தோல் நோய்கள் போன்ற பல நோய்கள் பரவுகின்றன.

நிலமாசு:

      பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், அதிகப்படியான இரசாயன உரங்கள் ஆகியவை நிலமாசிற்கு காரணமாகின்றன. இதனால் மண்ணின் வளம் குறைந்து, விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

காற்று மாசு:

      வாகன புகை, தொழிற்சாலை புகை, மரம் வெட்டுதல் போன்ற செயல்களால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்கள் போன்ற சுவாசக் கோளாறுகள் அதிகரிக்கின்றன.

தீமைகள்:

      சுற்றுச்சூழல் மாசால் மனித உடல்நலம் பாதிக்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் போன்றவை அதிகரிக்கின்றன. உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன.

நீக்கும் முறைகள்:

        மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், கழிவுகளை முறையாக நிர்வகித்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகள் மூலம் மாசை குறைக்கலாம். மேலும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மிக அவசியமாகும்.

முடிவுரை:

        சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் கடமையும் ஆகும். இயற்கையை காப்பாற்றினால் தான் மனித வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வர வேண்டும். 🌱

8

 பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை