|
மாதிரி பொதுத்தேர்வு-5
(2025-2026) 10.
ஆம் வகுப்பு
தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி
– I
(மதிப்பெண்கள்:15)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15×1=15
1. கீழ்காண்பவருள்
எவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதென்று வள்ளுவர் கூறுகிறார்?
அ) வீரம் மிகுந்தவர் ஆ) அன்புடையவர் இ) நடுநிலையோடு இரக்கம் காட்டுபவர் ஈ) பொருளுடையார்
2.கூற்று :வடமொழிக்குரிய
இராமாயண,மகாபாரத தொன்மச்செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன
காரணம் : பண்டைய தமிழ்மொழியில் மொழிபெயர்ப்பு இல்லை
அ) கூற்று தவறு , காரணம் சரி ஆ) கூற்று , காரணம் இரண்டும்
தவறு
இ) கூற்று , காரணம் இரண்டும் சரி ஈ) கூற்று சரி , காரணம் தவறு
3. ”பெண்ணினைப்
பாகம் கொண்ட பெருந்தகை பரமயோகி” எனும் தொடர் யாரைக்குறித்தது?
அ) குலேச பாண்டியன் ஆ) இறைவன் இ)
இடைக்காடனார் ஈ) கபிலர்
4. கலைஞர் எழுதிய
முதல் நாடகம்-------
அ) தூக்குமேடை ஆ)
ராஜகுமாரி இ) பழநியப்பன் ஈ) பராசக்தி
5. தாதுகு சோலை
தோறும் சண்பகக்காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்
– இவ்வடிகளில் வரும் இயைபு நயம்
அ) தாதுகு-போதவிழ் ஆ) போதவிழ்-பொய்கை இ) தடங்கள்- தோறும் ஈ) தோறும் - தோறும்
6. காந்தி-இர்வின்
ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1931 ஆ) 1932
இ) 1934 ஈ) 1942
7. ஆண்பால் கூற்று,
பெண்பால் கூற்று என வகைப்படுத்தப்படும் திணைகள்
அ) பொதுவியல், கைக்கிளை ஆ) பாடாண், பெருந்திணை
இ) வெட்சி, கரந்தை ஈ) கைக்கிளை, பெருந்திணை
8. பதின்மூன்று
அடிக்கு மேற்பட்டு வரும் வெண்பாவகை
அ) நேரிசை வெண்பா ஆ) இன்னிசை வெண்பா இ) பஃறொடை வெண்பா ஈ) கலிவெண்பா
9. சரியானவற்றைப்
பொருத்துக
i) தொலி – 1) பனையின் இளநிலை
ii) கழி - 2) மிக மெல்லிய பழத்தோல் வகை
iii) காழ் – 3) கரும்பின் அடி
iv) மடலி – 4) தானியத்தைக் குறிக்கும்
சொல்
அ) 2 , 1 , 3 , 4 ஆ) 2 , 4 , 3 , 1 இ) 2 , 3
, 4 , 1 ஈ) 2 , 3 , 1 , 4
10. கண்ணதாசன் தனது
திரைப்படப்பாடல்கள் வழியே மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது
அ) இல்லறவியல் ஆ)
அரசியல் இ) மெய்யியல் ஈ) களவியல்
11. செங்கீரை ஆடும்போது
சூழி எங்கு அசைந்தாடுவதாகக் குமரகுருபரர் கூறுகிறார்?
அ) தலை ஆ) கால் இ) இடை ஈ) நெற்றி
பாடலைப்
படித்துப் பின் வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி
அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்
12. இப்பாடலில்
குறிப்பிடப்படும் இருநிலம் என்பதன் பொருள்
அ) வானம், பூமி ஆ) இரண்டு நிலங்கள் இ) பெரிய உலகம் ஈ) மருதம், நெய்தல்
13. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
அ) கனிச்சாறு ஆ) கம்பராமாயணம் இ) திருவிளையாடற்
புராணம் ஈ) பரிபாடல்
14. தண்பெயல்- இலக்கணக்குறிப்பு
அ) ஆறாம் வேற்றுமைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) வினைத்தொகை ஈ) அன்மொழித்தொகை
15. மோனை நயத்தைத்
தேர்க
அ) உள்முறை-வெள்ளம் ஆ) தண்பெயல்-தலைஇய இ) மீண்டும்-பீடு ஈ) வெள்ளம்-மூழ்கி
பகுதி – II (மதிப்பெண்கள்:15)
பிரிவு -1
4×2-8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
16. விடைகளுக்கேற்ற
வினா அமைக்க
அ) தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு
விழாவில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைத் தங்கள் தாய்மொழியில் எழுதிவைத்துப்பாடுகின்றனர்
ஆ) இளங்கோவடிகள் சேர மரபைச் சார்ந்தவர்.
17. விருந்தினரைப் போற்றுதல்
இல்லறக்கடமை என இளங்கோவடிகள் கூறக்காரணம் யாது?
18. ”உலகின் சிறந்த பொருள் வேறு
இல்லை” என உலகப்பொதுமறை குறிப்பிடுவது யாது?
19. ”அழுங்கணீர் பொழிந்தான்
மீதே” – கருணையன் கண்ணீரைப் பொழியக் காரணம் என்ன?
20. ம.பொ.சி அவர்கள் “சிலம்புச்செல்வர்”
என அழைக்கப்பட்டதன் காரணத்தை எழுதுக
21. ’வறுமையைப்போல் துன்பம்
தருவது வறுமையே’ என்று பொருள் தரும் திருக்குறளை
எழுதுக.
பிரிவு - 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2-10
22. மதுரை
சென்றார் – இத்தொடரில் வந்த தொகையை விளக்குக
23. குறிஞ்சித்தினைக்குரிய கருப்பொருள்
ஐந்தனை எழுதுக.
25. கொடுக்கப்பட்டுள்ள
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ)
கொடு-
கோடு ஆ) பரி-பறி.
24. செப்பல்-பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
26. தொகைச்
சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.
அ) எழுபிறப்பு ஆ) முந்நீர்
27. அகராதியில் காண்க. அ. மருள்
ஆ. பூட்கை
28. கலைச்
சொற்கள் தருக.
அ. Rebellion ஆ.
Feast
பகுதி – III (மதிப்பெண்கள்:18)
பிரிவு -1
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29. அறத்தை முதல் தரம், இரண்டாம்
தரம், மூன்றாம் தரம் என பாடத்தின்வழி வகைப்படுத்துக
30. உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடையளி
வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
முத்தொள்ளாயிரம்; இது மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல்
சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப்
பாடுகிறது; மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900
பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது. நூல்
முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள்
கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன;
ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை
ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை
நாடாகவும் இப்பாடல் குறிப்பிடுகிறது
அ)
முத்தொள்ளாயிரம்
என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஆ)
முத்தொள்ளாயிரம்
பாடல்கள் எவ்வோசையை உடையன?
இ)
இப்பத்தி குறிப்பிடும்
சோழநாட்டின் சிறப்பு யாது?
31. வாழையிலை விருந்து விழா-
குறிப்பு வரைக
பிரிவு -2
எவையேலும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
32. காசிக்காண்டம் கூறிய இல்லற
ஒழுக்கங்களைப் பட்டியலிடுக.
33. சிலப்பதிகாரம் – நூற்குறிப்பு
தருக
34. அடிபிறழாமல்
எழுதுக.
“சட்டம்” என முடியும் பாடல் (அல்லது) “புண்ணிய” எனத் தொடங்கும் பாடல்
பிரிவு -2
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35. மதிற்போர் பற்றிய திணைகளை
விளக்குக.
36. பொருளல் லவரைப்
பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.. - அலகிட்டு வாய்பாடு தருக.
37. வஞ்சப்புகழ்ச்சி அணியை விளக்குக
பகுதி - IV
(மதிப்பெண்கள்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி.
5×5=25
38. அ.
கம்பர் கம்பராமாயணம் பாடப்பகுதியில் “ஐயோ” என்ற சொல்லைப்பயன்படுத்தியதன் காரணத்தை விளக்குக
(அல்லது)
ஆ. ”ஆள்வினை உடைமை” ஆளுமையின்
நாற்றாங்கால் என்பதைக் குறள் வழி விளக்குக
39. அ.
உங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி வேண்டி போக்குவரத்துத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக
(அல்லது)
ஆ. மாற்றுச்சான்றிதழ் வேண்டி
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு விண்ணப்பம்
எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுது.
41. 15, கோயில்
தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில் வசிக்கும் இளங்கோவன் என்பவரின்
மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில் 10. ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்
11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு,
தமிழ் வழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக்
கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
42.அ.
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை எழுதுக
(அல்லது)
ஆ. மொழி
பெயர்க்க.
Poetry is expressing what is felt. The
poet's world is boundless in space; boundless in time; the poet wants to
express what is forming in his mind. The sights he sees support it; the sounds
he hears support it; values support it; analogies
support it; his limit is to reach the peak of art. Kamban is such a poet.
பகுதி
- V
(மதிப்பெண்கள்: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3×8=24
43.
காற்று பேசியதைப்போல , நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு
பேசுக
(அல்லது)
ஆ.”மொழிபெயர்ப்பில் செம்மை அவசியம்”
என்பதைப் பாடத்தின்வழி நிறுவுக.
44. அ.
புயலிலே ஒரு தோணி கதையில் நீங்கள் இடம்பெறுவதாக எண்ணி, உங்கள் வாழ்வில் நடந்தது போன்று
கூறுக
(அல்லது)
ஆ. பிரும்மம் சிறுகதையில், ”முருங்கயும்
தவிர்க்கமுடியாத கதாபாத்திரம்” – எவ்வாறு?
45.
அ. முன்னுரை- தமிழகம் தந்த தவப்புதல்வர் - மொழிப்பற்று
- பொதுவாழ்வு - தூய்மை- எளிமை -மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை . கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ. நீரின்றி
அமையாது உலகு' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்பு:
விசும்பின் துளி -விண்ணின் மழைத்துளி -வான் சிறப்பு -வள்ளுவர் வாய்மொழி -மரம் வளர்ப்போம் - பசும்புல்
நுனி- இயற்க்கையைப் போற்றுவோம்-
முடிவுரை
பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி