7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JANUARY WEEK-4

  7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :       

மாதம்        

வாரம்     :                                              

வகுப்பு  :  ஏழாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ்  

தலைப்பு : வழக்கு

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø சொற்கள் மற்றும் தொடர்களில் பயின்று வரும் வழக்கு  சொற்களை அறிந்து பயன்படுத்துதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)


 


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø ”வாழைப்பழம்” என்ற சொல் பல்வேறு வட்டார வழக்குகளில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

வழக்கு


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ எழுத்திலும்,பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்
@ வழக்கு இயல்பு வழக்கு,தகுதி வழக்கு என இரு வகைப்படும்.
@ ஓர் எழுத்துக்குப் பதிலாக மற்றோர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.வழக்கு எத்தனை வகைப்படும்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.வழக்கு என்றால் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. வழக்குச் சொற்கள் சிலவற்றைக் கூறி, அவை எவ்வகையைச் சார்ந்தவை என விளக்கம் தருக

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

வழக்குச்சொற்களைத் தொகுத்துவரச் செய்தல்

12.கற்றல் விளைவு

Ø 716, 717 - வெவ்வேறு சூழல்களில் மற்றவர்களால் கூறப்பட்ட சொற்களை( முறை சார்ந்த அல்லது தனி முறையிலான கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளின்போது வயதில் பெரியவர்கள் பயன்படுத்திய சொற்கள்தச்சர்குயவ,ர் துணிதுவைப்பவர்,  முடிதிருத்துவோர் போன்ற தொழிலாளிகளுடன் பெரியவர்கள் உரையாடும்போது கேட்ட சொற்கள்) வேறு சூழல்களில் நாம் விரும்பியவாறு எழுதுதலில் பயன்படுத்துதல்மொழிமரபின் நுட்பமான பயன்பாட்டு கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல் சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருளை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை