10 TH STD TAMIL HALF YEARLY QUESTION PAPER VELLORE

 

அரையாண்டுப்பொதுத் தேர்வு-2025 வேலூர் மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

எம்+தமிழ்+நா

1

2.     

பண்புத்தொகை

1

3.     

குறிஞ்சிமருதம்நெய்தல் நிலங்கள்

1

4.     

கருணையன்எலிசபெத்துக்காக

1

5.     

சிலப்பதிகாரம்

1

6.     

மன்னன் , இறைவன்

1

7.     

எழுவாய்த்தொடர்

1

8.     

கிண்கிணி

1

9.     

முத்தையா

1

10.   

கடல் 

1

11.    

எனது போராட்டம்

1

12.   

சிலப்பதிகாரம்

1

13.   

நெசவாளர்

1

14.   

இளங்கோவடிகள்

1

15.   

பகர்வனர் , பட்டினும்

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

புதையல் என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது எது?

2

17

அவையம்=மன்றம் அல்லது சபைவழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

2

18

சிலப்பதிகாரம்மனிமேகலை

2


19

ü  பூஞ்சோலைகள்

ü  செண்பகக் காடுகள்

ü  மலர்ப்பொய்கைகள்

ü  தடாகங்கள்

ü  கமுகத் தோட்டங்கள்

ü  நெல்வயல்கள்

2


20

நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.

2

21

பல்லார்   பகைகொளலின்   பத்தடுத்த தீமைத்தே

நல்லார்  தொடர்கை  விடல்

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

ü  பல கை என்று வந்தபோது கையைக் குறித்தது.

ü  பலகை என்று வந்தபோது மரப்பலகையைக் குறித்தது.

ü  தனித்தும்தொடர்ந்தும் வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது.

2

23

நான்கு - செல்வம்      பண்பாடு

2

24

வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை

2

25

அமர்+த்(ந்)+த்+ஆன்

 அமர்-பகுதித்-சந்தி,  ந்-விகாரம்த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி

2

26

     பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி,  சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி,  நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி,  விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்,  - ம.பொ.சி.

2

27

ü  தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை

ü  தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

2

28

புலி   திருமணம்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  வானமும்உருவமில்லாக் காற்றும்பூமியும்நெருப்பும்நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும்.

ü  பூமி உருவாகிஊழிக்காலம் தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.

ü  மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில்உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றிஅவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது

3

30

இடம்இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:  எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்ஆந்திர மாநிலம் பிரியும்போதுசமயத்தில்செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்.

3

31

மின்பின் அறியாத புதியவர்  ஆவிருந்தே புதுமை இவிருந்தோம்பல்

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

33

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவிஅதற்கு ஏற்ற காலம்செயலின் தன்மைசெய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமைகுடிகளைக்காத்தல்ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல்விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார்.

3

34

 

.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்ககுரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

சீர்

அசை

வாய்பாடு

கருவியும்

நிரை+நிரை

கருவிளம்

காலமும்

நேர்+நிரை

கூவிளம்

செய்கையும்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

செய்யும்

நேர்+நேர்

தேமா

அருவினையும்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

மாண்ட

நேர்+நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

3

36

சொல் பின்வரு நிலை அணி:

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல் பின்வருநிலை அணி ஆகும்.

சான்று:

        பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

        பொருளல்ல தில்லை  பொருள்

அணிப்பொருத்தம்:

   ‘பொருள்‘ என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை  வந்ததால் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று.   

3

37

1. திணை வழுவமைதி

"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணைஉயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2. பால் வழுவமைதி

"வாடா இராசாவாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால்ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

3. இட வழுவமைதி

மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" எனதன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.

4. கால வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.

இத்தொடர்குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில்அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.

5. மரபு வழுவமைதி                                                                    

"கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்"- பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபுகுயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 

வரவேற்பு:

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள் அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க நீர் தந்தோம்.

கலந்துரையாடல்:

நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின்வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்புபாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது.

விருந்து உபசரிப்பு :

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.

நகர்வலம்:

விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்

இரவு விருந்து :

நகர்வலம் முடிந்துஇரவு விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில்இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர்.

பிரியா விடை :

இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.

(அல்லது)

)

 

மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்

இக்கால வணிக வளாகங்கள்

1

நறுமணப் பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம் செய்யப்பட்டன.

நறுமணப் பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன.

2

பட்டு, பருத்தி நூல் ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர்.

இன்றைக்கு கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர்.

3

முத்துமணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன.

குளிரூட்டப்பட்ட அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன.

4

எட்டு வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன.

எல்லாவித பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன.

5

மருவூர் பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.

 

இன்றைய வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும் உள்ளனர்.

 

5

39

.

(மாதிரிக் கடிதம்)

பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும்எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவேஎங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

செ.தமிழரசன்.

 

 (அல்லது)

)                                                                                                                        காந்தி தெரு.

10.06.2025

அன்புள்ள நண்பன் அமுதனுக்கு,

          வணக்கம். நான் நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயாஇல்லத்தில் அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய்.

      தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய். உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

      இதைப்போலவரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு.

உன் அன்புள்ள நண்பன்,


மா.குறளரசன்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41


5

42

)

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும்அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

)

    பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குதுவண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவரபூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்காலை சில்லென உணர்வும்மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.  

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

நாட்டுவளமும் சொல்வளமும்

முன்னுரை:

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்'

            என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறதுதமிழ்ச்சொல்வளம்.

தேவநேயப்பாவாணர்:

          தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

            ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

ü  ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

ü  விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.

ü  பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய்கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ü  செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது.

ü  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

       சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்

(அல்லது)

முன்னுரை:

   கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர்பேச்சாளர்எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.  "முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர்  கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்

     தன் பதினான்காம் வயதில்பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.

பேச்சுக் கலைஞர்:

v  மேடைப்பேச்சினில் பெருவிருப்பம் கொண்ட கலைஞர், "நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது.

v  பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க "சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்" ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.

நாடகக் கலைஞர்:

v  தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன்மணிமகுடம்வெள்ளிக்கிழமைகாகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார்.

திரைக் கலைஞர்

v  கலைஞரின் திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ராஜகுமாரி படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார்

v   சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்

இயற்றமிழ்க் கலைஞர்

   தமிழ் மீது திராத பற்றுகொண்ட கலைஞர் நளாயினிசித்தார்த்தன் சிலைசந்தனக் கிண்ணம்தாய்மைபுகழேந்திஅணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன்பொன்னர் சங்கர்தென்பாண்டிச் சிங்கம்ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.

முடிவுரை                                                                                          

 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர்அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துதமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.

8

44

முன்னுரை

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும்இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோபரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்” என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கிநிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:


 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோலஅந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசிஅந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:                                             

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்பஅன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

 (அல்லது)

)  முன்னுரை

              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டுதனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோஉடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:                            

              நாகசுரமும்மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டுபச்சையாநீலமாஎன்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்: 

     திடீரென்று மேளமும்,நாகசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது

அழகுவின் ஆட்டம்:                                          

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணிசலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார்..

முடிவுரை:

  “என்னலேஎனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாகஉற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

8

45

) முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்புஎன்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயணமகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதைசீவகசிந்தாமணிகம்பராமாயணம்வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

      மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களைமொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

     மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்றுமனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்திவேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

    'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

 (அல்லது)

அப்துல் கலாம்

முன்னுரை:

      நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமேசுவரத்தில் ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன்.என் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

இளமைக்காலம்:   

     என்னுடைய பள்ளிப் படிப்பை இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி மூலம் தொடங்கினேன்.அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப் பருவத்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான் விமானத்தைவடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்தது.

கல்லூரிப்படிப்பு:

     1954 ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.1955 ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தேன்.

விமான வடிவமைப்பு:

     எம்.ஐ.டியில் படித்து முடித்த பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின் உதவியுடன் உள்நாட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை வடிவமைத்து அதை இயக்கியும் காட்டினேன்.

பணி:

       1983 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன்.

சாதனைகள்:

ü  இந்தியாவில் முதல்முறையாக 1974ஆம் ஆண்டு "சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்ந்தது.அத்திட்டத்தில் பங்கேற்ற 60 விண்வெளி பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது.

ü  1980ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்எல்வி-என்ற ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன்.

ü  2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன்.

முடிவுரை:

நான் அறிவியல்மீது பற்று கொண்டிருந்த அளவுக்குதாய்மொழி மீதும் பற்று கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தநூல் திருக்குறள் ஆகும்.மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு.இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது, "கனவு காண்பதை சிந்தனை வடிவம் ஆக்குங்கள்,பின் செயலாற்ற முனையுங்கள்".

8

 

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை