SECOND MID TERM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY CHENNAI

  இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 2025

10.ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள்

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

இரண்டாம்  இடைப்பருவத்தேர்வு 2025, சென்னை,செங்கல்பட்டு

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                             6X1=6

வி. எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

அ) திருப்பதியும், திருத்தணியும்

1

2.     

ஈ) இளவேனில்

1

3.     

இ) பழுப்பு

1

4.     

ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

1

5.     

ஈ) சிலப்பதிகாரம்

1

6.     

) வண்ணமும், சுண்ணமும்

1

                 

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                                       3X2=6

7

மறைத்து வைத்தல் எனும் துன்பத்தைத் தராதவர்

2

8

நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையேவாங்குபவர் ம.பொ.சி.

2

9

ü  பூஞ்சோலைகள்

ü  செண்பகக் காடுகள்

ü  மலர்ப்பொய்கைகள்

ü  தடாகங்கள்

ü  கமுகத் தோட்டங்கள்

ü  நெல்வயல்கள்

2

10

விடைகளுக்கேற்ற  வினா எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

11

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது

2

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                                       3X2=6

12

அ. நாடக ஆசிரியர்   ஆ. ஒப்பந்தம்

2

13

வெட்சித்திணைமுதல் பாடாண் திணை வரைஉள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

2

14

1.     தஞ் / சம் -   நேர் நேர் - தேமா

2.    எளி / யன் - நிரை நேர் - புளிமா

3.    பகைக் / கு - நிரைபு - பிறப்பு.

2

15

ஒடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சுத் தடைப்பட்டது.

2

16

கொண்டகொள்(ண்) + ட் +

கொள்பகுதி(ண் ஆனது விகாரம்)  , ட்இறந்தகாலஇடைநிலை , பெயரெச்விகுதி

2

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க                                                                            3X3=9

17

v  குளிர்ந்த சோலையில் மயில்கள் ஆடுகின்றன.

v  தாமரை மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன.

v  குவளை மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.

v  நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன.

v  மகர யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன.

3

18

இடம்:        இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:  எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  .பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

19

ü  சங்ககாலத் தமிழர் திணையின் அடிப்படையில் நிலத்தைப்பிரித்தனர்

ü  ஐவகை நிலங்களுக்கேற்ப தனித்தனியே தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்தனர்.

ü  இன்றைய சூழலில் திணைநிலைத் தொழில்கள் நவீனமாக்கப்பட்டுள்ளதே தவிர மாறவில்லை.

3

20

      சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

3

21

1. இசை,வசனம்,ஆடல்,பாடல், மெய்ப்பாடு

2. கண்ணுக்குக் காட்சியையும், சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தருபவை

3. கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம்,குதிரையாட்டம்,புலியாட்டம்

3

22

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

3

           

                                                                         பகுதி-4                                                           

23

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

5

24

சரியான விடையை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

25

 

நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம்

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        திருத்தணி .

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்ப்பொழில் நாளிதழ்,

            திருவள்ளூர்-1

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

                                                                                                                                                              தங்கள் உண்மையுள்ள,

இடம் : திருத்தணி                                                                                    அ அ அ அ அ.

நாள் : 04-03-2024

5

26

 

மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்

இக்கால வணிக வளாகங்கள்

1

நறுமணப் பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம் செய்யப்பட்டன.

நறுமணப் பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன.

2

பட்டு, பருத்தி நூல் ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர்.

இன்றைக்கு கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர்.

3

முத்துமணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன.

குளிரூட்டப்பட்ட அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன.

4

எட்டு வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன.

எல்லாவித பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன.

5

மருவூர் பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.

 

இன்றைய வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும் உள்ளனர்.

 

5

எவையேனும் இரண்டு  வினாவிற்கு மட்டும் விடையளிக்க                                                         2X8=16

27

முன்னுரை                                     

              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:                            

              நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்: 

     திடீரென்று மேளமும்,நாகசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது                      

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார்..

முடிவுரை:

  “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுறஎன்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

8

28

முன்னுரை:       

    எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும்  உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர். இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

      இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

முடிவுரை:


8

29

முன்னுரை:

கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம்

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

 

 பதிவிறக்க

 

 

 


கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை