9.ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் இயல்-5

9.ஆம் வகுப்புதமிழ்  அலகுத்தேர்வு  இயல்-5

பலவுள் தெரிக.                                                                                                               9×1=9

1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று.

அ) மாமல்லபுரம் ஆ) பிள்ளையார் பட்டி இ) திரிபுவளயீரேசுவரம்  ஈ) தாடிக்கொம்பு

2. 'பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்' நிலப் பகுதி

அ) குறிஞ்சி  ஆ) நெய்தல்  இ) முல்லை ஈ) பாலை

3. இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு -

அ) தளிக சிறப்பு  ஆ) தைத்திங்கள்  இ) வடக்குப் பக்கம்  ) நிலாச்சோறு

4. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை

அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள் 

இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

5. "வசிபட முதுநீர் புக்கு

     மலையெனத் துவரை நன்னீர்" பாடல் அடிகளில் முதுநீர் என்பது எது?

அ) மழை நீர் ஆ) கடல் நீர்  இ) ஆற்று நீர் ஈ) நிலத்தடி நீர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

   பசிபட ஒருவன் வாடப்

        பார்த்துஇனி இருக்கும் கீழ்மை

  முசிபட ஒழுகும் தூய

        முறையினை அறிவார் போல

  வசிபட முதுநீர் புக்கு

        மலையெனத் துவரை நன்னீர்

  கசிபட ஒளிமுத் தோடு கரையினில் குவிப்பார் அம்மா

 6. இப்பாடல் இடம் பெற்ற நூல்  

அ) உயிர்வகை ஆ) குடும்பவிளக்கு இ) இராவண காவியம் ஈ) மணிமேகலை

7. முதுநீர் -  இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) குறிப்புப் பெயரெச்சம் ஈ) குறிப்பு வினையெச்சம்

8. பாடலில் இடம்பெற்ற அடி எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு

) பசிபட - பார்த்து  ) பசிபட – முசிபட  ) முசிபட –முறையினை ) முதுநீர் - புக்கு

9. இப்பாடலின் ஆசிரியர் 

) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) புலவர் குழந்தை ) நாமக்கல் கவிஞர்

குறுவினா                                                                                                                        7×2=14

10. நடுகள் என்றால் என்ன?

11. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

12. இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.

13. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

14. பூக்கும்  - பகுபத உறுப்பிலக்கணம் தருக

15. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக

   அ. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்  ஆ. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்

16. கலைச்சொல் தருக:  அ. Cave temple  . Statue

சிறுவினா (வினா எண்: 20 கட்டாய வினா)                                                                            3×3=9

17. முழு உருவச் சிற்பங்கள் - புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

18. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

19. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)

    ஐந்துசால்பு ஊன்றிய தூண்.  - இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி  எழுதுக.

20.  ”கல்லிடை----எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

விரிவான விடையளி                                                                                                2×5=10

21. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

22. . உங்களையே மகிழச்செய்த உங்கள் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.   (அல்லது)

மொழி பெயர்க்க:

1. Strengthen the body

2. Love your food
3. Thinking is great

4. Walk like a bull

5. Union is strength

6. Practice what you have learnt

23. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக 

நெடுவினா                                                                                                              1×8=8

23. . தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக                         (அல்லது)

. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் 'செய்தி' கதையின் மூலமாக விளக்குக 


You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை