இயல்-6 ஒரு மதிப்பெண் வினாவங்கி விடைக்குறிப்பு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. சரியான
அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண். ஏர். மாடு ஆ) மண், மாடு, ஏர். உழவு
இ) உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர். உழவு, மாடு, மண்
2. தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
3. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி
நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர
நாடு,
சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
4. இருநாட்டு
அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ)
ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
5. 'மாலவன் குன்றம்
போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே-
அ)
திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருக்கணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும்
திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
6. காந்தியடிகள்
சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையைத்தொடங்கிவைத்த இடம்-----தொடங்கிய ஆண்டு---
அ) இந்தியா, 1906 ஆ) தென் ஆப்பிரிக்கா, 1906
இ) இந்தியா, 1922 ஈ)
தென்னாப்பிரிக்கா, 1922
7. ஆங்கிலேயர்களுக்கு
எதிராக வ.உ.சி தொடங்கிய கப்பல் நிறுவனம்--------
அ) சுதேசி ஆ) தமிழக கப்பல் நிறுவனம்
இ) வ.உ.சி ஈ) மாடன் இந்தியா
8. மா பொ
சி யின் பெற்றோர்
அ) சின்னசாமி, இலக்குமி
ஆ) கனகசபை,இலக்குமி
இ) பொன்னுசாமி,சிவகாமி ஈ) சாத்தப்பன்,விசாலாட்சி
9. மா பொ
சி அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர்
அ) முத்தையா ஆ)
சுப்புரத்தினம் இ) சுப்ரமணியன் ஈ) ஞானப்பிரகாசம்
10. மா பொ
சியை சிவஞானி என்று அழைத்தவர்----------
அ) சரபையர் ஆ) சோசியர் இ)
ஞான முனிவர் ஈ) திருத்தாண்டகம்
11. மா பொ
சி இளம்வயதில் எப்பாடல்களைப் பாடி இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டார்?
அ) நாட்டுப்புறப்
பாடல்கள் ஆ) அம்மானை இ) தூது ஈ)
பரணி
12. மா பொ
சி எவ்வாறு இலக்கிய அறிவு பெற்றார்?
அ) நூல்களைப் படிப்பதன் மூலம்
ஆ) எழுதுவதன் மூலம்
இ) மனப்பாடம் செய்வதன் மூலம்
ஈ) சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலம்
13. அறிவு
விளக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகளாக மா பொ சி கூறுவன-----, --------
அ) கல்வி, கேள்வி ஆ)
கல்வி, ஓவியம் இ) கலை, பண்பாடு ஈ) கலை,
இசை
14. மா பொ சி யின் கேள்வி ஞானத்தைப் பெருக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்
அ) குன்றக்குடி அடிகளார்
ஆ)
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
இ) சோமசுந்தர பாரதியார் ஈ) மதுரை முத்து
15.
காந்தி-இர்வின்
ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு
அ) 1921 ஆ) 1930 இ) 1931
ஈ) 1947
16. ”தமிழா,
துள்ளி எழு!” சென்ற துண்டறிக்கை
வழங்கப்பட்ட நாள்
அ) 30-08-1929
ஆ) 30-08-1930 இ) 30-08-1931 ஈ) 30-08-1932
17. ’இந்தியாவை
விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை பேராயக் கட்சி
நிறைவேற்றிய நாள்
அ)1944 ஆகஸ்ட் 7 ஆ) 1942 ஆகஸ்ட் 8 இ) 1943 ஆகஸ்ட் 8 ஈ) 1942 ஆகஸ்டு 9
18. மா பொ
சி இளம்பருவத்தில் விரும்பிப் படித்த பாடல்கள்
அ) நாட்டுப்புற பாடல்கள்
ஆ) தெம்மாங்கு பாடல்கள் இ) சித்தர் பாடல்கள் ஈ) தேவாரப்
பாடல்கள்
19. வடக்கெல்லை
தமிழர்களை ஒன்றிணைத்து தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்
அ) ம பொ சி ஆ) மங்கலங்கிழார் இ) மங்களநாதன்
ஈ) ஜீவானந்தம்
20. சென்னையிலும்,
திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்திய
அமைப்பு
அ) பேரரசு கழகம்
ஆ) தமிழரசு கழகம் இ) பேராய கழகம்
ஈ) தமிழ் கழகம்
21. மொழிவாரி
மாநிலம் பிரிக்கப்பட்டபோது சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்குக் கொடுத்த ஆணையம்
அ) கோத்தாரி ஆணையம் ஆ) ஹன்டர் ஆணையம்
இ) சர்தார் கே எம் பணிக்கர் ஆணையம் ஈ) ஈஸ்வரபாய் படேல் ஆணையம்
22. தமிழினத்தின்
பொதுச்சொத்து என்று போற்றப்பட்ட நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள்
இ) திருவாசகம் ஈ) மணிமேகலை
23. சிலம்புச்
செல்வர் என்று போற்றப்பட்டவர்---------
அ) இளங்கோவடிகள் ஆ)
பாவாணர் இ) சுகி சிவம் ஈ) ம பொ சி
24. தலைநகர்
காக்க முதல்வர் பதவியையும் துறக்கத் துணிந்தவர்
அ) அறிஞர் அண்ணா ஆ)
காமராஜர் இ) இராஜாஜி
ஈ) கருணாநிதி
25. சென்னை
மீட்புப் போராட்டத்தில் போது மாநகரத் தந்தையாக இருந்தவர்
அ) நேசமணி ஆ) செங்கல்வராயன் இ) வாஞ்சு
ஈ) மங்கலங்கிழார்
26. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம் என முழங்கியவர்
அ) செங்கல்வராயன் ஆ) மபொசி இ) நேசமணி
ஈ) சேட்டன்
27. சென்னை
தமிழருக்கே என்று உறுதியான நாள்-------
அ) 25-03-1953 ஆ)
17-08-1953 இ) 25-08-1953 ஈ) 15-07-1947
28. தமிழக வடக்கு-
தெற்கெல்லை கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த இயக்கம்
அ) பேராயக் கழகம் ஆ) தமிழரசுக் கழகம் இ) குடியரசுக்
கழகம் ஈ) தமிழ் கழகம்
29. குமரி
மாவட்ட எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) ம பொ சி ஆ)
ராஜாஜி இ) மார்ஷல் ஏ நேசமணி
ஈ) மங்கலங்கிழார்
30. ஆஸ்திரியா
நாட்டின் தலைநகர்
அ) கான்பெரா ஆ)
வெலிங்டன் இ) வியன்னா
ஈ) பாரிஸ்
31. கன்னியாகுமரி
மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள்
அ) 1950 ஜனவரி
26 ஆ) 1947 ஆகஸ்டு 15
இ) 1955 நவம்பர் 1 ஈ) 1956 நவம்பர் 1
32. மாநிலங்களை
மொழி வாரியாகப் பிரித்து அமைக்கும் கொள்கை எந்த ஆணையத்தின் பரிந்துரையில்
ஒப்புக்கொள்ளப்பட்டது?
அ) பசல் அலி ஆணையம்
ஆ) மத்திய தேர்வாணையம்
இ) மார்ஷல் நேசமணி ஆணையம்
ஈ) இந்திய மொழிவாரி ஆணையம்
33. பசல்
அலி ஆணையம் தனது பரிந்துரையை மத்திய அரசிடம் வழங்கிய நாள்
அ) 1985 நவம்பர்
10 ஆ) 1955 அக்டோபர் 10
இ) 1965 அக்டோபர் 10 ஈ) 1965 நவம்பர் 20
34. புறநானூற்றிலும்,சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்ட தமிழகத்தின் வடக்கெல்லை------தெற்கெல்லை----
அ) குமரி முனை, வேங்கட
மலை ஆ) வேங்கட மலை, குமரிமுனை
இ) வேங்கட மலை, இந்தியப்
பெருங்கடல் ஈ) அரபிக்கடல், வேங்கட
மலை
35. ஒரு
நாட்டின் தவப்பயன் என ம பொ சி கருதுவது
அ) சிறந்த பொருளாதார
முன்னேற்றம் அடைவது
ஆ) மிகுந்த இயற்கை
வளங்களை பெற்றுத் திகழ்வது
இ) மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது
ஈ) நாட்டு மக்கள்
அனைவரும் வறுமையற்று இருப்பது
36. வியன்னா
அருங்காட்சியகத்தில்-------- தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டது
அ) லிட்மஸ் ஆ)
பாரபின் இ) நீல நிறத்தாள் ஈ) பேபிரஸ்
37. சரியான
கூற்றுகளைத் தேர்ந்தெடு
கூற்று 1: சோழ நாட்டுத் துறைமுகம் முசிறி
கூற்று 2 : முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும்,
எகிப்து நாட்டின் துறைமுகத்தில்
வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது
கூற்று 3 : அவ்வொப்பந்தம் கிபி இரண்டாம்
நூற்றாண்டின் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
அ) மூன்றும் சரி ஆ) 1 தவறு, 2 3 சரி இ)
மூன்றும் தவறு ஈ) 1 2 சரி,
3 தவறு
38. சிற்றகல் ஒளி எனும் கட்டுரை----------எனும் நூலில்
இருந்து தொகுத்து வழங்கப்பட்டது
அ) என் வரலாறு ஆ)
எனது வாழ்க்கை இ) எனது போராட்டம்
ஈ) எனது வழக்கம்
39. ம,பொ.சிவஞானத்தின் தன்வரலாற்று நூல்
அ) என் வரலாறு ஆ)
எனது வாழ்க்கை இ) எனது போராட்டம்
ஈ) எனது வழக்கம்
40. ம.பொ.
சிவஞானத்தின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ஆ)
சிலம்புச் செல்வம்
இ) எனது போராட்டம் ஈ)
எனது வாழ்க்கை
41. பொருந்தாத
சொல்லைத் தேர்ந்தெடு
அ) சுண்ணப்பொடி ஆ)
மணச்சாந்து இ) முத்து
ஈ) அகில்
42. மருவூர்ப்பாக்க
வீதிகளில் எத்தனை வகைத்தானியங்கள் குவிந்து கிடந்தன?
அ) 5 ஆ) 6 இ) 7 ஈ) 8
43. மருவூர்ப்பாக்கத்தில்
தானியங்கள் விற்கப்பட்ட தெரு்………….
அ) நாளங்காடி ஆ) கூலக்கடைத்தெரு இ) அங்காடித்
தெரு ஈ) பெரிய தெரு
44. பொருத்துக
அ) கள் விற்போர்
- 1) உமணர்
ஆ)உப்பு வைப்போர்
- 2) வலைச்சியர்
இ) வெற்றிலை விற்பவர் - 3) ஓசுநர்
ஈ) எண்ணெய் விற்போர் - 4) பாசவர்
அ) 1 2 3 4 ஆ) 2 1 4 3 இ) 2 1 3 4
ஈ) 2 4 3 1
45. மருவூர்ப்பார்க்க
வீதிகளில் மீன் விற்பவர்---------- எனப்பட்டனர்
அ) பரதவர் ஆ) வெற்பர் இ) ஆய்ச்சியர் ஈ) மறவோன்
46. ஏழு
இசைகளைக் குற்றம் இல்லாமல் இசைத்துக் காட்டும் திறமுடையோர்
அ) சிறுபாணர் ஆ) பெரும்பாணர் இ) கூத்தர்
ஈ) விறலியர்
47. ஐம்பெருங்காப்பியங்களின்
முறை வைப்பைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) மூவருலா ஆ) திருத்தணிகை உலா இ) திருவுலா
ஈ) சிலப்பதிகாரம்
48. திருமால்
குன்றம் என அழைக்கப்படுவது
அ) மருதமலை ஆ)
தணிகைமலை இ) அழகர் மலை
ஈ) வள்ளிமலை
49 கண்ணகியையும்
கோவலனையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர்
அ) இளங்கோவடிகள் ஆ)
அறவண அடிகள் இ) வேணாட்டடிகள் ஈ) கவுந்தியடிகள்
50. சுருளி
மலையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு
அ) நெடுவேள் குன்றம் ஆ) திருப்பரங்குன்றம்
இ) திருமுதுகுன்றம் ஈ)
திருக்கழுக்குன்றம்
51. மதுரையில்
கணவனை இழந்த கண்ணகி நெடுவேள் குன்றம் வழியாகச் சென்று-------- என்னும் இடத்தை
அடைந்தாள்
அ) கொடைக்கானல் ஆ) வேங்கைக் கானல் இ) நீலகிரி
ஈ) ஏற்காடு
52. சிலப்பதிகாரத்தில்
வரும் தமிழ் நடை-----------
அ) அடுக்கு மொழி ஆ)
செந்தமிழ் நடை இ) கொடுந்தமிழ் நடை ஈ) உரைப்பாட்டு மடை
53. முத்தமிழ்
காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுவது
அ) மணிமேகலை ஆ) சிலப்பதிகாரம் இ) சீவக
சிந்தாமணி ஈ) கம்பராமாயணம்
54. சிலப்பதிகாரம்---------
காண்டங்களையும்,--------- காதைகளையும் உடையது
அ) 6,30
ஆ) 6,60 இ)
3,30 ஈ) 4,28
55. சிலப்பதிகாரத்துடன்
கதைத் தொடர்புடைய நூல்
அ) மணிமேகலை ஆ) சீவக சிந்தாமணி
இ) வளையாபதி ஈ) சூளாமணி
56. இரட்டைக்
காப்பியங்கள் என்று அழைக்கப்படுவன
அ) இராமாயணம் , மகாபாரதம்
ஆ) பெரியபுராணம் , திருத்தொண்டர் புராணம்
இ) சூளாமணி , சீவக சிந்தாமணி
ஈ) சிலப்பதிகாரம்
, மணிமேகலை
57. இளங்கோவடிகள்---------
மரபைச் சார்ந்தவர்
அ) சோழ ஆ ) சேர இ) பாண்டிய
ஈ) நாயக்க
58. அடிகள்
நீரே அருளுக - ,யார், யாரிடம்
கூறியது?
அ) சீத்தலைச்சாத்தனார்,இளங்கோவடிகளிடம்
ஆ) இளங்கோவடிகள்,சீத்தலைச்சாத்தனரிடம்
இ) இராமபிரான் , குகனிடம்
ஈ) குகன் ,
இராமபிரானிடம்
59. நாட்டுதும்
யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் - என்ற
கூற்றின் விளைவாக உருவான நூல்
அ) மணிமேகலை ஆ)
கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம்
ஈ) பெரியபுராணம்
60. பெருங்குணத்துக்
காதலாள் எனப் போற்றப்பட்டவள்
அ) மணிமேகலை ஆ)
சூர்ப்பனகை இ) கண்ணகி
ஈ) காயசண்டிகை
61. மண்ணுள்
வினைஞர் என அழைக்கப்படுபவர்-----------
அ) நெய்பவர் ஆ) ஓவியர் இ) சாலியர்
ஈ) ஓசுநர்
62. புறம்
பற்றிய நெறிகளைக் கூறுவது
அ) புறத்திணை ஆ) புறநானூறு இ) பதிற்றுப்பத்து ஈ) அகநானூறு
63. வெட்சிப்
பூ---------- எனவும் அழைக்கப்படும்
அ) மல்லிகைப்பூ ஆ) இட்லி பூ இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
64. கைக்கிளை
என்பது--------
அ) போர் அறம் ஆ)
ஈகை பண்பு இ) ஒருதலைக் காமம்
ஈ) பொருந்தாக் காமம்
65. அகம்,
புறம் இரண்டிற்கும் பொதுவான திணைகள்
அ) வெட்சி , கரந்தை
ஆ) பாடாண், பொதுவியல்
இ) நொச்சி , உழிஞை ஈ)
கைக்கிளை , பெருந்திணை
66. ஆநிரை
பற்றிய திணைகள்
அ) வெட்சி, கரந்தை ஆ)
பாடாண், பொதுவியல்
இ) நொச்சி , உழிஞை ஈ) கைக்கிளை , பெருந்திணை
67. மண்ணாசை
காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றச் செல்வது --------திணை
அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) நொச்சி
ஈ) உழிஞை
68. நாட்டைக்
கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது
அ) காஞ்சி ஆ) வஞ்சி
இ) நொச்சி ஈ) உழிஞை
69. நொச்சிப்
பூவைச் சூடி போரிடுவது
அ) கோட்டையைக் காக்க ஆ)மண்ணைக் காக்க
இ) ஆநிரை கவர ஈ) வலிமை நிலைநாட்ட
70. பாடாண்
திணை - பிரித்து எழுதுக
அ) பாடாண்+திணை ஆ)
பாடாண்+ஆண்+திணை
இ) பாடு+ ஆண்+ திணை ஈ) பாட+ ஆண்+ திணை
71. காஞ்சி
என்பது ஒரு வகை-------
அ) நெடுமரம் ஆ) குறுமரம் இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
76. போரைத்
தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது
அ) கோட்டை வளைத்தல் ஆ)
போரிடல் இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
77. நொச்சிப்பூ-----------
நிலத்துக்கு உரியது
அ) குறிஞ்சி ஆ)
பாலை இ) நெய்தல் ஈ) மருதம்
78. வேலிகளில்
ஏறிப் படரும் நீண்ட உழிஞைக் கொடியை----------என்றும் கூறுவர்
அ) கருவிளம் ஆ) சங்குப்பூ இ) முடக்கத்தான்
ஈ) வேலிக்காத்தான்
79. போரில்
வெற்றி பெற்ற மன்னனை புகழ்ந்து பாடுவது--------- திணை
அ) வாகை ஆ) பாடாண் இ) பொதுவியல்
ஈ) வெற்றி
80. புறத்திணையுள்
பொதுவானவற்றையும்,அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது
அ) வெட்சி ஆ)
பாடாண் இ) பொதுவியல்
ஈ) பெருந்திணை
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி