10.ஆம்வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண் வினாவங்கி
இயல்-5
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. கூற்று 1:
போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1
மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
2. "மையோ மர
கதமோ மறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக்
கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம்
3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை நாடகத்தில்
நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது
திரைப்படமா?
நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டுவிழா
நடத்தப்பட்டது?
4. சித்திரை,
வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
5. குளிர்காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
6. கலைஞர்
எழுதிய புதினத்தை தேர்ந்தெடுக்க
அ) புதையல் ஆ) இளைஞர்கள்
இ) தேவன் வருவாரா ஈ)சங்கல்பம்
7. கலைஞர்
பிறந்த ஊர் எது?
அ) திருப்போரூர்
ஆ)திருவாவடுதுறை இ) திருக்குவளை ஈ) திருச்சுண்ணம்
8. கலைஞருக்கு
அரசியல்.அரிச்சுவடியாக அமைந்த நூல் யாருடைய வாழ்க்கை
வரலாற்றை கூறியது?
அ) பரோடா மன்னர் ஆ)
பனகல் அரசர் இ) எட்டயபுரம் மன்னர் ஈ) இராமநாதபுரம் மன்னர்
9. மாணவர்களுக்குப்
பேச்சு பயிற்சி அளிப்பதற்காக கலைஞர் உருவாக்கிய அமைப்பு
அ) இளைஞர் நற்பணி மன்றம்
ஆ) ஊரக இளைஞர் படை
இ) சிறுவர் சீர்திருத்த
சங்கம் ஈ) தேசிய மாணவர் இயக்கம்
10. கலைஞர்
எழுதிய முதல் நாடகம் எது?
அ) வேலப்பன் ஆ) முருகப்பன்
இ) காளியப்பன் ஈ) பழநியப்பன்
11. கலைஞர்
எழுதிய முதல் நாடகம் எந்த ஆண்டு அரங்கேற்றப்பட்டது?
அ) 1942 ஆ) 943 இ) 1944 ஈ) 1945
12. கலைஞருக்கு
எந்த நாடகத்தில் மாணவர் தலைவராக நடித்ததற்காக 'கலைஞர்'
என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டது?
அ) நளாயினி ஆ)
வெள்ளிக்கிழமை இ) தூக்கு மேடை ஈ) முக்கணாங் கயிறு
13. மக்கள்
திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த திரைப்படம் எது?
அ) மந்திரிகுமாரி ஆ)
ராஜகுமாரி இ)அரசிளங்குமரி
ஈ) குலேபகாவலி
14. கலைஞர்
முதன்முதலாக முழு வசனத்தையும் எழுதி திரைப்படம்
அ) மந்திரிகுமாரி ஆ)
ராஜகுமாரி இ) அரசிளங்குமரி ஈ) குலேபகாவலி
15. தமிழ்
திரையுலகின் திருப்புமுனையாக அமைந்த பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம்
எழுதியவர் யார்?
அ) பாவலர் பாலசுந்தரம்
ஆ) கலைஞர் மு கருணாநிதி இ) கே பாலச்சந்தர்
ஈ) பீம் சிங்
16. 'ரங்கோன்
ராதா 'என்ற கதையை எழுதியவர்-----
அ) அறிஞர் அண்ணா ஆ) கலைஞர் மு கருணாநிதி இ) புதுமைப்பித்தன் ஈ)
வாணிதாசன்
17. ' காகித
ஓடம் கடல் அலை மேலே' எனும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
அ) நினைக்கத் தெரிந்த
மனமே ஆ) கூட்டுக் குஞ்சுகள் இ) மந்திரி குமாரி ஈ) மறக்க முடியுமா
18. கலைஞர்
மு கருணாநிதி கதை வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய திரைப்படம் எது?
அ) பராசக்தி ஆ) இளவரசி இ) ராஜா ராணி ஈ)
குறவஞ்சி
19. கலைஞர்
கருணாநிதி தொலைக்காட்சிக்காக எழுதிய தொடர் எது?
அ) வள்ளல் சபாபதி ஆ)
இராமானுஜர் இ) கையளவு மனசு ஈ) உழைப்பே மூலதனம்
20. கலைஞர்
நடத்திய கையெழுத்து ஏட்டின் பெயர்
அ) மாணவ நண்பன் ஆ) மாணவ தோழன் இ) மாணவ நேசன் ஈ) மாணவ தாய்மை
21. கலைஞர்
கருணாநிதி தன்னுடைய முதல் கட்டுரையை எந்த இதழில் எழுதினார்?
அ) சேர நாடு ஆ) சோழநாடு
இ) பாண்டியநாடு ஈ) திராவிட நாடு
22. சேரன்
என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதியவர் யார்?
அ) அறிஞர் அண்ணா ஆ) மு
கருணாநிதி இ) நா காமராசன் ஈ)
புதுமைப்பித்தன்
23. சந்தனக்
கிண்ணம் என்னும் சிறுகதையை எழுதியவர்
அ) அண்ணா ஆ) மு கருணாநிதி இ) நா காமராசன் ஈ) புதுமைப்பித்தன்
24. கலைஞரின்
தன் வரலாற்று நூல் எது?
அ) அக்னி சிறகுகள் ஆ) என்
சரிதம் இ) சுய சரிதம் ஈ) நெஞ்சுக்கு நீதி
25. ”தொல்காப்பியப்
பூங்கா” என்னும் நூலை இயற்றியவர் யார்?
அ) அண்ணா ஆ) மு கருணாநிதி இ) நா காமராசன் ஈ) புதுமைப்பித்தன்
26. புறநானூற்றுத்
தாய் என்பது கலைஞர் எழுதிய-----
அ) மரபுக் கவிதை ஆ) வசன
கவிதை இ) உரைநூல் ஈ) நாடகம்
27. வள்ளுவர்
கோட்டமும் வள்ளுவர் சிலையும் அமைந்துள்ள இடங்கள் முறையே
அ) சென்னை, திருவள்ளூர்
ஆ) சென்னை, திருவாரூர்
இ) சென்னை, கன்னியாகுமரி
ஈ) கன்னியாகுமரி ,சென்னை
28. கண்ணகி
வாழ்ந்த ஊரில் உருவாக்கப்பட்டுள்ள கலைக்கூடம்
அ) வரலாற்றுக்
கலைக்கூடம் ஆ) கரந்தை கலைக்கூடம்
இ) பூம்புகார்
கலைக்கூடம் ஈ) சேரன் கலைக்கூடம்
29) கலைஞர்
மு கருணாநிதி எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
அ) திருவள்ளூர் ஆ)
திருவாரூர் இ) நாகப்பட்டினம் ஈ) தஞ்சாவூர்
30. அண்ணா
நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட ஆண்டு
அ) 2009 ஆ) 2010 இ) 2011 ஈ) 2012
31. செம்மொழி
உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு
அ) 2009 ஆ) 2010 இ) 2011 ஈ) 2012
32. 2010 ஆம்
ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம்
அ) சென்னை ஆ) கோவை இ)
மதுரை ஈ) திருநெல்வேலி
33) ஆறு ஒரு ஓவியமாக விரிந்து,
உயிரெனக் காட்சியளிப்பதாக உணர்வது---------
அ) ஓவியக்கலை ஆ) அழகுணர்ச்சி இ) மெய்யுணரச்சி ஈ) நுண்கலை
34) கொடிவேலி
உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி பாய்வது
அ) காவேரி ஆறு ஆ)
சரயு ஆறு இ) பாலாறு ஈ) வைகை ஆறு
35) கீழ்கண்டவற்றுள்
கொடிவகையைச் சார்ந்தது எது?
அ)செண்பகம் ஆ)கமுகு இ)
குருக்கத்தி ஈ)கொன்றை
36) ஓசை
தரும் இன்பம் உவமை இல்லா இன்பமடா - எனப் பாடியவர்
அ) பாரதிதாசன் ஆ)
பாரதியார் இ) கவிமணி ஈ)
நாமக்கல் கவிஞர்
37) கம்பன் இசைத்த கவி எல்லாம்
நான் என்று பெருமைப் படுபவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) நாமக்கல் கவிஞர்
38) மையோ? மரகதமோ?
மறிகடலோ? மழை முகிலோ? - இவ்வடியில் இடம்பெறும் நயம்
அ) எதுகை நயம் ஆ) மோனை நயம் இ)
இயைபு நயம் ஈ)முரண் நயம்
39) ”ஏழைமை வேடன் இறந்திலன்” என்று எனை ஏசாரோ? இவ்வடியில் வேடன் என்பது
அ) இராமன் ஆ) இலக்குவன் இ) துரியோதனன்
ஈ) குகன்
40) நீர்நிலைகள் எழுப்பும்
திரைச்சீலைகள் என்று கம்பர் குறிப்பிடுவது
அ) மீன்கள் ஆ)
அலைகள் இ) தாவரங்கள் ஈ)
கதிரொளி
41) வண்டுகளின் ரீங்காரத்திற்கு
கூறப்பட்ட உண்மை
அ) மகரயாழ் ஆ)
விளரியாழ் இ) முல்லை யாழ் ஈ)பாலையாழ்
42) உறங்குகின்ற கும்பகன்ன
- இத்தொடரில் இடம் பெற்ற தொகாநிலைத் தொடர்கள் முறையே
அ) விளித்தொடர், பெயரெச்சத் தொடர் ஆ)
எழுவாய் தொடர், விளித்தொடர்
இ) பெயரெச்சத் தொடர்,விளித்தொடர் ஈ) வினையெச்சத் தொடர், பெயரெச்சத் தொடர்
43) கம்பர்
இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி……….எனப் பெயரிட்டார்
அ) பெரியபுராணம் ஆ)இராமாவதாரம்
இ) இராமாயணம் ஈ)இராம காதை
44) கம்பராமாயணம்---------
காண்டங்களை உடையது
அ) நான்கு ஆ)
ஏழு இ) எட்டு ஈ) ஆறு
45) கம்பர்
பிறந்த ஊர்
அ) மயிலாடுதுறை ஆ)
திருவாரூர் இ) தேரழுந்தூர் ஈ) திருக்கோவிலூர்
46) கம்பரை
ஆதரித்தவர்
அ) சீதக்காதி ஆ)குமண
வள்ளல் இ) சடையப்ப வள்ளல் ஈ)
பாண்டித்துரை
47) பொருள் என்பது----------
அ) ஆயுதம் ஆ)
ஒழுக்க முறை இ) கடையில் இருப்பது ஈ) பயன்படுத்துவது
48) தமிழர் வாழ்வியலை--------- ,
------------ என வகுத்தார்கள்
அ) அகம், புறம்
ஆ) இன்பம், துன்பம் இ) உயர்வு, தாழ்வு ஈ)
நிகழ்வு, எதிர்வு
49) அன்புடைய தலைவன் தலைவி
இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது
அ) குடும்பம் ஆ) புறத்திணை இ) அகத்திணை
ஈ) இல்லறம்
50) நிலமும்
பொழுதும்----------- எனப்படும்.
அ) உரிப்பொருள் ஆ)
கருப்பொருள் இ) திறைப்பொருள் ஈ) முதற்பொருள்
51) பொழுதின் இரு வகைகள்---------,-----------
அ) சிறுபொழுது, பெரும் பொழுது ஆ) காலை, மாலை
இ) இரவு, பகல் ஈ) அந்தி, சந்தி
52) ஓராண்டின் ஆறு
கூறுகளை---------- எனவும், நாளின் ஆறு கூறுகளை--------
எனவும் அழைப்பர்
அ) சிறுபொழுது, பெரும்பொழுது
ஆ)பெரும்பொழுது, சிறுபொழுது இ)மாதம், வாரம் ஈ)வாரம்,மாதம்
53) வயலும் வயல் சார்ந்த இடமும்---------
அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) மருதம்
ஈ) நெய்தல்
54) பொருத்துக
அ) கார்காலம்
- 1. மாசி,
பங்குனி
ஆ) குளிர்காலம்
- 2 .மார்கழி, தை
இ) முன்பனிக்காலம் - 3. ஐப்பசி, கார்த்திகை
ஈ) பின்பனிக்காலம் - 4. ஆவணி, புரட்டாசி
அ) 4 3 2 1
ஆ) 3 4 1 2 இ)4 2
3 1 ஈ)3 4 2 1
55) சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் இரண்டும்----------
காலத்துக்குரியன
அ) குளிர்காலம் ஆ) முன்பனிக்காலம் இ) முதுவேனில்
ஈ) இளவேனில்
56) பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை 6 மணி
வரை உள்ள சிறுபொழுது சிறுபொழுது
அ) வைகறை ஆ)
எற்பாடு இ) மாலை ஈ) யாமம்
57) ஆறு பெரும் பொழுதுகளையும் உடைய
திணைகள்
அ) குறிஞ்சி ,மருதம் ஆ) மருதம் ,பாலை இ) மருதம், நெய்தல் ஈ) பாலை, குறிஞ்சி
58) நெய்தல் நிலத்திற்குரிய
சிறுபொழுது
அ) ஏற்பாடு ஆ)
காலை இ) மாலை ஈ) வைகறை
59) குறிஞ்சி நிலத்திற்குரிய
பெரும்பொழுதுகள்
அ) ஆறும் ஆ)
குளிர்காலம், முன்பனிக்காலம் இ)
கார்காலம் ஈ) இளவேனில்,முதுவேனில்
60) குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய
நிலங்களின் தெய்வங்கள் முறையே
அ) வருணன், இந்திரன்,
முருகன் ஆ) இந்திரன், முருகன், கொற்றவை
இ) முருகன், திருமால்,
கொற்றவை ஈ) முருகன், இந்திரன், வருணன்
61) முல்லை நிலத்துக்குரிய உணவு
அ) மலைநெல், தினை
ஆ) வரகு, சாமை இ) செந்நெல்,வெண்ணெல் ஈ) மீன்
62.
--------, -------- உடைய அமைச்சர்களுக்கு முன் எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்க முடியாது
அ)
விடாமுயற்சியும் , நுண்ணறிவும் ஆ) இயற்கையான நுண்ணறிவும், நூல் அறிவும்
இ)
அன்பும் அறிவும் ஈ) ஆற்றலும் திறமையும்
63.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் -
இக்குறளில் பயின்று வரும் அணி
அ)
பொருள் பின்வருநிலையணி ஆ) சொல்
பின்வருநிலையணி
இ)
சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) தன்மையணி
64.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை - இத்திருக்குறளில்
பயின்று வரும் அணி
அ)
எடுத்துக்காட்டு உவமையணி ஆ) உவமையணி
இ)
பொருள் பின்வருநிலையணி ஈ) உயர்வு நவிற்சி அணி
65.
பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகத் திருவள்ளுவர் கூறுவது
அ)
விடாமுயற்சி ஆ) அன்புடைமை இ) பொருள் ஈ) ஆள்வினை உடைமை
66.
மனத்தில் துணிவு இல்லாதவராய் அறிய வேண்டியவற்றை அறியாதவராய்
பொருந்தும் பண்பு இல்லாதவராய் பிறருக்கு கொடுத்து உதவாதவராய் இருப்பவர் இந்நிலையை
அடைவார் என்று திருக்குறள் கூறுகிறது?
அ.
உறவுகளை இழப்பர் ஆ. எளிதில் பகைக்கு ஆட்படுவர்
இ.
செல்வங்கள் அனைத்தையும் இழப்பர் ஈ. அறிவை இழப்பர்
67.
உலகத்தார் யாரை உறவாகக் கொண்டு போற்றுவர்?
அ)
அனைவரிடமும் அன்பு செலுத்துபவர் ஆ) விடாமுயற்சியுடன் செயல்களை செய்பவர்
இ)
குற்றம் செய்யாது குடிப் பெருமையை உயரச் செய்பவர்
ஈ)
பிறர் பொருளை விரும்பாதவர்
68.
"நல்குரவு" என்ற சொல்லின் பொருள்
அ)
நட்பு ஆ) வறுமை இ) புறங்கூறாமை ஈ) சுற்றம் பேணுதல்
69.
கரத்தல் என்ற சொல்லின் பொருள்
அ)
பால் கறத்தல் ஆ) பொருள் கொடுத்தல்
இ)
பொருளை மறைத்து வைத்தல் ஈ) பொருளை
விரும்புதல்
70.
இரப்பவரின் உள்ளத்தில் எப்போது மகிழ்ச்சி பொங்கும் என்று
திருவள்ளுவர் கூறுகிறார்?
அ)
ஏளனம் செய்து பொருள் தருபவர் ஆ) ஏளனம் செய்யாமல் பொருள் தருபவர்
இ)
பொருள் தர மறுப்பவர் ஈ) தன்னிடம் உள்ள பொருளை விரும்புபவர்
71.
தேவர் ஆணையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் - இத்திருக்குறளில்
பயின்று வரும் அணி
அ) பிறிது மொழிதலணி ஆ) சிலேடை அணி இ)
வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ) உவமை அணி
72.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் - இத்திருக்குறளில்
பயின்று வரும் அணி
அ) பிறிது மொழிதலணி ஆ) சிலேடை அணி இ)
வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ) உவமை அணி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி