10.ஆம் வகுப்பு தமிழ் இயல்-7 வினாடி வினா

 

வினாவிடைகளை ஒருமுறை நன்கு படித்துவிட்டு வினாடி வினாவில் பங்கேற்கவும். வினாவினாவிற்கான இணைப்பு பதிவின் இறுதியில் உள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. மேன்மை தரும் அறம் என்பது-

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்

   பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

அ) உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்

இ) பேகன் கிள்ளிவளவன்  ஈ) நெடுஞ்செழியன்: திருமுடிக்காரி

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசை  ஆ) முன்பின்  இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப் பறத்தல்

4. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.

அ) கருணையன்எலிசபெத்துக்காக  ஆ) எலிசபெத்தமக்காக

இ) கருணையன்பூக்களுக்காக  ஈ) எலிசபெத்பூமிக்காக

5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா

5. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமையைப் பற்றிக் கூறியவர்-------

அ) ஏணிச்சேரி முடமோசியார்  ஆ) ஔவையார்   இ) கபிலர்    ஈ) பரணர் 

6. ”இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

    அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” -என்று குறிப்பிடப்பட்ட வள்ளல் 

அ) பாரி   ஆ) பேகன்    இ) ஆய்    ஈ) கர்ணன்

7. அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டவை

அ) தானம்தவம்  ஆ) உறுபொருள்,திறைப்பொருள்

இ) செங்கோல்கொடுங்கோல் ஈ) செங்கோல்வெண்கொற்றக்குடை 

8. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பது------- கடமை

அ) அரசன்  ஆ) குடிமக்கள்  இ) வணிகர்  ஈ) அமைச்சர்

9. ஊன்பொதிப் பசுங்குடையார் கூறும் அரசியல் அறம்

அ) முறையாக வரி வசூலித்தல் 

ஆ) அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்குதல்

இ) குடிமக்களின் வறுமை போக்குதல்   

ஈ) எல்லைகளை விரிவாக்கல்

10. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்  அறனும்காத்தலும் அமைச்சர் கடமை -என்று குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி   ஆ) புறநானூறு   இ) அகநானூறு   ஈ) பதிற்றுப்பத்து

11. அரசருக்கு உதவிய அமைச்சர்களை ‘ செம்மை சான்ற காவிதி மாக்கள்’ எனப்போற்றியவர்

அ) கபிலர்   ஆ) இளங்கோவடிகள்   இ) மோசிகீரனார்  ஈ) மாங்குடி மருதனார் 

12. ’அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி  ஆ) புறநானூறு  இ) அகநானூறு  ஈ) பதிற்றுப்பத்து

13. மதுரையில் இருந்த அவையம் பற்றிக்குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி   ஆ) புறநானூறு   இ) அகநானூறு  ஈ) பதிற்றுப்பத்து

14. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக் கூடாது எனக் கூறியவர்

அ) மாங்குடி மருதனார்   ஆ) அவ்வையார்  இ) ஆவூர் மூலங்கிழார்   ஈ) கிள்ளிவளவன் 

15. பின்வருவனவற்றுள் போர் அறம் எது?

அ) ஆயிரம் யானைகளைக் கொல்லுதல்

ஆ) வீரமற்றோர்புறமுதுகிட்டோரை எதிர்த்துப் போரிடாமை

இ) அனைவரையும் பழிவாங்குதல்   ஈ) பொருள் கொடுத்து உதவுதல் 

16. தமிழர்களால் வீரத்தை போன்றே போற்றப்பட்ட பண்பு

அ) கொடை   ஆ) போர்த்திறம்   இ) கல்வி   ஈ) தொழில்கள்

17. ’செல்வத்துப் பயனே ஈதல்’ - என்று கூறியவர்

அ) கபிலர்   ஆ) அவ்வையார்   இ) நக்கீரனார்    ஈ) மாங்குடி மருதனார்

18. வள்ளல் எழுவரின் கொடை பெருமையைக் குறிப்பிடும் நூல்

அ) பெரும்பாணாற்றுப்படை ஆ) சிறுபாணாற்றுப்படை  இ) புறநானூறு  ஈ) கலித்தொகை

19. கொடை இலக்கியங்களாகக் கருதப்படுபவை

அ) சங்க இலக்கியங்கள்  ஆ) நீதி இலக்கியங்கள்

இ) ஆற்றுப்படை இலக்கியங்கள்    ஈ) காப்பியங்கள்

20. சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ள நூல்

அ) புறநானூறு  ஆ) கலித்தொகை  இ) பட்டினப்பாலை  ஈ) பதிற்றுப்பத்து

21. ’இல்லோர் ஒக்கல் தலைவன்பசிப்பிணி மருத்துவன்’  என்றெல்லாம் போற்றப்பட்டவர்

அ) வள்ளல்கள்   ஆ) அரசர்கள்   இ) அமைச்சர்கள்  ஈ) மருத்துவர்கள்

22. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள் ;வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை ’ என்றவர்

அ) பெருங்கௌசிகனார்   ஆ) பெரும்பதுமனார்   இ) பெரும்பாணர்   ஈ) பெரியாழ்வார்

23. இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைப்பவன்

அ) பாரி   ஆ) அண்டிரன்   ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்   ஈ) குமணன் 

24. மறுமையை நோக்கி கொடுக்காதவன் என்று பரணரால்குறிப்பிடப்படுபவர்

அ) திருமுடிக்காரி   ஆ) வல்வில் ஓரி  இ) அண்டிரன்    ஈ) பேகன்

25 தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என வருந்தியவன்

அ) பாரி  ஆ) அண்டிரன்  இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்  ஈ) குமணன் 

26. இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கூறும் நூல்

அ) புறநானூறு  ஆ) கலித்தொகை  இ) பட்டினப்பாலை  ஈ) பதிற்றுப்பத்து

27. உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார்----------- என்று குறிப்பிடுகிறார்

அ) அறம்   ஆ) உதவியாண்மை  இ) நற்செயல்   ஈ) நல்லொழுக்கம்

28. உண்மையான செல்வம் என்று நல்லந்துவனார் குறிப்பிடுவது

அ) கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது  

ஆ) அறங்கள் பல புரிவது                                                    

இ) பிறர் துன்பம் தீர்ப்பது   

ஈ) எதிர்காலத்திற்குச் சேர்த்து வைப்பது

29. வாய்மை பேசும் நாவை இலக்கியங்கள்--------- என அழைக்கின்றன

அ) கருநா ஆ) செந்நா  இ) பொய்படுபரியா வயங்கு செந்நா ஈ) இரட்டை நா

30. நற்றிணை  வாய்மையை------என்றும்பொய்யை--------- என்றும் குறிப்பிடுகிறது.

அ) பிழையா நன்மொழிபொய்ம்மொழிக் கொடுஞ்சொல் 

ஆ) பொய்ம்மொழிக் கொடுஞ்சொல்,பிழையா நன்மொழி 

இ) இன்சொல்இன்னாச்சொல்  ஈ) அறம்அறம் அல்லாதது

31. போதிதர்மர்---------- மாநகரத்தைச் சார்ந்த சிற்றரசர் ஆவார்.

அ) புகார்   ஆ) மதுரை   இ) வஞ்சி  ஈ) காஞ்சி 

32. போதிதர்மர் ---------சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார்.

அ) சமண   ஆ) சீக்கிய   இ) பௌத்த   ஈ) முகமதிய 

33. போதிதர்மர் போதித்த சமயத் தத்துவத்திலிருந்து உருவானதே--------- தத்துவம்

அ) தாவோவியம்  ஆ) ஜென் தத்துவம்  இ) பன்மைத்துவம்  ஈ) தொழில் தத்துவம்

34. தனிச்சிறப்பு பெற்ற அவையம் அமைந்திருந்த இடம்------ 

அ) உறையூர்   ஆ) மதுரை   இ) திருநெல்வேலி   ஈ) காஞ்சிபுரம் 

35. சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறமாகக் கருதப்படுவது--------

அ) உதவி  ஆ) கொடை   இ) வாய்மை   ஈ) பொருள்

36. கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர்

அ) சூசையப்பர்   ஆ) திருமுழுக்கு யோவான்  இ) பேதுரு  ஈ) ஆபிரகாம் 

37. திருமுழுக்கு யோவானை--------- என்றும் அழைப்பர்

அ) அருளரசு   ஆ) அருள்தாசன்    இ) அருளப்பன்  ஈ) அருள் மேத்யூஸ்

38. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

அ) சூசையப்பர்   ஆ) திருமுழுக்கு யோவான்  இ) பேதுரு  ஈ) ஆபிரகாம் 

39. அருளப்பனுக்கு  வீரமாமுனிவர் தன் காப்பியத்தில்------- எனப் பெயரிட்டுள்ளார்.

அ) கருணாகரன்  ஆ) கருணையன்  இ) சூசையப்பர்   ஈ) பேதுரு 

40. கருணையனின்  தாயார் ----------

அ) எலிசபெத்  ஆ) எழிலரசி  இ) டயானா   ஈ) கிரேசி 

41. கணீர் - என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) வினையெச்சம்  ஆ) பெயரெச்சம்  இ) இடைக்குறை  ஈ) மரூஉ 

42. காய்மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்  அந்தோ -இக்கூற்றுக்கு உரியவன்

அ) சூசையப்பர்  ஆ) பேதுரு  இ) அருளரசு   ஈ) கருணையன்

43. பிரித்தெழுதுக:உணர்வினொத்து

அ) உணர்வு+ ஒத்து  ஆ) உணர்வி+ ஒத்து  இ) உணர்வின்+ ஒத்து ஈ) உணர்வின்+நொத்து

44. செல்வழி -  என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) பண்புத்தொகை   ஆ) வினைத்தொகை  இ) உம்மைத்தொகை  ஈ) உவமைத்தொகை

45. தவமணி மார்பன் யார்?

அ) சூசையப்பர்  ஆ) பேதுரு  இ) அருளரசு   ஈ) கருணையன்

46. உருபும் பயனும் உடன்தொக்க தொகையைக் கண்டறிக.

அ) அன்புண்டு  ஆ) வாய்மணி  இ) கைமுறை   ஈ) பொழிந்தான் 

47. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்

அ) அன்னியர் துறவி  

ஆ) உள்நாட்டுத் துறவி  

இ) தூய துறவி  

ஈ) தொழில் செய்பவர்                                                                                                             

48. இஸ்மத் சன்னியாசி என்பது-------- மொழிச் சொல்

அ) உருது   ஆ) பாரசீகம்   இ) கிரேக்கம்  ஈ) இலத்தீன் 

49. வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை அளித்தவர் 

அ) சந்தாசாகிப்  ஆ) முகமது சாஹிப்  இ) அஜ்மல் சாஹிப்  ஈ) வகாப் ரியாஸ் 

50. தேம்பா+அணி  எனப் பிரித்தால்----என்றும் . தேன்+பா+அணி  எனப் பிரித்தால்---------என்றும் பொருள்படும்.

அ) தேன் போன்ற பாடல்வாடாத மாலை  ஆ) வாடாத மாலைதேன் போன்ற பாடல்

இ) அணிகலன்வாடாத மாலை     ஈ) தேன் போன்ற பாடல்இனிமையான உணவு 

51. கிறித்துவின் வளர்ப்புத் தந்தை 

அ) சூசையப்பர்  ஆ) பேதுரு  இ) அருளரசு   ஈ) கருணையன்

52. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்

அ) பேதுரு   ஆ) கருணையன்   இ) வீரமாமுனிவர்  ஈ) வளன்

53. தேம்பாவணி ----காண்டங்களையும்,--- படலங்களையும்,--- பாடல்களையும் உடையது

அ) 36,3,3615   ஆ) 3,30,1234  இ) 3,36,3615   ஈ) 6,30,5641

54. தேம்பாவணி படைக்கப்பட்ட நூற்றாண்டு---------        

அ) 17    ஆ) 15    இ) 18    ஈ) 16

55. வீரமாமுனிவரின் இயற்பெயர்

அ) அரிஸ்டாட்டில்  ஆ) கான்சுடான்சு சோசப் பெசுகி  இ) மேத்யூ ஹைடன்  ஈ) பிராவோ 

56. தமிழின் முதல் அகராதி

அ) பேரகராதி  ஆ) தொன்னூல்  இ) சதுரகராதி  ஈ) நேமிநாதம் 

57. வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல்

அ) பேரகராதி  ஆ) தொன்னூல் விளக்கம்  இ) சதுரகராதி  ஈ) நேமிநாதம் 

58. கானில் செல்வழி அறியேன் - என்பது யார் கூற்று?

அ) பேதுரு   ஆ) கருணையன்   இ) வீரமாமுனிவர்  ஈ) வளன்

59. பொருத்துக

       1. கடிந்து         -   அ. விலக்கி

       2. உவமணி    -   ஆ.மாலை

       3. படலை        -   இ. மணமலர்

       4. துணர்         -    ஈ. மலர்கள் 

அ) ஆ அ ஈ இ    ஆ) ஈ அ ஆ இ    இ) ஆ அ இ ஈ  ஈ) அ இ ஆ ஈ

60. புதுக்கவிதை அன்றாட நிகழ்வுகளில் எவற்றிற்கான பாதைகளை காணுகிறது?

அ) அன்பு நெறிகள் ஆ) ஒழுக்க நெறிகள் இ) வாழ்வியல் ஈ) மெய்யியல்

61. பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடித்த மனிதர்கள் மீதான அக்கறை. இவ்வரிகளில் கவிஞர் எதற்காக வெதும்புகிறார்?

அ) பழங்கள் நசுங்கியதற்காக  ஆ) மனித நேயம் நசுங்கியதற்காக

இ) விருந்தோம்பல் நசுங்கியதற்காக நசுங்கியதற்காக    ஈ) பழக்கூடை நசுங்கியதற்காக

62. கல்யாண்ஜியின் இயற்பெயர்

அ) மோகனசுந்தரம் ஆ) குமார வேலன் இ) கல்யாணசுந்தரம் ஈ) அழகு சுந்தரம்

63. வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருபவர்

அ) மோகனசுந்தரம் ஆ) குமார வேலன் இ) கல்யாணசுந்தரம் ஈ) அழகு சுந்தரம்

64. புலரி முன்பின் என்பன கல்யாண்ஜி எழுதிய-----

அ) சிறுகதை ஆ) கவிதை இ) குறும்பு தினம் ஈ) புதினம்

65. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க

அ) புலரி ஆ) முன்பின் இ) ஆதி ஈ) அகமும் புறமும்

66. வண்ணதாசனின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ----- என்ற பெயரில் வெளியானது.

அ) ஒரு சிறு இசை ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்

இ) சில இறகுகள் சில பறவைகள் ஈ) நிறம் மாறாத பூக்கள்

67. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்பது வண்ணதாசன் எழுதிய-----

அ) சிறுகதை ஆ) கவிதை இ) குறும்பு தினம் ஈ) புதினம்

68. கல்யாண்ஜிக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது?

அ) 2015 ஆ) 2018 இ) 2016  ஈ) 2017

69. கல்யாண்ஜியின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?

அ) அந்நியமற்ற நதி ஆ) மணல் இ) சில இறகுகள் சில பறவைகள் ஈ) ஒரு சிறு இசை

70. ஒரு சிறு இசை என்பது கல்யாண்ஜி எழுதிய -----

அ) சிறுகதை தொகுப்பு ஆ) புதினம் இ) கவிதை ஈ) உரைநூல்

71. யாப்பின் உறுப்புகள் மொத்தம்-----

அ) 5    ஆ) 6   இ ) 7   ஈ) 8

72. பா-------- வகைப்படும்

அ) 6  ஆ) 5   இ) 4   ஈ) 8

73. பாக்களுக்குரிய ஓசைகளை வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா என்ற வரிசைக் கிரமத்தில் தேர்வு செய்க

அ) செப்பல்அகவல்துள்ளல்தூங்கல்   ஆ) செப்பல்தூங்கல்அகவல்துள்ளல்

இ) அகவல்செப்பல்தூங்கல்துள்ளல்   ஈ) தூங்கல்துள்ளல்செப்பல்அகவல் 

74. பொருத்துக

      அ) செப்பலோசை  -   1. வஞ்சிப்பா 

      ஆ) அகவலோசை -   2. கலித்தொகை

      இ)  துள்ளலோசை -  3. பெருங்கதை

      ஈ)   தூங்கலோசை -  4. நாலடியார்

அ) 2 3 4 1      ஆ) 4 3 2 1    இ) 1 2 3 4    ஈ) 3 2 1 4

75. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

அ) சிலப்பதிகாரம்   ஆ) மணிமேகலை  இ) நாலடியார்   ஈ) பெருங்கதை 

76. வெண்பாக்களின் வகைகள்------

அ) 3    ஆ) 4     இ) 6    ஈ) 

77. ஆசிரியப்பாவின் வகைகள்--------

அ) 4     ஆ) 5    இ) 6    ஈ ) 8

78. ஈரசைச்சீர் மிகுதியாகவும்காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை

அ) வெண்பா   ஆ) ஆசிரியப்பா    இ) கலிப்பா    ஈ) வஞ்சிப்பா 

79. வெண்பாவிற்கான பெயர்க்காரணத்தைத் தேர்வு செய்க

அ) வெண்மையான  நிறமுடையவை  ஆ) அறக்கருத்துக்களை கூற பயன்படுத்தப்படுதல் 

இ) வெண்டளைகள்  மட்டுமே வரும்  ஈ) ஈற்றடி முச்சீராய் வருதல்

80. வெண்பாவின் அடிவரையறை

அ) 6-10   ஆ) 9-12   இ) 4-9    ஈ) 2-12

81. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ) குறள் வெண்பா  ஆ) கலிவெண்பா இ) நேரிசை வெண்பா  ஈ) சிந்தியல் வெண்பா 

82. காசு  என்னும் வாய்பாட்டில் முடியும் சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ) சால்பு     ஆ) இயல்பு      இ) தார்    ஈ) பொறை 

83. ஏகாரத்தில் முடியும்  பாவகை

அ) அகவற்பா   ஆ) வெண்பா  இ) கலிப்பா   ஈ) வஞ்சிப்பா 

84. வெண்பாவின் இலக்கணம் பெற்றுஇரண்டு அடிகளால் வருவது

அ) சிந்தியல் வெண்பா  ஆ) நேரிசை வெண்பா   இ) குறள் வெண்பா  ஈ) கலிவெண்பா

85. நான்கு சீர்களால் அமையும் அடி--------மூன்று சீர்களால் அமையும் அடி--------

அ) குறளடிசிந்தடி   ஆ) சிந்தடிஅளவடி  இ) அளவடிசிந்தடி   ஈ) சிந்தடிகுறளடி 

86. இருவர் உரையாடுவது போன்ற ஓசை--------

அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ) துள்ளலோசை   ஈ) தூங்கலோசை

87. சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை-------

அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ) துள்ளலோசை   ஈ) தூங்கலோசை

88. கன்று துள்ளினாற் போல சீர் தோறும் துள்ளிவரும் தோசை-------- 

 அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ) துள்ளலோசை   ஈ) தூங்கலோசை

89. சீர் தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை--------- 

அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ) துள்ளலோசை   ஈ) தூங்கலோசை

90.  யாப்பதிகாரம் என்ற நூலை இயற்றியவர்---------            

அ) இளங்கோவடிகள்   ஆ) புலவர் குழந்தை  இ) புலவர் மாணிக்கம்   ஈ) சாத்தனார் 

வினாடி வினாவில் பங்கேற்க

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை