10.ஆம் வகுப்பு
– தமிழ் அலகுத்தேர்வு இயல்-7
பலவுள் தெரிக. 9×1=9
1.
மேன்மை தரும் அறம் என்பது-
அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்
செய்வது.
2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ)
உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்
இ)
பேகன் கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்:
திருமுடிக்காரி
3.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ)
ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறக்கல்
4.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.
அ)
கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
5.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்"
6. பாடலின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ)
அசோகமித்திரன்
7. பாடல் இடம் பெற்றுள்ள நூல்
அ) கம்பராமாயணம் ஆ) தேம்பாவணி இ) இரட்சண்ய யாத்திரிகம் ஈ) சீறாப்புராணம்
8. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை. திருந்திய
இ) பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை, பரப்பி
9. சேக்கை என்ற சொல்லின் பொருள்
அ) உடல் ஆ)
படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்
குறுவினா 7×2=14
10.
குறிப்பு வரைக அவையம்.
11.
காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' - உவமை உணர்த்தும் கருத்து யாது?
12.
குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
13.
சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
14.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
அ. மனக்கோட்டை ஆ. கண்ணும் கருத்தும்
15.
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக
அ. தாமரை இலை நீர்போல ஆ. சிலை மேல் எழுத்து போல
16. கலைச்சொல் அறிவோம்
அ.
Happiness
ஆ. Gratuity இ. Charity
ஈ. Sceptor
சிறுவினா 3×3=9
17 வாய்மை
பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
18. எவையெல்லாம்
அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
19. ”நவமணி” எனத்தொடங்கும்
பாடலை அடிபிறழாமல் எழுதுக
விரிவான
விடையளி 2×5=10
20.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்
பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
21.
உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி
ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
22. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.
நெடுவினா
1×8=8
23.
அ) கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர்
செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக..
(அல்லது)
ஆ) குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு-
சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி