திருப்பத்தூர் மாவட்டம் - காலாண்டுத்தேர்வு
செப்டம்பர் - 2025-2026
ஒன்பதாம்
வகுப்பு
/ மொழிப்பாடம் – தமிழ்
விடைக்
குறிப்புகள்
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||
வி.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||
1. |
இ.
சிற்றிலக்கியம் |
1 |
||
2. |
ஈ. புலரி
|
1 |
||
3. |
அ)
ஆராயாமை, ஐயப்படுதல் |
1 |
||
4. |
ஈ)
ஓடி வா ஓடி வா |
1 |
||
5. |
இ)
வளர்க |
1 |
||
6. |
அ) பிப்ரவரி 21 |
1 |
||
7. |
இ)
மோனை, எதுகை, இயைபு |
1 |
||
8. |
ஈ) பேசப்படுகின்றன |
1 |
||
9. |
இ) திருவெம்பாவையை
இயற்றியவர் ஆண்டாள். |
1 |
||
10. |
ஈ)
தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் |
1 |
||
11. |
இ) மலையாளம் |
1 |
||
12. |
இ) குடபுலவியனார் |
1 |
||
13. |
ஆ)
உடம்பு |
1 |
||
14. |
ஈ)
புறநானூறு |
1 |
||
15. |
அ)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
||
பகுதி
– 2 / பிரிவு – 1 (4 மட்டும்) |
||||
16. |
பொருந்திய வினாத்தொடர் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
||
17. |
இரண்டிரண்டு அடிகளில்
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும். |
2 |
||
18. |
செயல்
வேறு, சொல்
வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமைதராது. |
2 |
||
19 |
மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும்,
ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து
இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும். |
2 |
||
20. |
தமிழ்,
மலையாளம், கன்னடம், குடகு,
துளு |
2
|
||
21 |
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் |
2 |
||
பகுதி
– 2 / பிரிவு – 2 (5 மட்டும்) |
||||
22 |
·
அளபெடை
இரண்டு வகைப்படும். ·
அவை:
உயிரளபெடை, ஒற்றளபெடை. |
2 |
||
23 |
அ. இடமெல்லாம் சிறப்பு ஆ. செந்தமிழும் நாப்பழக்கம் |
2 |
||
24 |
அ. தப்பித்தான்
ஆ. புரிகின்றது |
2 |
||
25 |
கொள்+வ்+ஆர்
கொள்-பகுதி, வ்-எதிர்கால இடைநிலை ஆர் – பலர்பால் விகுதி |
2 |
||
26 |
அ. மெய்யொலிகள் ஆ. நீர் மேலாண்மை |
2 |
||
27 |
அ. ஆறு, கரை, ஓரம் ஆ. பாய், மரம், கப்பல், கல், பகல் |
2 |
||
28 |
ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை ஓரம் |
|
||
பகுதி
– 3 பிரிவு – 1 (2 மட்டும்) |
||||
29 |
·
திராவிட
மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட
மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாகப் பிரிப்பர். ·
அவற்றுள்
சிறந்த மொழிகள் தமிழ், தெலுங்கு,
மலையாளம், துளு, குடகு,
கூவி (குவி). கோண்டா போன்றவை. தமிழ்:
தொன்மையும் இலக்கிய இலக்கண வளமும் உடைய மொழி தெலுங்கு :
தேன் போன்ற இனிய மொழி மலையாளம் :
தமிழோடு ஒத்த இனமொழி என்பர் |
3
|
||
30 |
அ. குளிர வைத்தல் ஆ.
ஆண்டாள் இ. தெய்வச்சிலைகளைக் குளிர்க்க வைத்தல் |
3 |
||
31 |
·
தமிழக உழவர்கள் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவர் ·
தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட
மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். ·
தங்கள் வாழ்வோடும் உழைப்போடும்
பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே
ஏறுதழுவுதலாகும். |
3 |
||
பகுதி
– 3 பிரிவு - 2 |
||||
32 |
·
புதுப்பொலிவுடன்
தமிழ் வளர்ப்பேன். ·
மொழிபெயர்ப்புகளை
நிறைய செய்வேன் ·
அறிவியல்
தமிழாய், கணினித்
தமிழாய் புதுவடிவில் வளர்த்தெடுப்பேன். |
3 |
||
33 |
·
திருநாட்டில் உள்ள நீர்நிலைகளில்
எருமைகள் வீழ்ந்து மூழ்கின. ·
அதைக் கண்டு அஞ்சிய வாளை மீன்கள் துள்ளிக்குதித்தன
·
இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும்
வானவில்லைப் போன்றுள்ளது. |
3
|
||
34 |
அ. காடெல்லாம்
கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம்
கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம்
மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம்
நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் ஆ. தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படும்தேனே
உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள்ஆ. |
3 |
||
பகுதி
– 3 பிரிவு - 3 |
||||
35 |
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும்
சார்பெழுத்துகள் ஆகும். |
3 |
||
36 |
உவமை
அணி ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய
மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமானம், உவமேயம், உவம உருவு ஆகியன இடம்பெறும். உவம உருபு
வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்
தன்னைத் தோண்டுபவரையும் நிலம்
தாங்குவது போலத் தன்னை இகழ்பவரையும் பொறுத்துக்கொள்வது சிறந்த பண்பாகும். இதில்
புலவர் விளக்கிக் கூறக்கருதும் பொருள் (உவமேயம்) தன்னை இகழ்பவரையும்
பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது. போல என்பது உவம உருபு. (உவமானம்) உவமை தன்னைத்
தோண்டுபவரையும் நிலம் தாங்குவது என்பதாகும். ·
உவமானம்
- தன்னைத் தோண்டுபவரையும்
நிலம் தாங்கும் ·
உவமேயம்-
தன்னை இகழ்பவர்களையும்
பொறுத்துக் கொள்ளும் குணம். ·
உவம
உருபு - போல |
3 |
||
37 |
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை |
3 |
||
பகுதி
– 4 |
||||
38
அ. |
·
முத்தமிழாய்
பிறந்தது ·
மூன்று
பாவினங்களால் வளர்ந்தது ·
சிற்றிலக்கியங்களைத்
தந்தது ·
தெளிந்த
அறிவினால் முத்திக் கனியைத் தந்தது ·
நாளும்
நலமுடன் வளர்ந்தது |
5 |
||
|
ஆ. ·
திருநாட்டில் காவிரி வளத்தைத்
தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. ·
வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள்
சங்குகளால் இடருகின்றன. ·
குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன ·
நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால்
அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன ·
திருநாட்டில் நெற்கட்டுகளும்
மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன ·
பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து
வளர்ந்துள்ளன |
5 |
||
39.
அ |
கடலூர், அன்புள்ள நண்பன் எழிலனுக்கு, பாலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன்
குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள். என் பிறந்தநாளை கடந்த மாதம்
15.10.21 அன்று கொண்டாடும் போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய்
அல்லவா?சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப்
பிரித்து வியந்து போனேன். எஸ். இராமகிருஷ்ணன்
அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்”
புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட
கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள்
வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள்
குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு
கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக
நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள்
கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறுவர்களுக்கான கதைகள்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு
செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக்
கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷமாய்
திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா! நன்கு
படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.
அன்புடன்,
பாலன். முகவரி: 1/3, தெற்குமாட வீதி, கடலூர் - 607001 இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம் சோறு
போடும்" "கந்தையானாலும்
கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி"
என்னும் பழமொழிக்கு ஏற்ப
எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப்
பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள்
பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம்
பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து
சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர்
அவர்களே! நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.
நன்றி.
இவண், இரா மணிமாறன், (மாணவர் செயலர்) |
5 |
||
40.
|
ஏடு எடுத்தேன் கவி
ஒன்று எழுத என்னை எழுது என்று
சொன்னது இந்தக்
காட்சி! தொழில்
நுட்பத்தைப் பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து நடக்க
வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! |
5 |
||
41 |
படிவத்தை உரிய விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||
42 |
அ. ·
நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு
பாதுகாத்து வைக்க வேண்டும்.
ஆ.
1. Linguistics - மொழி
ஆராய்ச்சி 2.
Literature - இலக்கியம் 3. Philologist - மொழி
ஆராய்ச்சியாளர் 4.
Polyglot - பன்மொழியாளர்கள் 5. Phonologist - ஒலியனியல்
வல்லுநர் 6. Phonetics - ஒலிப்பியல் |
5 |
||
43 அ. |
பகுதி – V ( மதிப்பெண்கள்-24) ü
தமிழ்
மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது. ü
தமிழ்
மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. ü
திராவிட
மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும். ü
பிற
திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது. ü
ஒரே
பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. ü
இந்திய
நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது. ü
இவ்வாறு
தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு
கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது ஆ. முன்னுரை
:
நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம்
குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவருடைய கருத்துகளைக் காண்போம். வான்
சிறப்பு :
உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே
உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "துப்பார்க்கு
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்
மழை" என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார் மழையே
ஆதாரம் : மழை நீரே மண்ணை வளம் பெறச்
செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள்,
வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச் செய்கிறது. நீரே
ஆதாரம் : நீர்
இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து
மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில்
ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. முடிவுரை:
தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத்
தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப்
பயன்படுத்துவோம். |
8 |
||
44 அ. |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன்
உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள்
ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
||
ஆ. |
முன்னுரை: ஆறாம்
திணை என்ற சிறுகதை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக்
கூறுகிறது இதை ஆ முத்துலிங்கம் அவர்கள் இயற்றியுள்ளார் அதைப்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். இலங்கைக்குப் புலம்பெயர்தல்: ஆசிரியரது
குடும்பம் இலங்கையில் ஒரு சிங்களர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு
கலவரம் வளர தொடங்கியது வீட்டு முதலாளி பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை
கலவரத்திலிருந்து பாதுகாத்தது அகதிகளாக இருந்த அவலம்: அங்கிருந்த
பல தமிழ் குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு
நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக உணவு உடை வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல
நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது புலம்பெயர்தலின் பாதிப்புகள்: புலம்
பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல்
தன்னுடைய தாய் நாட்டையும் பிழைக்கும் நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முடிவுரை: புலம்பெயர்ந்தவர்கள் தளிமை,
ஏக்கம், அடையாளக் குழப்பம் போன்ற அக
மாற்றங்களாலும் மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற புற மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை
மிக ஆழமாக விளக்குகிறது. |
8 |
||
45 அ, |
மாணவருடைய
சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு, கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. ஆ. மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு
மதிப்பெண் வழங்குக. |
8 |
||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி