9 TH STD TAMIL QUARTERLY EXAM ANSWER KEY CHENNAI 2025

 


சென்னை மாவட்டம் - காலாண்டுத்தேர்வு

செப்டம்பர் - 2025-2026

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

விடைக்குறிப்புகள்

நேரம் : 3.00 மணி                                                                     மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வி.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

) எண்ணும்மை

1

2.

) ஆராயாமை, ஐயப்படுதல்

1

3.

இ) மலையாளம்

1

4.

அ) மேலும் கீழும்

1

5.

) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

6.

ஈ) புலரி

1

7.

இ) எந்த ஓவியம்?

1

8.

ஈ) சென்ற இடமெல்லாம் சிறப்பு

1

9.

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

1

10.

) வளர்க

1

11.

) வளம்

1

12.

ஆ) மழை

1

13.

அ) ஒளிருவாள், கலிரும்

1

14.

ஆ) மணிமேகலை

1

15.

) ஆண்பால் வினைமுற்று

1

பகுதி – 2 / பிரிவு – 1 (4 மட்டும்)

16.

உரிய வினாச்சொல்லுடன் வினாத்தொடர் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

17.

இடம்: திருப்பாவையில் ஆண்டாள் கூறியது.

பொருள் : கீசு கீசு என்று குருவிகள் ஒலிக்கும் பேரொலி கேட்க வில்லையா?

விளக்கம் :

·        மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து தோழிகளை எழுப்புவார்கள்.

·        அப்போது ஒரு தோழி இன்னொரு தோழியை எழுப்பும்போது கரிக்குருவிகள் எழுந்து ஒலி எழுப்புகின்றன.

·        நீ இன்னும் எழாமல் தூங்குகிறாயே என்று துயிலெழுப்புகின்றாள்.

2

18.

தம்மை இகழ்பவரிடம்

2

19

தென் திராவிட மொழிக்குடும்பம்

2

20.

ஏரி , குளம், குட்டை, கண்மாய்

2

21

 

எனைத்தானும் நல்லவை  கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்

 

2

பகுதி – 2 / பிரிவு – 2 (5 மட்டும்)

22

·        'கார் அறுத்தான்'

·        கார் என்னும் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளைந்த பயிருக்கு ஆகி வருவதால் இது காலவாகு பெயர் ஆகும்.

2

23

மெல்ல பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் என்பதுபோல வளவன் தனியொருவனாக நின்று மரத்தை வெட்டி சாய்த்தான்

2

24

·        அளபெடை இரண்டு வகைப்படும். 

·        அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

2

25

. அலை – கடல் அலை – மீன்கள் கடல் அலையில் துள்ளிக்குதித்தன 

. அளை – புற்று – பாம்பு அளையில் நுழைந்தது

2

26

பாய்+வ்+அன்+அ

பாய்_ பகுதி, வ்- எதிர்கால இடைநிலை, அன் _சாரியை ,அ-பலவின்பால் விகுதி

2

27

அ. இனிப்பைக் குவித்ததால் எறும்புகள் குவிந்தன

ஆ. சிறுவர்கள் சேர்ந்து பொம்மை வாங்க காசு சேர்த்தனர்

2

28

மஞ்சள் பூசினாள்- பண்பாகு பெயர்

வற்றல் தின்றான் - தொழிலாகுபெயர்

 

பகுதி – 3     பிரிவு – 1    (2 மட்டும்)

29

அ. காளைச்சண்டை

ஆ. ஆட்டத்தின் முடிவில் காளை கொல்லப்படும்

இ. வன்மம்

3

30

1.     மூன்று -  தமிழ்

2.    மூணுமலையாளம்

3.    மூடு தெலுங்கு

4.    மூருகன்னடம்

5.    மூஜி -  துளு

3

31

·        நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

  • நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும்.
  • இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

3

பகுதி – 3   பிரிவு - 2

32

·        தோழி ஒருத்தி மற்றொரு தோழியை பொழுது விடிந்து விட்டது எழுந்திரு என்கிறாள்

·        அதற்கு தோழி அனைவரும் வந்து விட்டனரா? என்று கேட்கிறாள்

·        அதற்கு மற்றொரு தோழி உனது கேள்விக்கு எண்ணிப் பார்த்து தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறாள்.

·        மூன்றாவது தோழி கண்களை மூடி நோன்பு நேரத்தை வீணடித்து விடாதே என்கிறாள்

·        நான்காவதாக ஒருத்தி இறைவனை புகழ்ந்து பாடிட வா என்று அழைக்கிறார்

·        அதைக் கேட்டும் அவள் உறங்கச் செல்கிறாள்

3

33

·         நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

·        நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

3

34

.

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

 

.

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்

3

பகுதி – 3     பிரிவு - 3

35

 சொற்பொருள் பின்வருநிலையணி

      ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

அணிப்பொருத்தம்

       செல்வம்' என்னும் சொல் காதால் கேட்கப்படும் செவிச்செல்வம் என்னும் ஒரே பொருளில் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

3

36

    I.      எண்ணலளவை ஆகுபெயர்:

                                                       "ஒன்று பெற்றார் ஒளிமயம்"

            ஒன்று என்னும் எண்ணுப்பெயர் அவ்வெண்ணுக்கு தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

   II.      எடுத்தலளவை ஆகுபெயர்:

                                                       "இரண்டு கிலோ கொடு"

       நிறுத்து அளக்கும் எடுத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது

  III.      முகத்தலளவை ஆகுபெயர்:

                                                       "அரை லிட்டர் வாங்கு"

        முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

  IV.      நீட்டலளவை ஆகுபெயர்:

                                                       "ஐந்து மீட்டர் வெட்டினார்"

         நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது.

3

37

     செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.   உயிரளபெடை மூன்று வகைப்படும்.

3

பகுதி – 4

38 .

·        செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம். அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.

·        எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

·        நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது.

·        கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர் இறந்தால்தான் என்ன! இருந்தால்தான் என்ன!

5

 

.

ü  தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.

ü  தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ü  திராவிட மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.

ü  பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.

ü  ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ü  இந்திய நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.

ü  இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது

5

39.

தமிழ் இலக்கிய மன்ற விழா

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023

      இராணிப்பேட்டை மாவட்டம், தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு  தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் .

      தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.

     சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.

      நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.

5

40.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத    

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி!

தொழில் நுட்பத்தைப் பற்றி எழுதினேன்!

அனைவரும் இதன் அருமை அறிந்து

நடக்க வேண்டும்!

வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

5

41

கொடுக்கப்பட்ட படிவத்தை உரிய விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

.

1 .ஒவ்வொரு மாரும் இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது.

2. சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும்.

3 அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும்.

4.வாழ்வது பட்டும் போதுமானதல்ல ஒவ்வொருவருக்கும் ஒளி, ஆற்றல், விடுதலை, மலரின் மென்மை அவசியம்

5

43

.

பகுதிV ( மதிப்பெண்கள்-24)

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

 நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல

மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

.

1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

   2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு.

   3. அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

  4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.

  5. நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்.

  6. எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.

  7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

8

44

.

முன்னுரை :
            நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

.

v  சு. சமுத்திரம் எழுதிய இக்கதையில், வறுமையிலும் தன் அன்பும் தன்னலமற்ற தன்மையும் குறையாத ஒரு ஏழைத்தாயின் உயர்ந்த மனிதநேயம் கதையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

v  மரண அபாயம் வந்தபோதும் கணவனை காப்பாற்றும் அவள், பசிக்குட்டிகளுக்குள் உணவை பகிரும் போது அன்பும் கண்டிப்பும் கலந்த தாயாக இருக்கிறார்.

v  அவளது தாய்மை உணவுப் பகிர்விலும், நாய்க்குட்டிகளையும் பராமரிப்பதிலும் வெளிப்படுகிறது.

v  தன்னால் பெற்றவரல்லாதவர்களையும் தாயன்புடன் பராமரிக்கும் அவளின் செய்கைகள் மனிதநேயத்தின் உச்சக்கட்டமாகக் கூறப்படுகிறது.

v  தாய்மை என்பது வறுமையைக் கடந்து மகத்துவமடைகிறது என்பதை இந்தக் கதை வலியுறுத்துகிறது.

8

45

,

தலைப்பு:  இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு)

முன்னுரை:

              நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவாஅத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்:

                                                  ”விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

                                                    பசும்புல் தலைகாண் பரிது"

     என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன.அதோடன்றிமரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு:

உங்கள் சுவாசத்தை நிறுத்தும் முன்

காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்

    மக்கள் தொகைப் பெருக்கம்மக்கள் நெருக்கம்தொழிற்சாலைக் கழிவுவாகனப்புகை போன்றவற்றால் நிலம்நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள்விலங்குகள்பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகிமனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டுஅழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்திகாற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.

பசுமையைக் காப்போம்:

மரம் தான் மரம் தான் எல்லாம் மரம்தான்

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

      சூரிய ஒளிமழைதாவரம்காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம்பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல்சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.

மரமும் மழையும் வரமும் உயிரும்:

'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

                                             உள்நின்று உடற்றும் பசி'

      ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால்பசி யின்றி வாழவும்தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.

முடிவுரை:

      இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளிமண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.

 .  முன்னுரை:       

    என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும்  உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர். இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

      இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

முடிவுரை:

   என்ற  மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும்.

 

8

 

 

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை