9.ஆம் வகுப்பு-தமிழ்
ஒருமதிப்பெண் வினாக்கள் - இயல் - 2
1."வான்சிறப்பு" என்னும் தலைபபில் பத்துக் குறட்பாக்களை இயற்றியவர் யார்?
அ. இளங்கோவடிகள் ஆ. திருவள்ளுவர் இ. தொ பரமசிவன் ஈ. பாரதியார்
2. "மாமழை போற்றுதும் மாமழை போற்றுவதும்" என்று பாடியவர் யார்?
அ.கம்பர் ஆ.இளங்கோவடிகள் இ.சேக்கிழார் ஈ. பாரதியார்
3. "உலகச் சுற்றுச்சூழல் நாள்" எப்போது கொண்டாடப்படுகிறது?
அ. மே 5 ஆ. ஜின் 5 இ. ஏப்ரல் 5 ஈ. ஜூலை 15
4. "நீரின்று அமையாது உலகம்" என்று கூறியவர் யார்?
அ. திருவள்ளுவர் ஆ. குடபுலவியனார் இ. ஈரோடு தமிழன்பன் ஈ. கம்பர்
5. பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் எண்ண?
அ. கடல் ஆ. அகழி இ. கண்மாய் ஈ. புலரி
6. கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட அணையின் பெயர் என்ன?
அ. கல்லணை ஆ. முல்லைபெரியாறு இ. சேர்வலாறு அணை ஈ. கோமுகி அணை
7.கல்லணை அணையின் நீளம், அகலம், அடி எவ்வளவு?
அ.1080, 40, 60 ஆ.90, 1000, 40 இ.1020, 20, 40 ஈ. 40,60,1080
8. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
அ. சர் ஆர்தர் காட்டன் ஆ .சர் ஆர்தர் சார்லஸ் இ. கால்டுவெல் ஈ. சாமிநாதன்
9. 1829 தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேயே அரசால் சர் ஆர்தர் காட்டன் எதற்காக நியமிக்கப்பட்டார் ?
அ. காவிரிப் பாசன பகுதிக்காக ஆ. அமைதிக்காக இ. பஞ்சம் தீர்க்க ஈ. வரி வசூலிக்க
10. கல்லணைக்கு கிரான்ட் அணைக்கட்டு என்று பெயரை சூட்டியவர் யார்?
அ. கரிகாலன் ஆ. சர் ஆர்தர் காட்டன் இ. மருது பாண்டியன் ஈ. ராசராசன்
11.கோதவாரி ஆற்றின் குறுக்கே எப்போது தௌலீஸ்வரம் அணைக் கட்டப்பட்டது?
அ. 1874 ஆ. 1976 இ. 1873 ஈ. 1923
12.நாம் வாழும் தமிழ்நாடு எந்த மண்டலம் பகுதியில் உள்ளது?
அ. குளிர்த்தமண்டலம் ஆ. வெளிமண்டலம் இ. வெப்பமண்டலம் ஈ. பனிமண்டலம்
13. "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே" என்பது என்ன வழக்கு?
அ. சொல்வழக்கு ஆ. இலக்கண வழக்கு இ. செய்யுள் வழக்கு ஈ. உலக வழக்கு
14."குள்ளக் குளிரக் குடைந்து நீராடி" என்று கூறியவர் யார்?
அ. ஔவையார் ஆ. ஆண்டாள் இ. மாசாத்தியார் ஈ. மாணிக்கவாசகர்
15. தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை என்னவென்று கூறுவர்?
அ. தெய்வமஞ்சள் ஆ. மஞ்சள்ஆபரணம் இ. திருமஞ்சனம் ஆடல் ஈ. நீராட்டல்
16. சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் என்ன பருவம் உண்டு?
அ. நீராடல் ஆ. சாப்பிடுதல் இ. அழுதல் ஈ. சிரித்தல்
17. சனி நீராடு என்பது யாருடைய வழக்கு
அ. ஆதிமந்தியார் ஆ. காவற்பெண்டு இ. ஔவையார் ஈ. ஆண்டாள்
18. கடலருகே தோண்டிக்கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?
அ. அகழி ஆ. ஆறு இ. ஆழிக்கிணறு ஈ. உவரி
19. குளிப்பதற்கேற்ற சிறுகுளம் எவ்வாறு அழைக்கப்படும்?
அ. குமிழிகிணறு ஆ. குமிழி ஊற்று இ. குண்டு ஈ. குட்டை
20.இரு கரைக்களுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
அ. ஊற்று ஆ. ஆறு இ. ஏரி ஈ. ஓடை
21.நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்து மக்களிடம் உருவாக்கவேண்டியது
அ. மகிழ்ச்சி ஆ. சோகம் இ. வெறுப்பு ஈ. விழிப்புணவு.
22. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
அ. காமராசர் ஆ. ஜான் பென்னிகுவிக் இ. கரிகாலன் ஈ. ஆர்தர் காட்டன்
23. "குந்த' என்பதன் பொருள்
அ. மணம் ஆ. உலகம் இ. உட்கார ஈ. பறவை
24. 'மிசை' என்பதன் பொருளும், எதிர்சொல்லும் என்ன?
அ.மேல், கீழ் ஆ. வலது, இடது இ. தவறு, சரி ஈ. கீழ், மேல்
25. 'மே தினமே வருக' என்ற படைப்பைக் குறிப்பிட்டுவர் யார்?
அ. பாரதியார் ஆ .பாரதிதாசன் இ. கவிஞர் தமிழ் ஒளி ஈ. பாவலரேறு
26. கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த ஆண்டு
அ. 1924 ஆ.1925 இ. 1974 ஈ. 1934
27. கவிஞர் தமிழ்ஒளி இயற்கைஎய்திய ஆண்டு
அ. 1975 ஆ. 1930 இ. 1965 ஈ. 1966
28. கவிஞர் தமிழ்ஒளி எங்கு பிறந்தார்?
அ. திருச்சி ஆ. புதுவை இ. கோயம்புத்தூர் ஈ. சென்னை
29. மூடுபனி என்பதன் இலக்கணக்குறிப்பு
அ. வினைத்தொகை ஆ. பெயரெச்சத் தொடர் இ. வினையெச்சம் ஈ. உருவகம்
30. யாருடைய திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது?
அ. சுந்தரரின் ஆ. பாரதியாரின் இ. பாரதிதாசனின் ஈ. கம்பர்
31. சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
அ. கி.பி 12ஆம் ஆ. கி.பி 20ஆம் இ. கி.பி 13 ஆம் ஈ. கி.பி 17ஆம்
32. சேக்கிழார் எந்த அவையில் முதல் அமைச்சராக இருந்தார்?
அ. இரண்டாம் குலோத்துங்கன் ஆ. இராசராசன் இ. பராந்தகன் ஈ. இராசேந்திரன்
33. வாவி என்பதன் பொருள்?
அ. வண்டு ஆ. தேன் இ. பொய்கை ஈ. ஆறு
34. தரளம் என்பதன் பொருள்?
அ. முத்து ஆ. சங்கு இ. சிப்பி ஈ. கடல்
34. பொருத்துக.
(i) தென்னை - நரந்தம்
(ii) நாரத்தை - கோளிம்
(iii) அரசமரம் - நாளிகேரம்
அ. 2, 3, 1 ஆ.1, 2, 3 இ.1, 3, 2 ஈ. 3, 1 ,2
36. உணவு தந்தவர் _____ தந்தவர் ஆவார்
அ. இன்பம் ஆ. மகிழ்ச்சி இ. உயிரைத் ஈ. நீரைத்
37. நிலம் குழித்த இடங்கள்தோறும் ______ பெருகச் செய்தல் வேண்டும்.
அ. மகிழ்ச்சி ஆ. நீர்நிலையை இ. மரங்களை ஈ. காற்றை
38. யாக்கை என்பதன் பொருள்
அ. முயற்சி ஆ. உடம்பு இ. வாழ்க்கை ஈ. காற்று
39. மூதூர், நல்லிசை, புன்பலன் ஆகியவற்றின் இலக்கணக்குறிப்பு
அ. தொழிற்பெயர் ஆ. பண்புத்தொகைகள் இ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஈ. உருவகம்
40.______ என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்
அ. நிலம், நீர், காற்று ஆ.நெருப்பு, காற்று, நீர் இ. நீர், காற்று ஈ. நெருப்பு, நீர், வானம்
41. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று -
அ.தொல்காப்பியம் ஆ.பெரியபுராணம் இ. புறநானூறு ஈ. சிறுபாணாற்றுப்படை
42. கந்தர்வனின் இயற்பெயர் _____
அ. வைரமுத்து ஆ. குடபுலவியனார் இ. நாகலிங்கம் ஈ. சோமசுந்தரம்
43. நாகலிங்கம் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்
அ. இராமநாதபுரம் ஆ. மதுனர இ. தேனி ஈ. கோவை
44. ______ தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்
அ. நாகலிங்கம் ஆ. சுந்தர் இ. பாரதிதாசன் ஈ. வாணிதாசன்
45. கொம்பன் எனும் நூலை எழுதியவர்_____
அ. பாரதியார் ஆ. நாகலிங்கம் இ. கவிஞர் தமிழ் ஒளி ஈ. பாவலரேறு
46. தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களை_____ என்பர்
அ. பின்வினை ஆ. முன்வினை இ. தனிவினை ஈ. தன்வினை
47. கூட்டுவினையடிகளைக் கொண்ட ______ச் சொற்களை கூட்டுவினை என்பர்
அ. வினை ஆ. பெயர் இ. இடை ஈ. கூட்டு
48. வினைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
அ. மூன்று ஆ. நான்கு இ. இரண்டு ஈ. ஐந்து
49. (LEXICAL MEANING) தமிழாக்கம் ____
அ. சொற்பொருள் ஆ. வினைப்பொருள் இ. பெயர்பொருள் ஈ. சொற்பொருள்
50. 40 துணைவினைகள் எந்த மொழியில் உள்ளன?
அ. குரூக் ஆ. தமிழ் இ. சமஸ்கிருதம் ஈ. தெலுங்கு
51. முதல் வினை என்பதன் ஆங்கிலச் சொல்
அ. First verb ஆ. First noun இ. Main verb ஈ. Main noun
52. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் _____ உள்ளது
அ. அதிகமாக ஆ. குறைவாக இ. முழுமையாக ஈ. சமமாக
53. அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்படுவது _____
அ. திருத்தொண்டர் தொகை ஆ. திருத்தொண்டர் திருவந்தாதி
இ. திருத்தொண்டர் புராணம் ஈ. நைடத புராணம்
54. சேக்கிழாரை பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று பாராட்டியவர்____
அ. சுந்தர் ஆ. கவிஞர் தமிழ்ஒளி இ. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் ஈ. பாரதியார்
55. வேரி என்பதன் பொருள்_____
அ. நெல் ஆ. மலை இ. தேன் ஈ. மரம்
56. பொருத்துக
(i) பகடு - குளக்கரை
(ii) சூடு - எருமைக்கடா
(iii) கோடு - நெல் அரிக்கட்டு
அ. 1, 2, 3 ஆ. 2, 3, 1 இ. 3, 2, 1 ஈ. 1, 3 ,2
57. பாண்டில் என்பதன் பொருள்______
அ. சிமயம் ஆ. நிரந்தம் இ. வட்டம் ஈ. சதுரம்
58. சரியா / தவறா எழுதுக
கன்னி வாளை என்பதன் பொருள் வயதான வாளைமீன்
அ. சரி ஆ. தவறு
59. காடுகளில் எல்லாம் கழையாகிய ________ உள்ளன
அ. அரும்புகள் ஆ. கரும்புகள் இ. மரங்கள் ஈ. அரும்புகள்
60. விரிமலர் ______ தொகை
அ. வினை ஆ. பண்புத் இ. காலத் ஈ. உம்மைத்
61. நீர்நிலையின் கரையெங்கும் இளைய ______ உலவுகின்றன
அ. சங்குகள் ஆ. அரும்புகள் இ. அன்னங்கள் ஈ. அரவங்கள்
62. 'நிறுத்தல்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் நிறுத்து என்பது
அ. பகுதி ஆ. விகுதி இ. சந்தி ஈ. விகாரம்
63. நிலத்துடன் நீரை கூட்டியோர் ______ பெறுவர்
அ. மூவகை இன்பம் ஆ. மகிழ்ச்சி இ. துன்பம் ஈ. இரக்கம்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி