10 TH STD TAMIL SLIP TEST QUESTION PAPER UNIT-5

 

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-1 (இயல்-5)

பலவுள் தெரிக.                                                                                                                      5×1=5

1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு 

இ) கூற்று 1 தவறு 2 சரி  ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

2. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

அ) கருமை    ஆ) பச்சை    இ) பழுப்பு    ஈ) நீலம்

3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? 

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?   ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

4. சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.

அ) முதுவேனில் ஆ) பின்பனி  இ) முன்பனி  ஈ) இளவேனில்

5. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

குறுவினா.                                                                                                                          4×2=8

6. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

7. அயற்கூற்றாக எழுதுக.

    "கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.

8 . உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்'

காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

9. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

அ. உழவர்கள் மலையில் உழுதனர்.

ஆ. முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

நெடுவினா                                                                                                                       1×7=7

10. போராட்டக் கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-2 (இயல்-5)

சிறுவினா                                                                                                                      

1. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

2. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

3.'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

4. ”தண்டலை” , ”வெய்யோன்…” எனத்தொடங்கும் பாடல்களை அடிபிறழாமல் எழுதுக

குறுவினா                                                                                                                          4×2=8

5. பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-                                    

அ. கோல்ட் பிஸ்கட் ஆ. யூஸ்  இ. ஆல் தி பெஸ்ட்  ஈ. பட்

6. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-

1. வானம் ------ தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் -------

3. -------மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ----- ----  வெயில் பரவிக்கிடக்கிறது.

7. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, பார்ப்பவர், விருது, தோற்பவர்,கவிழும்,விருந்து

1. விரட்டாதீர்கள்பறவைக்கு-----   வெட்டாதீர்கள்மனிதருக்கு அவை தரும் -----

2. காலை ஒளியினில் மலரிதழ் -----   சோலைப் பூவினில் வண்டினம் -----

3. மலைமுகட்டில் மேகம் -----அதைப்   பார்க்கும் மனங்கள் செல்லத் ------

4. வாழ்க்கையில்-- மீண்டும் வெல்வர்- இதைத்   தத்துவமாய் --முயற்சி மேற்கொள்வர்           

8. கலைச்சொல் அறிவோம்

அ. PLAY WRIGHT  ஆ. SCREENPLAY  இ. STORYTELLER  ஈ. AESTHETICS  

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-3 (இயல்-5)

5 மதிப்பெண் வினா                                                                                                          2×5=10                                                                                                   

1. பத்தாம் வகுப்பு பயிலும் கார்மேகன், அரக்கோணம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் தனது தந்தை கரிகாற்சோழனுடன் இராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணத்தில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச் செல்ல உள்ளார். அவருக்கு நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்பி உதவுக.

2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                                     1×10=10

3. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-4 (இயல்-5)

5 மதிப்பெண் வினா                                                                                                  2×5=10

1. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!

2. மொழி பெயர்க்க:-  

    Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar.

நெடுவினா                                                                                                                    1×10=10

3. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை