10 TH STD TAMIL QUARTERLY IMPORTANAT QUESTIONS

 

காலாண்டுத்தேர்வு திருப்புதலுக்கான முக்கிய வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாவிடை

1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது- தொடரில் தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

6. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

7. செய்தி 1-   ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

   செய்தி 2 -காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

   செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

8. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு

ஆ) கோடை - 2. தெற்கு

இ) வாடை - 3. கிழக்கு

ஈ) தென்றல் – 4. வடக்கு

9. மகிழுந்து வருமா?' என்பது -------

10. அறிஞகுக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.               

12. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

13. காசிக்காண்டம் என்பது

14. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

15. நன்மொழி என்பது

16. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

17. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

18. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

19. இரவிந்திரநாத தாகூர் ---மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --=மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

20. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

2 மதிப்பெண் வினாவிடை

1. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான்யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

2. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

3. அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம் தருக

4. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக.

5. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

6. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

7. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

8. 'நச்சப் படாதவன்' செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

9. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

10. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றான்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

11. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக

12. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

13 .தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

14. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

15. மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக

16. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக

3 மதிப்பெண் வினாவிடை

1. “அன்னை மொழியே…பாடல்”   2. ”மாற்றம்…பாடல்” 3. “ விருந்தினனாக…”பாடல்

4. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

5. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

    இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க

6. அறிந்தது, அறிந்தது, புரிந்தது. புரியாதது. தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.  அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றுக

7. உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

8. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

9, வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.                        

10. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

11. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்? விளக்கம் தருக

12. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

13. அலகிட்டு வாய்பாடு எழுதுதல் 14. உவமை அணி  15 எடுத்துக்காட்டு உவமை அணி

5 மதிப்பெண் வினாவிடை

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

2. பாநயம் பாராட்டல்

3. மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

4. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

5. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக   6. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் படிவம்

7. தன்விவரப்பட்டியல் படிவம்   8. நூலக உறுப்பினர் படிவம்     9. நிற்க அதற்குத்தக (அ) மொழிபெயர்ப்பு

8 மதிப்பெண் வினாவிடை

1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

2. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

3. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

4. பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க

5. “ சான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

 

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

 


You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை