இராணிப்பேட்டை மாவட்டம் - காலாண்டுத்தேர்வு
செப்டம்பர் - 2025-2026
ஒன்பதாம்
வகுப்பு
/ மொழிப்பாடம் – தமிழ்
விடைக்
குறிப்புகள்
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||
வி.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
||
1. |
இ.
சிற்றிலக்கியம் |
1 |
||
2. |
இ.
பக்கம் |
1 |
||
3. |
ஈ. புலரி |
1 |
||
4. |
ஈ)
தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் |
1 |
||
5. |
ஆ) காரியவாகுபெயர் |
1 |
||
6. |
அ) ஆராயாமை, ஐயப்படுதல் |
1 |
||
7. |
இ) எண்ணும்மை |
1 |
||
8. |
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
||
9. |
இ) வளம் |
1 |
||
10. |
இ) வளர்க |
1 |
||
11. |
இ) மோனை, எதுகை, இயைபு |
1 |
||
12. |
அ) பெயர் அறியவில்லை |
1 |
||
13. |
ஆ) தமிழ்விடு தூது |
1 |
||
14. |
இ) இயல், இசை , நாடகம் |
1 |
||
15. |
அ) கூறுவதைக்கேட்பாயாக |
1 |
||
பகுதி
– 2 / பிரிவு – 1 (4 மட்டும்) |
||||
16. |
அ. இன்று கடலலையின்
வேகம் எவ்வாறு உள்ளது? ஆ. திருக்குறளை
இயற்றியவர் யார்? (மாதிரி
விடைகள்) |
2 |
||
17. |
தமிழ்,
மலையாளம், கன்னடம், குடகு,
துளு |
2 |
||
18. |
·
அளபெடை
இரண்டு வகைப்படும். ·
அவை:
உயிரளபெடை, ஒற்றளபெடை. |
2 |
||
19 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
2 |
||
20. |
·
மாடு பிடித்தல் ·
மாடு அணைதல் ·
மாடு விடுதல் ·
மஞ்சுவிரட்டு ·
எருது கட்டி ·
சல்லிக்கட்டு |
2 |
||
21
|
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் |
2 |
||
பகுதி
– 2 / பிரிவு – 2 (5 மட்டும்) |
||||
22 |
பேசப்படுகின்றன |
2 |
||
23 |
மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர்
கொண்டு குளிர வைத்தான். |
2 |
||
24 |
அ. முதுமையில் இன்பம்
ஆ. இடமெல்லாம் சிறப்பு |
2 |
||
25 |
அ. உயிரொலிகள் ஆ. குமிழ்த்தூம்பு |
2 |
||
26 |
அகல் |
2 |
||
27 |
செய்+த்+ஆன் செய் – பகுதி , த்- இறந்தகால இடைநிலை ,ஆன் – ஆண்பால் விகுதி |
2 |
||
28 |
ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை ஓரம் |
|
||
பகுதி
– 3 பிரிவு –
1 (2 மட்டும்) |
||||
29 |
·
புதுப்பொலிவுடன்
தமிழ் வளர்ப்பேன். ·
மொழிபெயர்ப்புகளை
நிறைய செய்வேன் ·
அறிவியல்
தமிழாய், கணினித்
தமிழாய் புதுவடிவில் வளர்த்தெடுப்பேன். |
3 |
||
30 |
|
3 |
||
31 |
அ. கீழடி ஆ. 2300 இ. அகழாய்வு |
3 |
||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||
32 |
வானவில் |
3 |
||
33 |
இடம் : மணிமேகலைக் காப்பியத்தில்
இடம்பெற்றிருக்கிறது இத்தொடர். பொருள்
: விழா நடக்கும்
ஊரில் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் விளக்கம் : முரசறைவோன் விழாக்கள்
நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய
மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான். |
3 |
||
34 |
அ. தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படும்தேனே
உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள்ஆ. ஆ. காடெல்லாம்
கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம்
கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம்
மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம்
நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் |
3 |
||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||
35 |
செய்யுளில் மொழிக்கு
முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் தத்தம் அளவில்
நீண்டு ஒலிக்கும்போது அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள்
அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும். உயிரளபெடை மூன்று வகைப்படும். |
3 |
||
36 |
·
ஓர்
எழுத்து தனித்தோ, ஒன்றுக்கு
மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்தோ வந்து பொருளை உணர்த்துமானால் அது சொல் எனப்படும். ·
பதம்,
மொழி, கிளவி எனச் சொல்லிற்கு வேறு பெயர்கள்
உண்டு. ·
பதம்
(சொல்) இரு வகைப்படும். அவை பகாப்பதம், பகுபதம் ஆகும். |
3 |
||
37 |
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு
தொன்றுதொட்டு ஆகி வருவது |
3 |
||
பகுதி
– 4 |
||||
38 அ. |
·
திராவிட
மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட
மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாகப் பிரிப்பர். ·
அவற்றுள்
சிறந்த மொழிகள் தமிழ், தெலுங்கு,
மலையாளம், துளு, குடகு,
கூவி (குவி). கோண்டா போன்றவை. தமிழ்:
தொன்மையும் இலக்கிய இலக்கண வளமும் உடைய மொழி தெலுங்கு :
தேன் போன்ற இனிய மொழி மலையாளம் :
தமிழோடு ஒத்த இனமொழி என்பர்
|
5 |
||
|
ஆ. ·
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை
இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது. ·
பிறர் தனக்குத் தரக்கூடாத துன்பத்தைத் தந்தாலும் மனம்
நொந்து அறம் அல்லாத செயல்களைச் செய்யாமலிருப்பதே நன்றாம். ·
செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால்
வெல்ல வேண்டும். |
5 |
||
39. அ |
கடலூர், அன்புள்ள நண்பன் எழிலனுக்கு, பாலன் எழுதிக் கொள்வது.
இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம்,
அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள். என்
பிறந்தநாளை கடந்த மாதம் 15.10.21 அன்று கொண்டாடும் போது நீ
எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய் அல்லவா?சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை
ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன். எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம்
எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறுவர்களுக்கான கதைகள், உலகமெங்கும் உள்ள முப்பது
பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க
வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா!
நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.
அன்புடன்,
பாலன். முகவரி: 1/3, தெற்குமாட வீதி, கடலூர் -
607001
ஆ. தமிழ் இலக்கிய மன்ற விழா இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 இராணிப்பேட்டை மாவட்டம், தணிகைப்போளூர் அரசு
உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்
மா.செயப்பிரகாசு
தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம்
பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி வா.நிறைமதி
வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து
இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் . தலைமை
ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற்
போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார். சிறப்பு
விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை
சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை”
எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார். நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச்
செல்வி நன்றியுரை ஆற்றினார். |
5 |
||
40. |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி! தொழில்
நுட்பத்தைப் பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து நடக்க
வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! |
5 |
||
41 |
திரண்ட கருத்து : இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன்
வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின்
உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன்.
சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி,
குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன். ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார். மோனை நயம் : சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது
மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார்
கவிமணி. சான்று : ஏறாத – ஏறி ஓடைகள் – ஓடி வந்தேன். எதுகை நயம் : அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும்.
சான்று
: கல்லும் …. எல்லை இயைபு நயம் : இச்செய்யுளின் ஈற்றடிகளில் ‘தேன் தேன்’ என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது. சொல் நயம் : இப்பாடல் பின்வரும் சொற்களைப் பெற்று சொல்நயம் மிக்கதாக உள்ளது § குதித்து வந்தேன் § கடந்து வந்தேன் § தவழ்ந்து வந்தேன் § ஏறி வந்தேன் |
5 |
||
42 |
அ. ·
நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு
பாதுகாத்து வைக்க வேண்டும்.
ஆ. 1 .Every tower is a sout blossoming in nature-Gerant De
Nerval ஒவ்வொரு மாரும் இயற்கையாக
மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது. 2. Sunset is still my favourite colour, and rainbow is
second- Mattle Stepanek சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும். |
5 |
||
43 அ. |
பகுதி – V ( மதிப்பெண்கள்-24) முன்னுரை: மொழி என்பது மனிதனின் மிகப்
பெரிய படைப்பு. மனிதர்களிடையே உறவை நிலைநிறுத்தவும், அறிவையும்
அனுபவத்தையும் பகிரவும், சமூக முன்னேற்றத்தை உருவாக்கவும்
மொழி உதவுகிறது. அதில் நமது தாய்மொழியான தமிழ், எண்ணங்களையும்
கருத்துகளையும் தெளிவாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்த உதவும் சிறப்பை கொண்டது. தமிழ் மொழியின் மகத்துவம்: உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ், நம்
உணர்வுகளை நேர்த்தியாகச் சொல்லித் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. பிற மொழிகளில்
விளக்கமளிக்க சிக்கலான விஷயங்களையும், தமிழில் எளிய
சொற்கள் வழியே ஆழமான அர்த்தத்துடன் கூற முடிகிறது. உதாரணமாக, "அம்மா" என்ற சொல் ஒரு பாசப் பந்தத்தையும், பரிவையும்,
பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது. கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்: தமிழ் மொழி கவிதை, இலக்கியம், உரை, உரையாடல்
எனப் பல்வேறு வடிவங்களில் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகிறது. பழந்தமிழ் சங்க
இலக்கியங்கள் மனித வாழ்க்கையின் உணர்ச்சிகளை எவ்வளவு நுட்பமாக எடுத்துரைக்கின்றன
என்பதை நம் அனைவரும் அறிந்ததே. இன்றைய காலத்திலும் தமிழ் மொழியின் சொற்கள்
வழியாக கல்வி, அறிவியல், அரசியல்,
கலை போன்ற துறைகளில் கருத்துகளை தெளிவாக பகிர முடிகிறது. நம் வாழ்வில் தமிழ்: நம்மிடையே நடக்கும் அன்றாட உரையாடல்கள் முதல், பள்ளிக்
கல்வி, பொதுக்கூட்ட உரைகள், ஊடகச்
செய்திகள் என அனைத்திலும் தமிழின் பங்கு அதிகம். ஒருவரின் உள்ளுணர்ச்சியையும்,
ஆழமான சிந்தனைகளையும், சமூகப் பார்வைகளையும்
தமிழ் வழியே எளிதில் பகிர முடிகிறது. முடிவுரை: எண்ணங்களையும் கருத்துகளையும்
சிக்கலின்றி எடுத்துரைக்க வல்லமை பெற்றது தமிழ் மொழி. இத்தகைய அற்புதமான
தாய்மொழி நமக்கிருப்பது பெருமை. ஆகவே, தமிழின் வளமும்
அழகும் குன்றாதபடி நாம் அதைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த
தலைமுறைக்கும் எளிய வெளிப்பாட்டின் சாதனமாகக் கற்றுத்தர வேண்டும். ஆ. முன்னுரை : நீர்
இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக
எடுத்துரைத்துள்ளார். அவருடைய கருத்துகளைக் காண்போம். வான் சிறப்பு : உணவு
உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார் மழையே ஆதாரம் : மழை
நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை
ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச் செய்கிறது. நீரே ஆதாரம் : நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும்
உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும்
நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில்
ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. முடிவுரை: தண்ணீரின்
முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். |
8 |
||
44 அ. |
மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு
மதிப்பெண் வழங்குக. |
8 |
||
ஆ. |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து
கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி
விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு,
கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக்
கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர்
இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க
ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
||
45 அ, |
வரவேற்பு
மடல் இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம் சோறு
போடும்" "கந்தையானாலும்
கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி"
என்னும் பழமொழிக்கு ஏற்ப
எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப்
பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள்
பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம்
பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து
சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர்
அவர்களே! நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.
நன்றி.
இவண், இரா மணிமாறன், (மாணவர் செயலர்)
ஆ. மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு
மதிப்பெண் வழங்குக.
|
8 |
||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி