9.ஆம் வகுப்பு தமிழ்
அஞ்சலகப் படிவங்கள்
பயிற்சி வினாக்கள்:
1. இளமுருகன் என்பவர் திருத்தணி கிளை அஞ்சலகத்தில் உள்ள தனது அஞசலகச் சேமிப்புக் கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாயை எடுக்க விரும்புகிறார். அவருக்கு உரிய படிவத்தை நிரப்பி உதவுக. (படிவம்-1)
2. எழில் நிலா என்பவர் திருச்செந்தூர் கிளை அஞ்சலகத்தில் உள்ள தனது அஞசலகச் சேமிப்புக் கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாயை எடுக்க விரும்புகிறார். தன்னால் வர இயலாததால் தனது தந்தையாகிய பிறைசூடன் என்பவரிடம், படிவத்தில் கையொப்பம் இட்டு கொடுத்தனுப்பியுள்ளார். அவருக்கு உரிய படிவத்தை நிரப்பி உதவுக. (படிவம்-1)
3. கார்த்திகேயன் என்பவர் திருப்பரங்குன்றம் கிளை அஞ்சலகத்தில் உள்ள தனது அஞசலகச் சேமிப்புக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாயை செலுத்த விரும்புகிறார். அவருக்கு உரிய படிவத்தை நிரப்பி உதவுக. (படிவம்-2)
4. நிறைமதி என்பவர் பழனி கிளை அஞ்சலகத்தில் உள்ள தனது அஞசலகச் சேமிப்புக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாயை செலுத்த விரும்புகிறார்.. தன்னால் வர இயலாததால் தனது தந்தையாகிய கந்தன் என்பவரிடம், படிவத்தில் கையொப்பம் இட்டு கொடுத்தனுப்பியுள்ளார். அவருக்கு உரிய படிவத்தை நிரப்பி உதவுக. (படிவம்-2)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி