9.ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் இயல்-4

9.ஆம் வகுப்புதமிழ்  அலகுத்தேர்வு  இயல்-4

பலவுள் தெரிக.                                                                                                               9×1=9

1. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?

அ) நஞ்சை நிலம்  ஆ) களர் நிலம்  இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்

2. கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சரியான குழுவினைக் கண்டறிக

அ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், பண்டித ரமாபாய்

ஆ) நப்பசலையார், பொன்முடியார். நீலாம்பிகை அம்மையார். ஔவையார்

இ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், ஒளவையார்

ஈ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்

3. 'இரு' என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?

அ) பட்டம் இருக்கிறது  ஆ) பட்டம் செய்திருக்கிறேன் இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது.

4. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்

ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி

அ)  அ மட்டும் சரி  ஆ) ,ஆ இரண்டும் சரி  இ). அ. ஆ இரண்டும் தவறு   ஈ) ஆ மட்டும் சரி

5. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

   இரண்டறிவதுவே அதனொடு நாவே     இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்  ஆ) தொடு உணர்வு  இ) கேட்டல்   ஈ) காணல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம் அந்நி லத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல

புதல்ர்ள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள்

திருந்திகழனி அங்கே

நல்லறிவு உடையமக்கள்

                     விளைவது நவில வோநான்!

 6. இப்பாடல் இடம் பெற்ற நூல்  

அ) உயிர்வகை ஆ) குடும்பவிளக்கு இ) முக்கூடற்பள்ளு ஈ) மணிமேகலை

7. திருந்திய கழனி -  இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு

அ) தெரிநிலை வினையெச்சம் ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்

இ) குறிப்புப் பெயரெச்சம் ஈ) குறிப்பு வினையெச்சம்

8. பாடலில் இடம்பெற்ற சீர் மோனைச் சொற்களைத் தேர்ந்தெடு

) கல்வியை- நல்லறிவு  ) கல்வி – களர்நிலம்  ) இல்லாத–பெண்கள் ) புல்விளை - கல்வியை

9. இப்பாடலின் ஆசிரியர்  ) பாரதிதாசன்) பாரதியார்) கவிமணி ) நாமக்கல் கவிஞர்

குறுவினா                                                                                                                        7×2=14

10. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

11. துணைவினைகளின் பண்புகள் இரண்டினை எழுதுக.

12. மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

13. பகுபத உறுப்பிலக்கணம் தருக: விளைதல்

14. பிழை நீக்கி எழுதுக : அ) மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும் ஆ) நல்ல தமிழுக்கு எழுதுவோம்

15. கலைச்சொல் தருக:  . Social Reformer  . Saline Soil

சிறுவினா (வினா எண்: 20 கட்டாய வினா)                                                                            3×3=9

16. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

17. சமைப்பது தாழ்வா? இன்பம்

    சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?    ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

18. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக்குறிப்பிடுக.

19.  ”ஒன்றறி வதுவே” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

விரிவான விடையளி                                                                                                2×5=10

20. குடும்பவிளக்கு நூலில்தலைவி பேச்சில்வெளிப்படும் பெண்கல்விக்கான  கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

21. . உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப் படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.   (அல்லது)

மொழி பெயர்க்க:

Akbar said, "How many crows are there in this city?"

Without even a moment's thought, Birbal replied "There are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

"How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere".

Akbar was pleased very much by Birbal's wit.

22. நெடுவினா                                                                                                              1×8=8

23. . நீங்கள்அறிந்தசாதனைப்பெண்கள்குறித்தசெய்திகளைவிவரிக்க.                         (அல்லது)

. நூலகம், நூல்கள்ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில்வெளிப்படுகின்ற கருத்துகள்யாவை?

வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்


 

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை