தமிழ் திறனறி தேர்வு 2025
10.ஆம் வகுப்பு தமிழ் வினாவங்கிகள்
இயல்-1
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா
இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா
2) மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும்
ஆ) பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்
இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்
3) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ) இலையும் சருகும் ஆ)தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ)சருகும் சண்டும்
4) வேர்க்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டைஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை
அ) குலைவகை ஆ) மணிவகை
இ) கொழுந்துவகை ஈ) இலைவகை
5)கேட்டவர்மகிழப்பாடியபாடல் இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும்,
வினையாலணையும் பெயரும்முறையே
அ)பாடிய;கேட்டவர் ஆ)பாடல்;பாடிய
இ)கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
6)தமிழ்
அரசாண்ட கண்டம்….
அ) ஆசியா ஆ)குமரி இ)ஐரோப்பா ஈ) ஆப்பிரிக்கா
7)தென்னன்
என்று குறிப்பிடப்பட்ட மன்னன்
அ) பாண்டியன் ஆ)சேரன் இ)சோழன் ஈ)பல்லவன்
8) முன்னும்
என்ற சொல்லின் பொருள்…..
அ) முந்தும் ஆ) முன்னர் இ) முன்னரும் ஈ) பொங்கியெழும்
9) சாகும்போதும்
தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……
அ) பாரதியார் ஆ) ஜி.யு.போப் இ) க.சச்சிதானந்தன் ஈ) பாவலரேறு
10) பாவலரேறு
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
அ)துரை.செந்தில் ஆ)துரை.வேலு இ)துரை.செல்வம் ஈ)துரை.மாணிக்கம்
11)அன்னை
மொழியே…என்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத்தொகுப்பு
அ) மொழிவாழ்த்து ஆ) தேன்மொழி
இ) கனிச்சாறு ஈ) தமிழ்ச்சிட்டு
12) தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்
அ) திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆ) கனிச்சாறு இ) பாவியக்கொத்து
13)நற்கணக்கே எனக்குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு
அ) பதினெண்மேற்கணக்கு ஆ)பதினெண்கீழ்க்கணக்கு
இ) நற்றிணை ஈ) சங்க இலக்கியம்
14)பாவலரேறு பாப்பத்தே எனக் குறிப்பிடும் நூல்
அ) கனிச்சாறு ஆ) பத்துப்பாட்டு இ) எட்டுத்தொகை ஈ) பாப்பா பாட்டு
15) தும்பி என்பதன் பொருள்
அ) வண்டு ஆ) தம்பி இ) ஈசல் ஈ) கரையான்
16)உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள-இவ்வடியில் காணும் நயம்
அ)மோனை ஆ)எதுகை இ)முரண் ஈ)இயைபு
17)திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எனும் நூலை இயற்றியவர்
அ)வீரமாமுனிவர் ஆ)ஜி.யு.போப்
இ)கிருட்டிணப்பிள்ளை ஈ)கால்டுவெல்
18) நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி….
அ) தாள் ஆ) தண்டு இ) கோல் ஈ) தூறு
19) மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்………
அ) இளங்குமரனார் ஆ) தேவநேயப்பாவாணர்
இ) தாமோதரனார் ஈ) சுந்தரனார்
20)சிவியல் என்பது……ஐக் குறிக்கும்
அ) சுருங்கிய காய் ஆ) சுருங்கிய பழம்
இ) சூட்டினால் பழுத்த பிஞ்சு ஈ) அழுகிய பழம்
21) மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது
அ) அரும்பு ஆ) வீ இ) மலர் ஈ) செம்மல்
22) திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்
அ) அல்லூர் ஆ) வள்ளூர் இ) நல்லூர் ஈ) நெல்லூர்
23)கொழுந்தாடை
என்பது கரும்பினது-----
அ) இடைப்பகுதி ஆ) அடிப்பகுதி
இ) கணுப்பகுதி ஈ) நுனிப்பகுதி
24) செம்மல்
என்பது பூவின் ………….நிலையக் குறிக்கும்
அ) தோற்ற ஆ) மலர்ந்த இ) வாடின ஈ) கீழே
விழுந்த
25) இமைகளை
மூடியபடி தமிழை எழுதும் ஆற்றல் பெற்றவர்……..
அ) பாவாணர் ஆ) திரு.வி.க இ) பேரறிஞர்
அண்ணா ஈ) பெரியார்
26) திருவள்ளுவர்
தவச்சாலையை நிறுவியவர்
அ) இரா.இளங்குமரனார் ஆ)பாவாணர் இ)திரு.வி.க ஈ)குன்றக்குடி
அடிகளார்
27) தனித்தமிழ்
இயக்கம் என்ற நூலை இயற்றியவர்……….
அ) திரு.வி.க ஆ) மறைமலையடிகள்
இ) இரா.இளங்குமரனார் ஈ) குன்றக்குடியடிகளார்
28) பலாப்பிஞ்சைக்
குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ) பிஞ்சு ஆ) வடு இ) மூசு ஈ) கவ்வை
29) கச்சல்
என்பது பின்வருவனவற்றுள் எது?
அ) மாம்பிஞ்சு ஆ) எள்பிஞ்சு
இ) இளம்பாக்கு ஈ) வாழைப்பிஞ்சு
30)இளம்பயிர்
வகையைக் குறிக்கும் சொல் தொகுப்பைத் தேர்ந்தெடு
அ) கூலம்,பயறு,கடலை ஆ) வடு,மூசு,குரும்பை
இ) தளிர்.முறி,குருத்து ஈ) நாற்று,கன்று.மடலி
31) பன்மொழிப்புலவர்
எனப் போற்றப்படுபவர்
அ) ம.பொ.சிவஞானம் ஆ) கா.அப்பாதுரையார்
இ) சந்தக்கவிமணி ஈ) பெருஞ்சித்திரனார்
32) சம்பா
நெல்லின் உள்வகைகள்…..
அ) 90 ஆ) 70 இ) 80 ஈ) 60
33) உலகத்
தமிழ்க்கழத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்……….
அ) தேவநேயப்பாவாணர் ஆ) திரு.வி.க
இ) சச்சிதானந்தன் ஈ) கா.அப்பாதுரையார்
34) கார்டிலா
எனும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு…….
அ) 1254 ஆ) 1654 இ) 1554 ஈ) 1754
35) மேலைநாட்டு
எழுத்துருவில் அச்சேறிய முதல் இந்தியமொழி
அ) சமற்கிருதம் ஆ)தமிழ் இ) இந்தி ஈ) பஞ்சாபி
36) நாடும்,மொழியும் நமதிரு கண்கள் எனப்பாடியவர்………..
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) தமிழழகனார்
37) குச்சியின்
பிரிவு………..எனப்படும்.
அ)போத்து ஆ)குச்சி இ)இணுக்கு ஈ) சினை.
38) பொருத்துக:
1) தட்டை
- அ) கரும்பின் அடி
2) கழி
- ஆ) புளி,வேம்பு
முதலியவற்றின் அடி
3) கழை - இ) கம்பு,சோளம் முதலியவற்றின்
அடி
4) அடி
- ஈ) மூங்கிலின் அடி
அ) 1-ஆ,2-அ,3-ஈ,4-இ ஆ) 1-இ,2-அ,3-ஈ,4-ஆ
இ) 1-ஈ,2-இ,3-அ,4-ஆ
ஈ) 1-இ,2-அ,3ஆ,4-ஈ
39) சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
அ) தேவநேயப் பாவாணர் ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
40) போர்த்துகீசு நாட்டின் தலைநகர்……
அ) லெபனான் ஆ) லிசுபன் இ) கெய்ரோ ஈ) ஹராரே
41) தமிழ்ச்சொல்வளம் எனும் கட்டுரை இடம் பெற்ற நூல்………
அ) சொல்லாய்வுக்கட்டுரைகள் ஆ) தேவநேயம்
இ) மொழிமரபு ஈ) ஆய்வியல்
நெறிமுறைகள்
42) கார்டிலா என்னும் நூல் எந்த வரிவடிவில் அச்சிடப்பட்டது?
அ) பிரெய்லி ஆ) பிரான்சு இ) ஜெர்மன் ஈ) ரோமன்
43) முத்தையும்,அமிழ்தையும் தருவது……
அ) சங்கு ஆ) சிப்பி இ) கடல் ஈ) முத்து
44)தமிழ்மொழியின் அணிகலன்களாகக் கருதப்படுபவை………
அ) ஐஞ்சிறுங்காப்பியங்கள் ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) நீதிநூல்கள் ஈ) இலக்கியங்கள்
45) கடல், சங்கினை எதனால் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) கப்பல் ஆ) சங்கு இ) தோணி ஈ) அலை
46) மெத்தவணிகலன் என்னும் சொல்லைப் பிரித்தெழுதும் முறை
அ) மெத்த+அணிகலன் ஆ) மெத்த+வணிகலன்
இ) மெத்த+வணி+கலன் ஈ) மெத்தவணி+கலன்
47) ஒரு சொல்லோ,தொடரோ இருபொருள்பட வருவது………அணியாகும்
அ) தன்மையணி ஆ) இரட்டுறமொழிதலணி
இ) நிரல்நிரையணி ஈ) தீவக அணி
48) இரட்டுற மொழிதலணி………எனவும் அழைக்கப் படுகிறது.
அ) வேற்றுமையணி ஆ) இயல்பு நவிற்சியணி
இ) சிலேடையணி ஈ) தீவக அணி
49) சந்தக்கவிமணி எனப் போற்றப்படுபவர்…….
அ) தேசிகவினாயகம் ஆ) வெ.இராமலிங்கம் இ) சுரதா
ஈ) தமிழழகனார்
50) தமிழழகனாரின் இயற்பெயர்…………
அ) சண்முகசுந்தரம் ஆ) சோமசுந்தரம்
இ) சர்வர் சுந்தரம் ஈ) அழகுசுந்தரம்
51) சார்பெழுத்து வகைகள்…….
அ) 30 ஆ) 10 இ) 12 ஈ) 18
52) பேச்சுவழக்கில் உணர்வுக்கும்,இனிய ஓசைக்கும்………பயன்படுகிறது.
அ) உயிர்மெய் ஆ) ஆய்தம்
இ) அளபெடை ஈ) குற்றியலுகரம்
53) அளபெடுத்தல் என்ற சொல்லின் பொருள்
அ) அளவெடுத்தல் ஆ) அளவிடுதல்
இ) குறைந்தொலித்தல் ஈ) நீண்டொலித்தல்
அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6
55) கூற்று1:
செய்யுளில் ஓசையை நிறைவு செய்ய குறிலெழுத்துகள் அளபெடுக்கும்.
கூற்று2:
அளபெடயைக் குறிக்க அவற்றின் பின்னால் குறிலெழுத்துகள் எழுதப் பெறும்.
அ) கூற்று 1 சரி,2 தவறு ஆ) கூற்று 1 தவறு,2 சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
56) உறாஅர்க்கு உறுநோய் என்பது……அளபெடை
அ) சொல்லிசையளபெடை ஆ) இன்னிசையளபெடை
இ) இசைநிறையளபெடை ஈ) ஒற்றளபெடை
57) செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது……..
அ) செய்யுளிசையளபெடை ஆ) இசைநிறையளபெடை
இ) இன்னிசையளபெடை ஈ) சொல்லிசையளபடை
58) கெடுப்பதூஉம்,படாஅ பறை என்பவற்றில் வரும் அளபெடைகள் முறையே
அ) செய்யுளிசை,இன்னிசை ஆ) இன்னிசை,செய்யுளிசை
இ) சொல்லிசை,இசைநிறை ஈ) இன்னிசை,குரலிசை
59)பெயர்ச்சொல் எச்சமாகத் திரிந்து அளபெடுத்த சொல்லைக் கண்டறிக.
அ) எஃஃகிலங்கிய ஆ) ஓஒதல்
இ) எடுப்பதூஉம் ஈ) உரனசைஇ
60) ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகள்
அ) 10 ஆ) 18 இ) 6 ஈ) 12
61) மொழி…….வகைப்படும்.
அ) 4 ஆ) 5 இ) 3 ஈ) 6
62) தனிமொழியாக அமைந்த இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) நான் யார்?,சொல் ஆ) நான்,சொல்
இ)பல,பலகை
ஈ) எட்டு,தாமரை
63) எழிலன் படித்தான் என்பது…….மொழி
அ) தொடர்மொழி ஆ)தனிமொழி
இ) பொதுமொழி ஈ) மூவகைமொழி
64) "எட்டு" என்ற தனிமொழியே எள்+து
எனப்பிரிந்து பொருள் தருவது……
அ) மூவகைமொழி ஆ) தனிமொழி
இ) தொடர்மொழி ஈ) பொதுமொழி
65) ஈதல் என்ற தொழிற்பெயரின் வினையடி
அ) ஈகை ஆ) ஈ இ) தல் ஈ) ஈக
66) விகுதிபெற்ற தொழிற்பெயரைக் கண்டறிக.
அ)தட்டு ஆ)கேடு இ)நடை ஈ)சூடு
67) விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது……..
அ) முதனிலைத்தொழிற்பெயர் ஆ) முதனிலைத்திரிந்ததொழிற்பெயர்
இ)பகுதி ஈ) வினையாலணையும்பெயர்.
68) நடவாமை என்பது………தொழிற்பெயர்
அ) வினையாலணையும்பெயர் ஆ) எதிர்மறை
இ) முதனிலை ஈ) முதனிலை திரிந்த
69) மூவிடங்களிலும்,முக்காலத்திலும் வரும் பெயர்…….
அ) சினைப்பெயர் ஆ) தொழிற்பெயர்
இ) காலப்பெயர் ஈ) வினையாலணையும்பெயர்
70) வினையே,பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது……..
அ)
தொழிற்பெயர் ஆ)
வினையாலணையும்பெயர்
இ) சினைப்பெயர் ஈ) காலப்பெயர்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி