10 TH STD TAMIL TWO MARKS QUESTION BANK

  10.ஆம் வகுப்பு தமிழ் 

இருமதிப்பெண் வினாவங்கி

10.ஆம் வகுப்பு தமிழ் - வினாவங்கி (2 மதிப்பெண் வினாக்கள்)


இயல் – 1

2. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

3. "கொள்வோர் கொள்சு: குரைப்போர் குரைக்க!

     உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

பாடல் அடிகளில் உள்ள மோனை. எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

4. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக

இயல் – 2

5. நமக்கு உயிர் காற்று

   காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம். இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக

6. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

7. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

இயல்-3

8. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

9. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

10. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

13. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

                i.    உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்- நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

               ii.    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை - உயிரினும் ஓம்பப் படும்

              iii.    ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது -. ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்.

14. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

இயல்-4

15. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான்யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

16. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

இயல்-5

17. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

18. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்'

காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

19. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

20. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.    (பெரிய கத்தி,இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்)

இயல்-6

21. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

22. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

23. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

இயல்-7

24. குறிப்பு வரைக அவையம்.

25. காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' - உவமை உணர்த்தும் கருத்து யாது?

26. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

27. பழங்களை விடவும் நசுங்கிப்போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?

விடைக்கேற்ற வினாவினை அமைக்க (பயிற்சி வினாக்கள்)

1. ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் பாவாணர்.

2. உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை.

3. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.

4. பிள்ளை தமிழ் இரண்டு வகைப்படும்.

5. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

6. 1948 ஆகஸ்டு எட்டாம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க புனித நாளாகும்.

7. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர் மார்ஷல் ஏ நேசமணி ஆவார்.

8. இராஜாஜி அவர்கள் தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியை துறந்தார்.

9. உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.

10. இளங்கோவடிகள் சேர மரபைச் சார்ந்தவர்.

மனப்பாடத்திருக்குறள்

தொடங்கும் (அ) முடியும் குறள்:

1.     எப்பொருள்----------------அறிவு

2.    பல்லார்-------------------விடல்

3.    பண் என்னாம்---------------கண்

4.    அருமை-------------------தரும்

5.    முயற்சி-------------------விடும்

6.    செயற்கை-----------------செயல்

7.    பொருளல்ல---------------பொருள்

8.    குன்றேறி-----------------வினை

9.    குற்றம்-------------------உலகு

10.  இன்மையின்----------------தது        


இயல் – 1

1. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

இயல் – 2

2. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றான்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

3. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக

இயல்-3

4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

5. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

இயல்-4

6. அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம் தருக

7. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

8. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக

இயல்-5

9. அயற்கூற்றாக எழுதுக.

    "கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.

10. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

                                                        இயல்-6

12. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

13. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

14. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சோன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் -ம.பொ.சி.

இயல்-7

15. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

16. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

17. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை,மந்தை,கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

புல்

பழம்

ஆடு

18. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

19. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

20. எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

எறும்புந்தன் கையால் எண் சாண்

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

                                                                          21. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

) இயற்கைசெயற்கை

 

) கொடு - கோடு

 

) கொள் - கோள்

 

) சிறு - சீறு

 

) தான் - தாம்

 

) விதி - வீதி

 

22. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

 

பழைமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

 

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

 

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

 

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

 

23. வண்ணமிட்ட  தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

1. அன்புச்செல்வன், திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.

3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

4. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடு கின்றன.

24. பழமொழியை நிறைவு செய்க :-                                    

1

உப்பில்லாப்

 

2.

ஒரு பானை

 

3

உப்பிட்டவரை

 

4

விருந்தும்

 

5

அளவுக்கு

 

25.இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                                  

1

சிலை - சீலை

 

2.

தொடு - தோடு

 

3

மடு - மாடு

 

4

மலை - மாலை

 

5

வளி - வாளி

 

6

விடு - வீடு

 

26. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.      

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

 

27. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.                                                                                                                                        

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ----- யாவும், அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ---- நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச்----தடை செய்யப்பட்டுள்ளது உதவுகிறது. செய்த தவறுகளைச்----            திருந்த உதவுகிறது.  (சுட்டல், சுடுதல்).

3. காற்றின் மெல்லிய ----- பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ----பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

4.  பசுமையான----- ஐக் ------ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

5. பொதுவாழ்வில்-----கூடாது. ----- இல் அவரை மிஞ்ச, ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

28. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-

1. வானம் ------ தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் -------

3. -------மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ----- ----  வெயில் பரவிக்கிடக்கிறது.

5. வெயில் அலையாதே;உடல் ------ விடும்.

29. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, பார்ப்பவர், விருது, தோற்பவர்,கவிழும்,விருந்து

1. விரட்டாதீர்கள்பறவைக்கு-----        வெட்டாதீர்கள்மனிதருக்கு அவை தரும் -----

2. காலை ஒளியினில் மலரிதழ் -----       சோலைப் பூவினில் வண்டினம் -----

3. மலைமுகட்டில் மேகம் -----அதைப்      பார்க்கும் மனங்கள் செல்லத் ------

4. வாழ்க்கையில் ------ மீண்டும் வெல்வர்- இதைத்    தத்துவமாய் ------ முயற்சி மேற்கொள்வர்.

5. கைதட்டலே கவிஞர்க்கு ---- - அவையோரின்        ஆர்வமே அவருக்கு ------

30. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக

            மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.

தொகைச்சொற்கள்

பிரித்து எழுதுக

தமிழ் எண்ணுரு

மூவேந்தர்

 

 

நாற்றிசை

 

 

முத்தமிழ்

 

 

இருதிணை

 

 

முப்பால்

 

 

ஐந்திணை

 

 

நானிலம்

 

 

அறுசுவை

 

 

பத்துப்பாட்டு

 

 

எட்டுத்தொகை

 

 

                                                                                                                   

31. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-

1. நூலின் பயன் படித்தல் எனில் , கல்வியின் பயன்----

2. விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை  - ----

3. கல் சிலை ஆகுமெனில்,நெல் -----  ஆகும்.

4. குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து  -----

5. மீன் இருப்பது நீரில் ; தேன் இருப்பது -----

32. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-

மனக்கோட்டை      

 

அள்ளி இறைத்தல்

 

கண்ணும் கருத்தும்

 

ஆறப்போடுதல்

 

33. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-

தாமரை இலை நீர்போல

 

மழைமுகம் காணாப் பயிர்போல

 

கண்ணினைக் காக்கும் இமைபோல

 

சிலை மேல் எழுத்து போல

 

34. பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

            சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

35. கலைச்சொல் அறிவோம் :

     1.          Vowel –

     2.          Consonant –

     3.          Homograph –

     4.          Monolingual –

     5.          Conversation –

     6.          Discussion –

     7.          Storm -

     8.          Land Breeze -

     9.          Tornado –

 10.          Sea Breeze -

 11.          Tempest –

 12.          Whirlwind –

 13.          Hospitality –

 14.          Wealth –

 15.          Baby shower -

 16.          House warming –

 17.          Feast  -

 18.          Translation -

   19.          Culture –

   20.          Human Resource –

   21.          Transfer –

   22.          Multi media –

   23.          PLAY WRIGHT –

   24.          SCREENPLAY –  

   25.          STORYTELLER –

   26.          AESTHETICS –

   27.          Agreement -

   28.          Discourse -

   29.          Monarchy -

   30.          Border -

   31.        Rebellion –

 32.        Happiness –

 33.        Gratuity

 34.        Sceptor

 35.        Truth

 36.        Charity -

36. பகுபத உறுப்பிலக்கணம் தருக


1. கிளர்ந்த

 

2. உரைத்த

 

3.வருக

 

4. பதிந்து

 

5. தணிந்தது

 

6. அமர்ந்தான்

 

7. கொண்ட

 

8. அறியேன்

 

9. ஒலித்து

15 வினாடிகள் காத்திருக்கவும்
You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை