10 TH STD TAMIL SLIP TEST QUESTION PAPER UNIT-4

 

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-1 (இயல்-4)

பலவுள் தெரிக.                                                                                                                     5×1=5

1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில்படைக்கப்பட்டது?

அ) திருக்குறன் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

2. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் 

இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி  ஆ) பால் வழுவமைதி  இ) திணை வழுவமைதி  ) கால வழுவமைதி

4. இரவிந்திரநாத தாகூர் ---மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --=மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ) ஆங்கில வங்காளம் ஆ) வங்காள, ஆங்கில  இ) வங்காள, தெலுங்கு  ) தெலுங்கு, ஆங்கில

5. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?          அ) யாம் ஆ) நீவிர்  ) அவர்  ) நாம்

குறுவினா.                                                                                                                            4×2=8

6. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான்யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

7. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.       8. அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம் தருக

9. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

நெடுவினா                                                                                                                       1×7=7

1. தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் அறிவியல் கருத்துகள் பிற துறைக் கருத்துகள் தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-2 (இயல்-4)

சிறுவினா                                                                                                4×3=12                                                                                                   

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்? விளக்கம் தருக

2. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

3. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்' என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தான்.    இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

4. ”தண்டலை” , ”வெய்யோன்…” எனத்தொடங்கும் பாடல்களை அடிபிறழாமல் எழுதுக

குறுவினா                                                                                                                         

5. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

   . கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.   ஆ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

6. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க

அ.  பசுமையான----- ஐக் ------ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

ஆ.பொதுவாழ்வில்-----கூடாது. ----- இல் அவரை மிஞ்ச, ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

7.அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது.அக்கா புறப்படும்போது,அம்மா வழியனுப்பியது.(வழுவை வழாநிலையாகமாற்றுக)

8. கலைச்சொல் அறிவோம்

அ. Translation  ஆ. Culture  இ. Human Resource   ஈ. Transfer

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-3 (இயல்-4)

5 மதிப்பெண் வினா                                                                                                                 

1. அ. 10, எழில் நகர், காமராசர் தெரு, வளர்புரம், இராணிப்பேட்டை மாவட்டம். என்ற முகவரியில் வசித்து வரும் எழில்முருகனின் மகள் தமிழ்க்கனா அவ்வூரில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில்உறுப்பினராக விரும்புகிறார்.தேர்வர் தன்னை தமிழ்க்கனாவாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக

ஆ. பள்ளியிலும் வீட்டிலும் உனது செயல்களைப் பட்டியலிடுக

2. அ. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                                     1×10=10

3. கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-4 (இயல்-4)

5 மதிப்பெண் வினா                                                                                     2×5=10

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

2. மொழிபெயர்க்க

Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.

நெடுவினா                                                                                                                    1×10=10

3. தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் அறிவியல் கருத்துகள் பிற துறைக் கருத்துகள் தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

 



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை